நந்தினி ரா
எண்ணற்ற சிறையிலிருந்து தப்பியவன் நான்,
இன்று ஓர் சிறையில் சிக்கியவன் தான்.
என்னைத் தொலைத்தேன்,
தேடிக் காத்தேன்,
காணாமல் போனேன்,
கண்ணீர் தழுவினேன்.
மரணமே கூட அழகென்றேன்,
மெளன மொழியில் .
அந்த மொழியில் காதலும் உண்டு,
கனவுகளும் உண்டு,
கவலையும் உண்டு.
காரணமே இல்லாமல் கஷ்டத்தில் ஆழ்ந்தேன்,
என் கைக்கடிகாரத்தின் மெளனத்தில்,
ஆயிரம் நபர்களின் அமைதியில் கலங்கிடாதசிலரின்
மனம் கூட கலங்கும் கைக்கடிகாரத்தின் மெளனத்தில்.
எண்ணற்ற ஆசைகளையும்
கனவுகளையும் சுமப்பவன் நான்
இருப்பினும் ஒரு கூண்டுக்குள் சிக்கிக்கொண்டவன் நான் இதில் இருந்து
தப்பிக்க வழி தேடினேன்;
ஒரு நாள் எனக்கு வாய்ப்பும் கிடைத்தது
எல்லையற்ற தூரம் வானத்தைத்தாண்டி பறந்தேன்
சந்தோஷமாக ஆனாலும்
மீண்டும் சிக்கினேன் இன்னொரு
கூண்டில் என் கனவுகள் எல்லாம்
காணாமல் போய்விடுமோ
என்று எண்ணினேன்.

