41- விண்ணும், மண்ணும் பார்த்து
காலை பிராத்தனை
மைனாக்களின் சபையில்
42- வானப்பட்டில் தவழ்ந்தது
மின்னும் வெள்ளிகளுடன்
நிலா.
43- ஓவியம் பேசியது
சிற்பம் பேசியது
மௌனத்தில்.
44- அதிகம் கேள்
குறைவாய் பேசு
வெற்றி வழி.
45- சோதனை வாழ்க்கையில்
அடி அல்ல….!
உயர்த்தும் படி.
46- செல்ல அமுது பாப்பா
பாலும் சோறும் தின்னும்
பாசமுள்ள கிளி.
47- கண்ணியம் காலத்தின் சின்னம்
கடமை அதன் மூச்சு
வியர்வை அதன் விளைச்சல்.
48- தோல்வியில் முயற்சி
அறுபட அறுபட பின்னியது
சிலந்தி.
49- சோதனை என்பது
சோர்வடைய அல்ல
உறுதியாக்க.
50- மண்ணாய் மிதித்தாலும்
பொன்னாய் மதித்தாலும்
சமமாய் ஏற்பவன் பெண்.
