வரும் மானம் காப்பது வருமானம் தரம் உயர்த்தி வாழவழி வகுப்பது திரும்பத் திரும்ப உழைக்க வைப்பது திருமகள் மகிழ வருவது வருமானம் வருமானம் வந்தால் தான் திருமணம் திருமண வாழ்வு சிறக்க வைப்பது வருமானம் தருவது ஆளுமை திரன் வறுமை போகச் செய்வதும் வருமானம்.சிறு தொழில் பெரிய வணிகம் கைத்தொழில் படித்து பல பணி குறுஞ் செய்தி பிரிவு கணினி பத்திரிக்கை வானொலி தொலைக் காட்சி சிறு வயல் குளம் கட்டிடம் செருப்பு தையல் முடி திருத்தம் பீறுதல் மரம் பிளந்து செய்யும் கதவு சன்னல் சிலை கலைப்பொருள். எண்ணில் அடங்கா வேலை செய்வது எண்ணிய படி வருவாய் ஈட்டவேதிண்ணமாய் திடமாய் இருக்க வைப்பது திரவியம் சேர்த்து அறம் செய்ய எண்ணம் நிறைவேற்ற ஈடில்லா சேவை எளிதாய் தர்மம் செய்ய உதவுவது கண்ணியம் காக்க வைப்பது கடமை காரியம் ஆற்ற உதவுவது வருமானம்.
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லைவருந்தி உழைத்த உழைப்பு பணம் வருவதில் நிதிநிலை அறிவது திரம் கருத்து ஒன்றி கணக்குப் பார்த்து வகுத்துப் பிரித்து செலவு செய்து திருப்பணிக்கு ஒரு தொகை ஒதுக்கி முதுமை அற வாழ்விற்கு ஒதுக்கி…. உண்ணும் உணவை அமிர்தாய் நினைத்து உலக வாழ்வில் சிரத்தைக் கொண்டு மண்ணில் வாழும்கால நிலைக்கு ஏற்ப கணக்குப் பார்த்து செலவு செய்து கண்ணாய் கருத்தாய் திட்டம் தீட்டி திரவியம் சிறிது சேமிப்பில் ஒதுக்கி கண்ணியமாக வாழும் வாழ்க்கை கண்டு கடவுள் கூட ஆசி தருவார். அரசு தீட்டும் திட்டம் நாட்டிற்கு கணவன் மனைவி திட்டம் வீட்டிற்கு வரவை மிஞ்சி செலவு செய்தால் கடன் பட்டு துன்பக் கடலில் அரசு திட்டத்தை மக்கள் கடைபிடித்தால் நாடும் வீடும் சொர்க்க மாகும் வரவு அறிந்து செலவு செய்தால் வாழும் காலம் வசந்தம் ஆகும்.
இந்தியாவின் சுவாசக் காற்று சுதந்திரம் சுதந்திர மூச்சுக் காற்றில் கல்வி மந்தையுடன் மாடு மேய்த்த சிறுவர்கள் மதிய உணவுடன் கல்வியும் பெற்றனர் சிந்தையில் அறிவு மிகுந்த மாணவர்கள் சிகரம் தொடும் சாதனை மக்கள் முந்தைய வரலாற்றை கணினியில் ஏற்றி முகவரி பதிக்கும் பாமர மக்கள்நிந்தை பொறுத்து நினைவு நல்லதாகி நிமிர்ந்து பணி செய்யும் பாமரர்கள்.எல்லோரும் ஒரு குல மக்களாய் உறவு கொண்டு உரிமை பெற்றுநல்லோர் கூறும் நல்லறிவு சிந்தனையை நயமுடன் ஏற்று செயலது செய்து வல்லோர் ஆகி அருஞ் செயலில் வளமைப் படுத்தும் பாமர மக்கள் கல்லார் இல்லா நாடு ஆக்க களம் இறங்கிய பாமர மக்கள் பல்லோர் போற்றும் பொது உடமையில் சுகம் காண்பது சுதந்திர நாட்டில்.
சங்கம் வளர்த்த பாண்டிய நாட்டில் தூய தமிழ் எழுத்து சங்கத் தமிழ் வளர்ந்த நாடு சங்கரி மீனாட்சி பிறந்த மதுரையில் சகல கலைகளும் கற்று ஆண்டு சங்கரன் கை பிடித்த மதுரையில் இயல் இசை நாடகம் வளர்த்து சங்கே முழங்கு என முழங்கும் அன்னைத் தமிழ் வணங்கிப் பணிவோம். எண்ணத்தில் விளைச்சலே எழுத்தின் வடிவம் ஏற்றமிக வாழ்விற்கு அதுவே ஆதாரம் வண்ணத்தின் கலவைகளே காட்சி வடிவம் காலத்தின் மாட்சிகள் ஆட்சி செய்யும் திண்ணத்தின் திறவு கோலே செயல்பாடு தீரத்தின் வெளிப்பாடே வெற்றி வகுக்கும் விண்ணதிர்வு மழை வரவின் வெளிப்பாடு மண்ணில் உயிர் வளம் காக்கவே புண்ணியம் செய்தவனே கடவுளாக உயர்கிறான் புவிதனில் பிறந்து மக்கள் நலம்காக்க. மரம் பல மண்ணில் வளர்ந்தாலும் கருங்காலி தேக்கு சந்தனமே பயன்பாட்டில் கரம் இரண்டு மனிதருக்கு இருந்தாலும் கரம்கூப்பி வணங்கத் தகுந்தவர் குறிப்பேட்டில் தரம் இல்லா எழுத்து எல்லாம் தண்ணீரில் எழுதியது போல் கரைந்து உரம்…
காலை கதிரவன் உதிப்பது நமக்காக காற்றும் மலையும் உலக நன்மைக்காக மாலை மறையும் ஒளியின் நிறமும் வான வில்லின் ஏழு வண்ணமும் சாலை மரமும் செடியும் கொடியும் மலையும் குன்றும் குறிஞ்சி முருகனும் பாலை மணலும் ஓடை நிழலும் பயணம் செய்பவர் மகிழும் இயற்கை. பஞ்சம் இல்லாமல் உலகம் வாழ பறக்கும் பறவை குரலில் இசை நஞ்சை பயிரின் பசுமை புரட்சி மக்கள் மகிழ்ந்து பாடும் இசை மஞ்சள் மா பலா கனிகள் மரங்கள் கொடுக்கும் கொடை உள்ளம் மஞ்சையில் அமர்ந்த முருகன் மலையும் அருள் கொடுக்கும் கொடை உள்ளம். ஒன்றுடன் ஒன்று இணைந்து வாழ இயற்கை கொடுத்த இனிய கொடை நன்கு புரிந்து நாமும் வாழ இயன்ற அளவு செயற்கை தவிர்ப்போம் கன்று போல் துள்ளி விளையாடி காணும் காட்சிகள் கண்டு ரசித்து இன்று போல் என்றும் வாழ இயற்கை உடன் இணைந்து வாழ்வோம்.
தஞ்சாவூர் பொம்மை அசைந்து ஆடும் தருவாய் இசைப் பாட்டு வளரும் தர்க்கம் புலவரின் புலமை வெளிப்படும் தலைமக்கள் ரசித்து இன்புற்ற தஞ்சையில். கவிஞர் எழுத்தாளர் ஆய்வாளர் கூடி கருத்துக்கள் பரிமாறும் அட்சய பாத்திரம் கற்கண்டாய் இனிக்கும் தமிழ் சுவை கண்டு கேட்டு மகிழ்ந்து சுவைப்போம்.ஓதுவார் ஓதவும் ஆடுவார் ஆடியதும் ஓவியம் உயிர்பெற்ற சிற்பமாய் செதுக்கியதும் ஓமக்குண்டம் வளர்த்த வேள்வி செய்து ஓர்மை மனதுடன் ஆலயம் எழுப்பியதும். சோழர் காலத்து வரலாற்று நினைவுகள் சோர்வில்லா உழைப்பின் ஆயிரம் ஆண்டுகள்சோழ நாடு சோறுடைய வளநாடு சோதனை வென்று சாதித்த படைநாடு. சரஸ்வதி மகால் நூலகம் பயன்பாடு சரஸ்வதி கரங்களின் வீணை செய்தல் சந்தன வாசனையாய் எங்கும் பரவும் சத்துவ குணம் கொண்ட ராஜராஜன் புகழும்… ஆயிரம் ஆண்டை தாண்டியும் அரசன் ஆளுமை மெய் சிலிர்க்க வைக்கிறது ஆக்கம் தரும் தஞ்சை கோயில் ஆட்சி செய்த பெருமை சொல்லும்.
தள்ளாத வயதிலும் கவிபாட வரும்போது தளிர்வு உடலுக்கு துடிப்பு மனதிற்கு அள்ளல் செய்தாலும் அழியாத செல்வம் அயர்வுற்று படுத்தாலும் எழுதவைக்கும் உணர்வு உள்ளல் உவகை தரும் உறுதிக்கு உழைக்க நிலைக்க நீண்டு வாழ கள்ளமை இல்லா கனிவு தரும் கற்கும் தமிழ் அன்று வேறேது? அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே அச்சம் துறந்தது ஆற்றல் பிறந்தது எச்சமாய் பாரதியின் கனவு பெண்கள் களம் காணும் காலமும் இதுவன்றோ!துச்சமாய் துயர்செய்த வெள்ளையனை எதிர்த்து கப்பலோட்டி களம் கண்டவர் வ. உ. சி மிச்சமாய் கல்வி கற்று இலண்டனில் காலம் போற்றும் துறைகளில் தமிழன். கணினியில் தொன்மை நூல்கள் படிக்க தொல்காப்பியம் கம்ப ராமாயணம் குறள் பணி செய்யும் வாழ்வியலுக்கு காக்க பகுத்தறிவு தரும் பொக்கிச காப்பியங்கள் வணிகம் செய்து வெளிநாடு சென்றனர் தமிழ் இணைந்து சங்கத் தமிழில் கணினி இணைப்பில் உலகத் தமிழாய் இளமை கொண்டு நிமிர்ந்த தமிழன்.
இறைவன் நம் முன் ஏன் வரவிவரவில்லைல்லை? என்பது சிலரது கேள்வியாக இருக்கிறது. “இறைவன் என்பவன் யார்?” எல்லாம் தெரிந்தவன், வல்லவன், எங்கும் நிறைந்தவன், ஆக்கமும் அவனே, அழிப்பதும் அவனே, அப்படிப்பட்ட கடவுள் நம்முடன் வந்தால் திருப்பி அனுப்புவோமா ?மாட்டோம். அதுதான் உண்மை! கண்ணுக்குத் தெரியாமல் இருக்கும் கடவுள் மீதுதான் மரியாதையும், மதிப்பும் அதிகமாகிறது. ஒரு மந்திரி நமது ஊருக்கு வந்தால் நாம் என்ன செய்கிறோம். எங்களுக்கு தண்ணீர் வேண்டும், மின்சாரம் வேண்டும், சாலை வேண்டும் என்றெல்லாம் கூறி மனு கொடுத்து அவரை உரிய நேரத்திற்குப் போக விடமாட்டோம். அப்படிப்பட்ட நாம் இறைவனே! வந்து விட்டால் !சும்மா விடுவோமா? சொர்க்கத்தை இங்கே கொண்டு வந்து விடுங்கள். இல்லையென்றால் உங்களைப் போக விடமாட்டோம். என்று கூட கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை! ஆகவே ,நம் முன் இறைவன் வரமாட்டான்.” எத்தனையோ மகான்கள் இறைவனின் தரிசனத்தைப் பெற்றார்கள் நமக்கு இறைவனின் தரிசனம் கிடைக்காததற்கு காரணம்?” நம் முன்னோர்கள்…
இறைவன் படைப்பில் எத்தனையோ அற்புதங்களும் அதிசயங்களும் அடங்கி உள்ளன. அது போல் மனிதர்களும் எவ்வளவோ! விதமானவர்களாக இருக்கிறார்கள். சிலர் பணக்காரர்களாக இருக்கிறார்கள். வேறு சிலரோ ஏழைகளாக இருக்கிறார்கள். படித்தவர், படிக்காதவர், கருப்பர், சிவப்பர் என்ற நிற வேறுபாடு. பற்று உள்ளவர், பற்றற்றவர் இப்படி ஆண்டவனின் படைப்பின் ரகசியம் எதுவாக இருக்கும்? இப்படி…… எத்தனையோ! மாறுபாடுகள் இருந்தாலும். ஒன்றில் மட்டும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். அது தான் “ஆசை!” இந்த ஆசை இருப்பதால் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ‘நான்’ என்ற அகந்தை உருவாகி…. தனக்கு உண்பதில் ஆத்ம சுகம் என்பவர் உண்டு. வேறு சிலர் சங்கீதத்தில் சுகம் காண்பவர் உண்டு. சிலர் உறங்குவதிலும், வேறு சிலர் தேக சுகம் காண்பதிலும் ஆத்ம திருப்தி காண்பார்கள். இவைகள் அனைத்தும் சில காலங்களுக்கு இன்பமாக இருக்குமே தவிர நிலையான இன்பம் அல்ல. அவ்வாறு நாம் நினைப்பது தவறு. ஐம்புலன்களையும் அடக்கி ஆள்வதில் தான் சுகமே இருக்கிறது. உலகம் இன்பங்களில்…
நாம் கருணை நிறைந்தவராய் இருக்க வேண்டும். மற்றவர்களுடைய கஷ்டங்களைப் போக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும். நம் கண் முன்னால் எத்தனையோ பேர் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய கஷ்டத்தை போக்கக் கூடிய சக்தி நமக்கு இருந்தால் நாம் அவர்களுடைய கஷ்டத்தைப் போக்க வேண்டும். நாம் சுயநலக்காரர்களாக இருந்து விட்டால் நம்மால் இந்த உலகிற்கு என்ன? தான் பயன். கருணை காட்டாத மனிதர்களை விட பிராணிகள் எவ்வளவோ மேல் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.பிராணிகளால் மனிதர்களுக்கு எவ்வளவோ உதவிகள் கிடைக்கின்றன. பிராணிகள் இறந்த பின் அவற்றின் தோல் மனிதர்களுக்குப் பயன் படுகிறது. மனிதர்கள் இறந்து விட்டால் அவர்களின் தோல் ஒன்றுக்குமே பயன்படாது. ஆகவே, நமது வாழ்க்கை பயனுள்ளதாக அமைய வேண்டுமானால்…. நாம் மற்றவர்களுக்கு கருணை காட்ட வேண்டும். மனிதர்களுக்குத்தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும் கூட நான் செய்தேன். என்று அகங்காரம் வரும். அந்த அகங்காரம் நிறைய தவறுகளுக்கு காரணமாக அமைந்துவிடும். எனக்கு எல்லாம்…