Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

31-கூர் வேல் உடையவன் நீயே!         கூடாநட்பு தடுப்பவன் நீயே! சீர் அணி வரியும் நீயே!          சீரான வாழ்வும் நீயே! வீர் கொண்டு எழுந்தவன் நீயே !     விண்ணவர் காத்தவன் நீயே !தீர்க்க தரிசனம் தருபவன் நீயே !       தீமை அழிப்பவன் நீயே!

Read More

455-மனதை வென்றவன் ஆனந்தமாய் வாழ்வான் அன்பும் அமைதியும் இருப்பதால்.456- உதவிக்கரம் நீண்டது உள்ளம் நிறைந்தது உலகுக்கு கற்றுக் கொடுத்தது சுனாமி. 457-அன்பான பெற்றோர் அடித்தளம் அமைத்தவர் ஆதரவு சொற்கள் நேசம். 458-தடைக்கல் எல்லாம் தடங்கலாய் மாற தாழ்வு மனம் மேடாய். 459-வானில் பறக்கும் பறவை சுதந்திரமாய் சுதந்திர வாழ்க்கைப் பயணம்.460- தகுதி உள்ளவன் தலை நிமிர்வான் பகுத்துப் பார்ப்பது  நெறி.

Read More

30-பன்னிரு விழி கொண்டவன் நீயே!    பாசம் வைத்தவன் நீயே!ஆன்மா அடையும் இடம் நீயே!     ஆசை துறந்தவன் நீயே! அன்னம் இடும் கரம் நீயே!     ஆக்க சக்தியும் நீயே! இன்னிசை தரும் ஒலி நீயே!     இன்ப ராகம் நீயே!

Read More

449-நாவடக்கம் மனவடக்கம் மனித வளம் புரிந்தவன் புதையல் பெற்றவன்.450- பணத்தை அறிவிலி கூட சம்பாதிப்பான் பயனாய் செய்பவன் அறிவாளி.451- தைரியம் எப்போதும் முயற்சி  வேலையில் ஒவ்வொரு செயலும் வளர்ச்சி.452- பொருளின் மதிப்பு தெரியாமல் இழந்து தெரிந்த போது கனமாய். 453-விளக்கெரிய தூண்டுகோல் வேண்டும் வாழ்க்கை துலங்க வழிகாட்டி வேண்டும். 454-பொறாமைப் பொறி கொழுந்து விட்டு எரியும்போது மன அழுத்தம் தாண்டவம் ஆடும்.

Read More

29-பன்னிரு கரம் கொண்டவன் நீயே!        பக்தரை காப்பவன் நீயே! மீன் விழியாள் மகன் நீயே!       மின்னும் மகன் நீயே! முன் வினை தீர்ப்பவன் நீயே!        முக்தி கொடுப்பவன் நீயே !துன்பம் துரத்தும் தூயவன் நீயே !        துணிவு தருபவன் நீயே!

Read More

443- கடமையை செய்பவன் கண் அயர்வான். கடமை மறந்தவன் விழித்து. 444-நடை பிணமாய் அலைபவன் நம்பிக்கை அற்றவன் சாதிக்கிறவன் கையை நம்பி.445- பட்டை தீட்டிய வைரமே ஜொலிக்கும் பட்டதுன்பமே ஜெயிக்கும். 446-துரதிஷ்டத்தை துரத்தும் எளிய வழி துன்பத்தை ஏற்று நடப்பது.447- பேச்சு நிற்கும் செயல் நடக்கும் இரண்டும் சேர்ந்தால் உயர்த்தும். 448-இன்ப முயற்சி துன்பத்தின் பக்கம் இலட்சிய முயற்சி இன்பம்.

Read More

28-ஆறு முகம்கொண்டவன் நீயே!          ஆதரவு கரமும் நீயே! தூறு செய்து வென்றவன் நீயே !          தூய்மை மனத்தான் நீயே !குறு நடை கொண்டவன் நீயே !          குறிஞ்சி தலைவன் நீயே !வீறு கொண்டு எழுந்தவன் நீயே! வீனர்களை அழித்தவன் நீயே!

Read More

437-தேடல் என்பது சாலை ஆனால் தெளிவு என்பது தேர்.438-அறிந்து புரிந்து உணர்ந்து செல்ல ஞானம் வந்து உட்புகும்.439-செடிக்கு வேர் முக்கியம் போல் கனவுகள் கடமைக்கு வேர்.440- கடந்த காலம் கனவு காலம் வாழும் காலம் வசந்தம்.441- கற்றுக் கொள்வது பாடம் மட்டுமல்ல மனதிருப்தியே நிலையான கற்றல்.442- வாங்கி வாங்கி சேர்த்தல் மகிழ்ச்சியல்ல கொடைப் பண்பே மகிழ்ச்சி.

Read More

2-நீங்கள் கர்ப்பிணியா? எங்கோ பிறந்து! எங்கோ வளர்ந்த ஒரு பெண்ணுக்கும், ஆணுக்கும் “திருமணம்” என்ற பந்தத்தை உருவாக்கி உறவு கொள்ள செய்கிறார்கள்.  வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சூழ்நிலையில் வளர்ந்த இருவரும் “தாம்பத்தியம்” என்ற உறவால் இணைகிறார்கள். அவர்கள் தாய், தந்தையரை மறந்து. உற்றார் உறவுகளை மறந்து ஏன் உலகத்தையே மறந்து உனக்கு நான் எனக்கு நீ என்ற நிலையில். தங்களையும் மறந்து இன்புற்று இருக்கும் காலகட்டத்தில் ஆணின் விந்துக்கள் பெண்ணின் கருப்பையில் போய் சேர்வதால் ஒரு பெண் கர்ப்பம் அடைகிறாள். சில பெண்களுக்கு தான் கர்ப்பவதியான சில நாட்களிலே தெரிந்துவிடும். மாதவிடாய் ஒழுங்காக ஆகாமல் தள்ளி… தள்ளி ஆகும். சிலரால் உடனே தெரிந்து கொள்ள முடியாது. அவ்வாறு உள்ள பெண்கள் உடனே, டாக்டரிடம் சென்று தான் கர்ப்பம் அடைந்து இருக்கிறோமா? இல்லையா? என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யாமல் அசட்டையாக விட்டுவிட்டால் எத்தனை மாதம் என்பதை சொல்வது கஷ்டமாகிவிடும்.…

Read More

431-கனிந்த கனி கையில் விழுவதில்லை முயற்சிப் பவனுக்கே கிட்டும். 432-உண்பார் ஊரார்புறம் பேசி மகிழ்வார் நம் துன்பத்தில் இல்லார். 433-பூக்கின்ற பூவெல்லாம் காயவதில்லை பிறக்கின்ற மனிதர் எல்லாம் வாழ்வது இல்லை.434- வீணான வார்த்தைகளை உதிர்த்து தூவாமல் நம்பிக்கை விதைகளை விதை.435-நமக்குள் இருக்கும் ஆக்கும் சக்தி ஊக்கசக்தி உழைப்பை நம்பி. 436-பிரச்சனை என்ற பிரசவ வலி நிற்பதில்லை நீண்ட நேரம்.

Read More