• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»அட்டாட்ட  விக்கிரக லீலை 
ஆன்மீகம்

அட்டாட்ட  விக்கிரக லீலை 

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாAugust 18, 2025No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

12 -இடபாந்திக மூர்த்தி

உபதேச காண்டம்

ஆறு உலாஞ்சடை  அண்ணலைச்
சேர்வனேல்
ஈறி லாதுஎன்றும் உய்த்திரு வேன்எனாத் தேறி யேஅறத் தெய்வஞ்  செங்கணாள்
ஏறு தாயொ ரெழிலுருக்  கொண்டதே

ஏற்றின் மேனிகொண்டு ஈசன்முன் ஏகியே
போற்றி யானின்று பொன்றிடுந் தன்மையை மாற்றி  யாற்றல்
வழங்கிநிற்கு ஊர்தியாம் பேற்றை ஏற்குப் பிரான்அருள் என்னவே

இறத்தலை இன்மையும் யான மாய்த்தனைப்  பொறுத்திடுந் தன்மையும் பொருவில் வன்மையும் உறைந்திடும் அன்பும்வா லுணர்வும் நல்கியே அறத்தனிக் கடவுளுக்கு அண்ணல் கூறுவான்

முதல்அயல் இடைகடை மொழிய நின்றிடும் சதுர்வித யுகந்தனில் தருமத் தின்திறம்
இதுஎன நான்குமூன்று இரண்டொன்றாகிய பலமுறை யூன்றியே படியிற் சேறிமேல்.

சதுர்யுகங்கள்
இரண்டாயிரம் கொண்டது பிரம்மனுக்கு ஓர் நாள். அத்தகைய நாட்களாகிய நூறு ஆண்டுகள் கொண்டது பிரம்மனுக்கு ஓர் ஆயுட்காலம் ஆகும்.

இதுவே, திருமாலுக்கு ஒரு நாள் ஆகும். காலம் இக்கணக்கின்படி திருமாலுக்கு நூறு வயது கழிந்தால் உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களுக்கும் அழியும்.

அந்த சமயத்தில் மீதம் இருக்கும் பரம்பொருளாகிய சிவபெருமான் தன்னுடைய சக்தியாகிய உமையம்மை தரிசனம் செய்யும்படி திருநடனம் புரிந்து அருள்வார்.

இத்தகைய தன்மையில் நேயுப் பிரளயத்தில் எல்லாத் தருமங்களுக்கும் அதி தேவதையாக விளங்கும் தர்ம தேவதை தானும் இச் சமயத்தில் இறக்கக் கூடுமே என்று வருந்தி அதனால், என்ன செய்வது என்று எண்ணியது. சிவபெருமானைச் சரணடைந்தால் மரணம் என்னும் தீமையே நீக்கி என்றும் உயிர் கொண்டிருப்பேன் எனத் தெளிவு பெற்றது.

அதனால் ஒரிடப வடிவம் பெற்று எம்பெருமானை அடைந்து, ஈசனே! நான் இறவாமையையும்,தங்களுக்கு வாகனமாகும் தன்மையும் தகுந்த வலிமையையும் பெற்று எப்பொழுதும் உயிர் வாழ அடியேனுக்கு அருள வேண்டும்” என வேண்டியது.

அருள் கடல் ஆகிய சிவனார் இடபத்தின் சிரசின் மேல் தமது திருகரத்தினை வைத்து, ‘தர்ம தெய்வமே உன் எண்ணப்படியே அனைத்தையும் அடைவாயாக. மேலும், தருமத்தின் காலங்களை இதுதான் என்று கண்டோர் உணரும்படி கிருதயுகத்தில் நான்கு கால்களையும்,
திரேதாயுகத்தில் இரண்டு கால்களையும், இறுதியாக வரும் கலியுகத்தில் ஓர் காலும் கொண்டு பூமியில் காலினை ஊன்றி நடந்து காட்டக் கடவாய். நீ எப்பொழுதும் என்னை விட்டுப் பிரிந்திருக்க மாட்டாய். நீயே எனக்கு வாகனமாக இருக்கக் கடவாய்.’ என சிவனார் கூறினார்.

தனது அடியார்களுக்கு காட்சி கொடுக்கும் சிவனார் இடப வாகனத்துடன் காணப்படுவதற்கு இதுவே காரணமாகும்.

ஊழிக் காலத்தில் தர்ம தேவதை ஆகிய இடபத்தை (காளையை) அணுகி ஆதரித்ததால் இடபாந்திக மூர்த்தி என சிவபெருமானுக்கு ஒரு பெயர் வந்தது. எனவே, அடியவரை காக்கும் சிவபெருமானை நாமும் வணங்கி நலம் பெறுவோம்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.