சந்தன அபிஷேகம் செய்து- வந்தோம் இளநீர் அபிஷேகம் செய்து- வந்தோம் தயிர் அபிஷேகம் செய்து -வந்தோம் தரணி காக்க செய்து வந்தோம்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
பால் அபிஷேகம் செய்து- வந்தோம் பன்னீர் அபிஷேகம் செய்து -வந்தோம் தேன் அபிஷேகம் செய்து- வந்தோம் பஞ்சா அமிர்தம் படைக்கின்றோம்
11. மீன்ஆசைப் பட்டு மோசம் போனது தூண்டிலில் மீன்.12. தானம்மண்ணில் பிறந்துமண்ணில் மக்காததுஉடல் தானம். 13. புகை மாசுபடுகிறது இயந்திரம் புகை பிடிப்பதால். 14. சிறுவர் தொழில்பட்டாசு பதபதப்பாய் வெடிக்காமல் போனது சிறுவனின் வியர்வை. 15. வரவு சிரிக்கும் பூக்கள் சங்கீதப் பறவைகள் காலை வரவு. 16. ஆர்வம் அதிர்ஷ்டம் கானல்நீர் நெருங்க விலகும் ஆர்வமே சக்தி. 17. மழைசூழ்நிலை நிர்ப்பந்தம் ஆற்றல் சூழ்ச்சியின் நிர்பந்தம் குழப்பம் வானத்து மழை. 18.தொட்டில் குழந்தைகள்ளிப் பாலுக்கு தப்பிய பெண்சிசு தொட்டில் குழந்தை.19. கனவுநீண்ட கனவு நிண்டு போனது உறக்கம் களைந்ததால். 20. அலைகாற்று அடித்ததால் கரையை தொட்டது கடல் அலை. மலரும்.
3-முகலிங்க மூர்த்தி அனைத்து புவனங்களுக்கும் ஆதாரமாய் நின்று படைத்தல், நிலைநிறுத்தி காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் முதலிய ஐந்து தொழில்களையும் நடத்து கின்றபடியால்…. பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் பேதமே முகலிங்கம் என பெயர் பெறுகிறது. ஆட்யம், அநாட்டியம், சுரோட்டியம், சர்வ சமம் என நான்கு வகைப்படும்.ஆட்யம்: என்பது ஆயிரத்து ஒரு லிங்கம் உடையது. சுரோட்டியம்: நூற்றி எட்டு லிங்கம் உடையது. அநாட்டியம்: திருமுகங்களை பெறாது. சர்வசமம் ஐந்து முக வேதங்களைப் பெறும். தற்புருசம், அகோர, வாமதேவ, முகங்கள் சத்யோசாத முகங்கள் சர்வ சமமாகும் இந்த ஐந்து மூர்த்திகள்…. பராசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, இச்சா சக்தி, ஆதிசக்தி என்னும் ஐவகை சக்திகளை கொண்டு முறையே…. சிவ சதாக்கியம், கன்மசாதாக்கியம், கர்த்திரு சாதக்கியம், மூர்த்தி சாதாக்கியம், அமூர்த்தி சாதாக்கியங்களால் பஞ்ச கிருத்தியங்களை நடத்துகின்றன. பிரம்மன், விஷ்ணு, சிவன் முதலான ஐவர் உள்ளும் பிரிக்க முடியாதபடி இறைவன் நிறைந்து இருக்கின்றார்.…
கூப்பிட்ட குரலுக்கு ஓடி -வருவான் காப்பிட்டு கந்தன் காத்தருள்வான் பூபோட்டு உன்னை வணங்கி- வந்தால் தாயாட்டம் தாங்கி தோள்கொடுப்பான்
வாடி நிற்கும் பக்தர்க்கு- முருகன் கோடி நலம் தரும்பாலன் நாடி வரும் பக்தருக்கு- முருகன் தேடி வந்து அருள்வான்.
மனம் விரும்பி காடு- சென்றாய் வனம் சென்று வள்ளிகண்டாய் தனம் வாங்கி குறிசொன்னாள்- வள்ளி தினம் நினைத்து மனம் புரிந்தாள்.
பால் வடியும் முகம் -முருகா வேல் வெற்றி கொடுக்கும் மால் மகளை மணந்தாய் -முருகா தோல் மயிலில் அமர்ந்தாய்
கார் மேகம் மழை- கொடுக்கும் மார்கழி மாதம் பனிபெய்யும் பார்த்த சாரதி மருமகன்-நீ பார் முழுவதும் புகழிருக்கும்.
மலர் தூவி மனம்- மகிழும் வலம் வந்து வணங்கிநிற்கும் நலம் யாவும் உன்- அருளால் குலம் காக்கும் குடிக்காக்கும்.
