Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

பாதம் தொட்டு தொட்டு வணங்கி பாதம் தேய்ந்தது முருகா! மாதம் எத்தனை போனது என்று எண்ணிப் பார்த்தது இல்லை! நாதம் போல இனிக்குது முருகா மனதில் உந்தன் பெயர்! பாடம் சொல்லிக் கொடுத்த முருகா என்றும் எனது குருவே.

Read More

திருப்பரங்குன்றம் பல்லவி குன்று தோறும் இருந்தாலும் முருகா! திருப்பரங்குன்றம் போல் ஆகுமா முருகா! (குன்று) அனுப்பல்லவி யானை முகன் தம்பியே முருகா! தெய்வானையை மணம் புரிந்தாய் முருகா!(குன்று) சரணம் சிவனின் மைந்தனே முருகா இந்திரன் மருமகனே முருகா மணக்கோலம் கொண்ட முருகா மயிலேறி வந்தவனே முருகா! (குன்று) சரணம் மரங்கள் பூக்கும் குன்று மந்திகள் தாவும் மரங்கள் மழலை மகிழ்வர் கண்டு மனதெல்லாம் நிறைந்த முருகா. (குன்று )

Read More

கமலம் கதிரவன் கண்டு மலரும் கந்தனைக் கண்டும் மலரும்! குமரி முக்கடல் சங்கமம் போல முத்தமிழ் சங்கமம் நீயே! தமருக சத்தத்தில் உமையவள் மகிழ்வாள் தமிழொலி சங்கீதம் நீயே! சமர்ப்பணம் செய்வேன் சமைத்ததை எல்லாம் சங்கரன் மகனே ஏற்பாய்.

Read More

நச்சு செய்யும் தீமைகளை வேலால் நலிதல் செய்யும் முருகா! அச்சு கோர்த்த எழுத்தில் எல்லாம் உயிராய் இருக்கும் முருகா! தச்சன் செய்யும் பொருளில் எல்லாம் கருத்தாய் இருக்கும் முருகா!பிச்சன் மகனே இட்ட பணியை இதமாய் செய்ய அருள்வாய்.

Read More

ஆத்திசூடி கதைகள் 26-இலவம் பஞ்சிற்றுயில் வீட்டிற்கு முன் வாசல் பக்கம் சின்ன செடி வளர்ந்து இருந்தது. அதன் இலை ஐந்து இதழாக விரிந்து பார்க்க அழகாக இருந்தது. அந்த இலையின் அழகை கண்டு அந்தச் செடியை வளர்த்தார்கள். அந்த செடி மரமாக வளர்ந்து கூடை போல் நிழல் கொடுத்தது. அதன் கீழ் சிறுவர்கள், சிறுமிகள் விளையாடினர். பூத்து, காய் காய்த்தது. அதன் காய் நீளமாகத் தொங்கியது.காய் முத்தி வெடித்து பஞ்சு பறந்தது. அப்போது பறந்து வந்த பஞ்சை எடுத்து ஊதி விளையாடினார்கள் சிறுவர்கள். முற்றிய காய்களை எடுத்து வைத்துக் கொண்டாள் அந்த வீட்டுப் பெண்மணி. அக்கா இதில் என்ன செய்யலாம் என்று ஆர்வமாக கேட்டார்கள் சிறுவர்கள். இது இலவம் பஞ்சு இதில் பொம்மை செய்யலாம். தலைகாணி தைக்கலாம், இலவம் பஞ்சு மெத்தையில் தூங்கினால் சுகமாகவும் நல்லா தூக்கமும் வரும் என்றாள் மணி. மேலும், சொன்னாள்… ஔவை பாட்டி அந்தக் காலத்திலேயே “இலவம்…

Read More

உச்சி குளிர்ந்து உலாவும் போது பக்தர் மகிழ்ந்து பார்ப்பர்! குச்சி கோல் எடுத்து ஆடி பாடி காவடி எடுப்பர்! தச்சன் செய்த தேரில் பவனிவர பரவசப்பட்டு வடம் இழுப்பர்! மச்சு நிறைந்து மகசூல் தர மனதார வேண்டியே இழப்பர்.

Read More

பட்டாடை கட்டி ராஜனாக நின்றாலும் காவி தரித்தாலும் முருகா! உட்சொல் கேட்க வந்தேன் முருகா உன்னருள் புரிந்தேன் முருகா! கட்டாயம் நீ வரவேண்டும் முருகா காணும் பொருளில் நிறைந்து! தட்டான் தங்கத்தேர் செய்து விட்டான் அமர்ந்து உலாவர வாமுருகா.

Read More

தேவர் சந்திரன் எழுதும் தொடர்கதை உடைந்த கப்பல் சிந்தனையுடன் அந்த சிறிய கப்பலை நோக்கி படகை செலுத்தினார் இன்ஸ்பெக்டர் ரவி. சந்தேகப்பட்டது சரியாகத்தான் இருக்கிறது என்று நினைத்தார்… சந்தேகம் இல்லாமல் பார்த்துக் கொண்டு மடக்கி பிடித்து விட வேண்டும்… இதில் மட்டும் வெற்றி பெற்று விட்டால் என்று இன்ஸ்பெக்டர் எண்ணிக் கொண்டே இருக்கும்போது.. அதே நேரத்தில் உடைந்த கப்பலில் உள்பகுதியில் இருந்து மொட்டை தலையன் டைகர் கடகட என்று ஓடிவந்தான் மேல் தளத்திற்கு. பாஸ்… பாஸ் சிக்னல் தெரிகிறது என்றான் டைகர். அப்படியா சந்தோசம். இரு நான் பார்க்கிறேன் என்றான் மற்றொருவன். பைனாகுலர் மூலம் பார்த்தான் மினுக்.. மினுக்கு என்று வெளிச்சம் தெரிகிறது. பதில் கொடுங்கள்.“ எஸ் பாஸ்” சரக்கு எவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டது என்று எண்ணினான்… டைகர் கீழே இறங்கி வந்தான். தனி அறையில் அங்குள்ள ஒயர்லஸ் கருவியை இயக்கினான். ஹலோ…. ஹலோ… ஹியர் டைகர் சார். என்ன செய்தி…

Read More

புவனம் காக்கும் நாயகனே முருகா! புவியில் வேறுபாடு உண்டா! கவனமாக கருத்தாக உயிர் காத்து கருணை காட்டும் முருகா! பவள வாயால் புன்சிரிப்பு காட்டி பக்தர்குறை போக்கும் முருகா! தவம் உன் அருள் கிடைப்பது வரம் உன்னைப் பார்ப்பது.

Read More

பன்னாட்டு நிகழ்வில் “கவிதை புதையல்” விருது பெற்ற கவிதைகள் செந்தமிழ்வாணி  டாக்டர் ச. மல்லிகா எழுதும் ஹைக்கூ கவிதைகள்                  ஆலமரம் கூட்டுக் குடும்பம் கிளைகள் தாங்கி ஆலமரம்.              புகை சுருள் சுருளாய் புகை ரயில் என்ஜின் விடுவதல்ல வாலிபப் புகை.            கோலம் கோலம் போடாத வாசல் விதவை.             சிலந்தி தோல்வியில் முயற்சி அறுபட  அறுபட பின்னியது சிலந்தி வலை.            முயற்சி மலர்களில் தேன் கூட்டு முயற்சி தேனாடை.                குளிர் மார்கழி குளிர் மனதெல்லாம் நிறைவு கோயில் பஜனை.           மழைநீர் அள்ளி ஊற்றுகிறாள்  அம்மா கப்பல் விடும் குழந்தை வறுமையில் இனிமை.             விரதம் மௌன  விரதம் சித்தர்களின் விளையாட்டு.          ஆவி ஆவி அடித்தது கையில்…. கொப்பளம்.          பிற நலன் மரம் வைத்தவன் மனிதன் கனி கொடுத்தது மரம்உண்டது பறவை.                             மலரும்.

Read More