கேசவா! சித்தத்தின் போக்குகளைப் பரமாத்மாவின் பால் திருப்புவதற்கு உரிய பயிற்சியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சனன்.
அர்ச்சனா! பரமாத்மா தான் எல்லாவற்றிற்கும் மேலானவர் சர்வ வல்லமை படைத்தவர் எல்லோரையும் ஆள்பவர் அனைத்திலும் உயர்ந்த பரம தத்துவம் அவரை அடைவதுதான் வாழ்க்கையின் பரம்ம லட்சியம்.
இந்த கருத்தை மனதில் உறுதியாக நிலைக்கச் செய்து பயிற்சி செய்ய வேண்டும். இதற்குப் பல வழிமுறைகள் சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றது. அவற்றில் சிலவற்றைக் கூறுகிறேன்.
1- சிரத்தையுடனும், பக்தியுடனும் உறுதி பெற்ற புத்தியின் உதவியுடனும், மனதை மீண்டும்… மீண்டும் சத்,சித், ஆனந்தமயமான பிரம்மத்தினிடம் ஈடுபடுத்துவது.
2- எங்கே மனம் சென்றாலும், அங்கே சர்வ வல்லமை படைத்த தன் இஷ்ட தெய்வமான பரமேஸ்வரனின் சுயரூபத்தை நினைக்க வேண்டும்.
3- பகவானை மனதாலேயே பூஜை செய்யப் பயில வேண்டும்.
4- பேச்சு,மூச்சு, நாடி, தொண்டை, மணம் இவற்றில் ஏதாவது ஒன்றின் மூலம் எப்பொழுதும் “ஸ்ரீராமன், கிருஷ்ணன், சிவன், விஷ்ணு, சூரியன், அம்பாள் முதலிய விருப்பமான பெயர்களில் பரம பிரியத்துடன் சிரத்தையோடும், பரமாத்மாவின் பெயர்களை உணர்வுடன் தொடர்ந்து ஜெபிக்க வேண்டும்.
5-பகவானைப் பற்றிய சாஸ்திரங்களில் கூறப்பட்ட உபதேசங்களை சிரத்தையுடனும், பக்தியுடன் திரும்பத் திரும்ப சிந்தித்து அவற்றை அனுசரித்து நடக்க வேண்டும்.
6-மகாத்மாக்கள் கூறும் அமுதமயமான மொழிகளை ஊக்கத்துடனும், பக்தியுடனும் கேட்க வேண்டும். அவர்கள் சொன்னபடி நடக்க முயல வேண்டும்.
7- மனதின் சஞ்சலம் அழிந்து பகவானிடமே ஈடுபட வேண்டும். என்று மனம் உருகி அடிக்கடி பகவானிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
இதைத் தவிர மேலும் பல வழிகள் உண்டு ஒன்று நினைவில் இருக்க வேண்டும். முயற்சியும், பயிற்சியும் பயன்பெற வேண்டுமானால் மிகுந்த மரியாதை உணர்ச்சியுடன் ஊக்கமும், ஆக்கமும் கொண்டு ஓய்வின்றித் தொடர்ந்து நீண்ட நேரம் பயிற்சி செய்ய வேண்டும்.
இன்று ஒரு சாதனை, நாளை அதை விட்டு வேறொரு சாதனை சில நாட்களுக்குப் பிறகு மற்றொரு சாதனை என்று ஒன்றிலும் பிடிப்பும், நம்பிக்கையும் இல்லாமல் இன்று செய்வதை நாளை செய்வதில்லை, மறுபடியும் ஆரம்பிப்பது மறுபடியும் விடுவது கொஞ்ச நாள் செய்துவிட்டு ஓய்ந்து விடுவது. உறுதி இல்லாமல் கடைசியில் பயிற்சியை அறவே விட்டு விடுவதில் தான் போய்முடியும் இப்பயிற்சி பயனளிக்காது.
கேசவா! வைராக்கியத்தின் தன்மையை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
இவ்வுலகப் பரலோகத்தைச் சார்ந்த பொருட்களிலும் உள்ள பற்று விலகி எல்லா விருப்பங்களும் அறவே அழிந்துவிட்டால் அந்த மனப்பாங்கு வைராக்கியம் எனப்படும்.
வைராக்கியம் உள்ளவனுடைய சித்தத்தில் சுகம் அல்லது துக்கம் இரண்டினாளும் தனிப்பட்ட மாறுதல் ஒன்றும் ஏற்படாது.
முழுமையான வைராக்கியம் அடைந்து விடுகிறான். எனவே, அவனுடைய சித்தம் எந்தப் பக்கத்திலும் இழுபடாது.

