Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

வெறுப்பை நீக்கி வா- பகை         நட்பாய் மாறும் நீ நல்லது நினைத்தால் கெட்டதும்        நன்மையாய் மாறும் உலகம் உனைப் பரிசளிக்கும்        அன்பே நாணயம் அதைக் கொண்டு செயல் செய்து       வாழ்வை உயர்வாக்கு.            எழுத்து இசைக்கலை மணி சி.எம்.பாலகிருஷ்ணன். 

Read More

துன்பம் ஒரு பாடம் அதை        உணர்ந்தால் போதும் பாடம் முடிந்த பிறகு நீ       உயரத்தான் வேண்டும் அருள் என்பது வெளிப்படும்        வெளிச்சம் அல்ல அறிந்த மனதிற்கு தெரியும்         என் சுவை.              எழுத்துஇசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.  

Read More

ஆலமரம் 21- பறவைகள் பலவிதம் திறமைகள் பலவிதம் செய்வதே தனித்திறன். 22- முதிர்ந்த நெல்மணிகள் தலை குனிந்து பதர்மணிகள் நிமிர்ந்து கூத்தாடும் அடக்கமுடன் சான்றோர். 23- பனை தன்னையே தானமாக்குகிறது எட்டி மரம் எதற்கும் உதவாது உதவியாய் மனிதன். 24- சுதந்திரமாய் பட்டம் பாதியில் அருந்து சுதந்திரக் கொடி பத்திரமாய் கம்பத்தில் கட்டுப்பாடே சுதந்திரம்.25- பிஞ்சில் வளையும் செடி மரமானால் முறியும் இளமையில் கல்.26- மேக கூட்டம் வானில் மின்னல் இடி இடையில் மழையின் வருகை. 27- அன்பே கடவுள் அவன் தாள் பணிவதே பக்தி.28- மாடித்தோட்டம் இலை மறைவில் பிரசவம் பூனைக்குட்டி.29- கார் மேகம் கண்டு தோகை விரித்தாடும் மயில் தென்னை கீற்று ஆடியது. 30- நீர் சுமந்த மேகம் கருமேகமாய் நகர்ந்தது சுமை தூக்கும் தொழிலாளி. மலரும்.

Read More

விரைவில் வந்தது நிரந்தரமல்ல            மகனே மெதுவாக வந்தது பலன் தரும்            பெருமை காத்திருப்பதே தாங்கும் நம்பிக்கையின்             அழகு காலம் என் கரத்தில் உனக்கு நல்லதையே             தருவேன்.            எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.   

Read More

சாதனை என்பது தியானத்தின் தோழன் வெற்றி என்பது தவம் செய்யும் பழம் கண்கள் மூடி கேட்டிடு உன் உள்ளத்தின் மௌனம் கருணையாய் நான் பேசுவேன் கேட்கும் செயல் போதும். எழுத்து இசை கலைமணி சி.எம்.பாலகிருஷ்ணன்.

Read More

37-கூடிப் பிரியேல் பாலுவும், சீனவும் நல்ல நண்பர்கள். படித்து வேலைக்குப் போன போது ஏற்பட்ட நட்பு. இருவர் நட்பும் குடும்ப நட்பாக நாளும் வளர்ந்தது. இன்ப,துன்பங்களிலும் கலந்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்த நட்பு… இருவரும் எதிர்பார்க்காத மாற்றம் ஏற்பட்டது.பாலு சென்னைக்கு மாற்றல் ஆகி போனபின்… சீனு மைசூர் சென்று விட்டான். அதன் பிறகு சீனிவைப் பற்றி எந்த தகவலும் பாலுவிற்கு தெரியவில்லை. பத்து ஆண்டுகள் கடந்த போது சீனு இருக்கும் இடம் பாலுவிற்கு தெரிய வந்தது. தனது நண்பனைப் பார்க்க மைசூர் சென்று விட்டான் பாலு. சீனுவும் நல்ல நிலையில் இருந்தான் தன் பழைய நண்பனைக் கண்ட சந்தோசத்தில் தன் மனைவி, குழந்தைகளுக்கு அறிமுகம் செய்து வைத்தான். நல்ல நட்பு என்றும் ஆண்டுகள் கடந்தாலும் பிரியாது என்பதற்கு பாலுவும்,சீனுவும் எடுத்துக்காட்டு. புலவர் ஔவையாரும் இதைத்தான் “கூடிப் பிரியேல்” என்று சொல்லிச் சென்று இருக்கிறார்.

Read More

கொஞ்சம் மௌனம் வாழ்க்கைக்குத்            தேவை உள்ளம் பேசும் சத்தம் தான்           உண்மை அறிவு வெளிச் சொற்கள் ஓசை உள்ளத்தின்          நீதி தானே! முருகன் வசிப்பது அமைதியின்            நடுவே.                       எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

ஏழாவது சுகாசன மூர்த்தி வெள்ளி மலையின் உச்சியில் ஒளி வீசும் நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில், அதன் மையத்தில் மகாதேவன் வீற்றிருக்கிறார். அவரைச் சுற்றி பிரம்மா, விஷ்ணு, தேவர்கள் இருக்கிறார்கள்.அடுத்த வரிசையில் பதினோரு கோடி உருத்திரர்களும், இந்திரர், திக்குப்பாலர்களும், அட்ட வசுக்களும் இருக்கிறார்கள். அடுத்த வரிசையில் முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருக்கிறார்கள்.அடுத்த வரிசையில் நாற்பத்தியெண்ணாயிரம் முனிவர்களும், நவசித்தர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிவ தியானத்திலேயே இருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் “சிவ சிவ” என்ற ஒளியே கேட்கிறது. வேதங்கள் மகா தேவரின் பெருமையைக் கூறிக் கொண்டிருக்கின்றன. நாரதர் மகா தேவனின் புகழ் பாடி கொண்டு இருக்கிறார்.எண்ணில் அடங்காதோர் மகாதேவன் முன் நின்று வரங்கள் கேட்டு வணங்குகின்றனர். அவரவர்கள் விரும்பின வரங்கள் கேட்டு வணங்குகின்றனர். அவரவர்கள் விரும்பின வரங்களைக் கொடுத்து மகிழ்ச்சியுடன் தத்தம் இடங்களுக்குச் செல்ல மகாதேவன் ஆணை இடுகிறார். அனைவரும் தத்தம் இருப்பிடம் சென்ற பின்பு அருள் வடிவாகிய…

Read More

உலகம் சொல்வது போல் வாழ வேண்டாம் குழந்தாய் உண்மைதான் உறைவிடம்- அதில் இருக்க மாட்டாயா? மெய்நெறி கையில் உண்டு -அருள் வழி தெரியும் நம்பிக்கையுடன் நிலை கொள்- நான் உனக்கே துணை. எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More

அன்பு தான் அடிப்படை எல்லா          உயிர்களுக்கும் அதன் மேல் அருள் ஊற்றாய் இருப்பேன்             நான் என்றும் தீமையால் அசையாதே தூய நெஞ்சமாய்              வா திருமறை சொல்லும் வழி தான்               தீர்வு           எழுத்து இசை கலைமணி சி.எம். பாலகிருஷ்ணன்.

Read More