ஆத்திசூடி கதைகள்
38-கெடுப்ப தொழி
உமாவும், லதாவும் ஒரே பள்ளியில் படிக்கும் மாணவிகள்.
உமா படிப்பு, விளையாட்டு என எல்லாவற்றிலும் ஆர்வம் உள்ள மாணவி.
லதா மிகவும் சோம்பல் கொண்டவள். படி, இதைச் செய் என சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்.
எதையும் தன் முயற்சி கொண்டு செய்ய மாட்டாள்.
பத்தாம் வகுப்பில் முதல் மார்க்கு வாங்கி பலரின் பாராட்டுக்களைப் பெற்று, பரிசுகளும் பெற்றாள் உமா.
இதைக் கண்டு பொறாமை பட்ட லதாவிற்கு கோபம்… கோபமாக வந்தது.
உமா காப்பி அடித்து முதல் மார்க்கு வாங்கியதாக எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு இருந்தாள் லதா.
இதைக் கேட்ட பள்ளி ஆசிரியர் “கெடுப்ப தொழி” என்று சொல்லி சத்தம் போட்டார் லதாவை.
புலவர் ஔவையாரும் இப்படிப் பட்டவர்களைப் பார்த்து தான் “கெடுப்ப தொழி” என்று சொல்லிச் சென்று உள்ளார்.

