பன்னாட்டு நிகழ்வில் “கவிதை புதையல்” விருது பெற்ற கவிதைகள் செந்தமிழ்வாணி டாக்டர் ச. மல்லிகா எழுதும் ஹைக்கூ கவிதைகள்
ஆலமரம்
கூட்டுக் குடும்பம்
கிளைகள் தாங்கி
ஆலமரம்.
புகை
சுருள் சுருளாய் புகை
ரயில் என்ஜின் விடுவதல்ல
வாலிபப் புகை.
கோலம்
கோலம் போடாத
வாசல்
விதவை.
சிலந்தி
தோல்வியில் முயற்சி
அறுபட அறுபட பின்னியது
சிலந்தி வலை.
முயற்சி
மலர்களில் தேன்
கூட்டு முயற்சி
தேனாடை.
குளிர்
மார்கழி குளிர்
மனதெல்லாம் நிறைவு
கோயில் பஜனை.
மழைநீர்
அள்ளி ஊற்றுகிறாள் அம்மா
கப்பல் விடும் குழந்தை
வறுமையில் இனிமை.
விரதம்
மௌன விரதம்
சித்தர்களின்
விளையாட்டு.
ஆவி
ஆவி அடித்தது
கையில்….
கொப்பளம்.
பிற நலன்
மரம் வைத்தவன் மனிதன்
கனி கொடுத்தது மரம்
உண்டது பறவை.
மலரும்.
