கிருஷ்ணா! ஆன்மீக மேம்பாட்டிற்காக சொற்பொழிவு, பஜனை, தியானம் முதலிய சாதனைகள் புரியும் பல மக்களும் கூட பாவச் செயல்களிலும் ஈடுபடுவதைக் காண்கிறோம். அவர்கள் கதியைப் பற்றி விவரிங்கள் என்கிறார் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! அவர்களுக்கு தீய கதி நேராது. சாஸ்திரங்களிடமும், மகா புருஷர்களிடமும் சிறப்பை கொண்டுள்ளவர்களுக்கு பாவங்களின் விளைவாக கொடுமையான துக்கங்களும், நரகங்களும் அனுபவிக்க நேரும்.
ஆகவே, பழைய வாசனையினால் ஏற்படக்கூடிய பாவச் செயல்களில் இருந்து விடுபட முயற்சி செய்வார்கள்.
அத்துடன், இறைவழிபாடு, தியானம் முதலிய பயிற்சிகளையும் செய்து வந்தார்கள் ஆனால் சித்த சுத்தி ஏற்படும்.
பிறகு மனதறிந்து அவர்களைப் பாவச் செயல் புரிய வைக்கும் பழைய வாசனை என்ற காரணம் அழிந்து விடுகிறது.
ஆகவே, சுபாவமாகப் பாவம் புரிபவர்கள் கூட வழிபாட்டில் ஈடுபட்டால். சிறுகச் சிறுக பாவச் செயல்களில் இருந்து விடுபட்டு விரைவில் தர்மாத்மா ஆகிவிடுவர். படிப்படியாக அவர்களுக்கு மேன்மையே தவிர வீழ்ச்சி கிடையாது என்கிறார் கிருஷ்ணன்.
அன்பனே அர்ஜுனா! நீ எனக்கு மிகவும் இனிய நண்பன் பக்தன் உனக்கு ஏன் பயம் என்னை அடைவதற்காக சாதானை புரிகிறவனுக்குத் தீய கதி நேராது.
உத்தம கதிதான் கிடைக்கும். என்றால் உன்னைப் பற்றி சொல்லவும் வேண்டுமா? என்று அர்ச்சுனனுக்கு அன்புடன் ஆறுதல் கூறுகிறார் கிருஷ்ணன்.
அர்ச்சனா! வைராக்கியம் உள்ள யோகி ஞானிகளான யோகிகள் உடைய குலத்திலேயே பிறக்கிறான். இந்தப் பிறப்பு இந்த உலகில் ஐயமின்றி மிகவும் அரிதாகவே உள்ளது.
யோகத்தில் நின்று வலுவியவன் புண்ணியம் செய்தவர்களுக்கு உரிய சொர்க்கம் முதலிய உயர்ந்த உலகங்களை அடைந்து பல்லாண்டுகள் அங்கு வாழ்ந்து மறுபடியும் நல்லொழுக்கம் உள்ள செல்வந்தர்களுடைய வீட்டில் பிறக்கிறான்.
இங்கு செல்வந்தர்கள் எனக் குறிப்பிடுவது பணம் படைத்தவர்கள் வீட்டை அல்ல.தூய்மையற்ற இழி குணமும் இழி நடத்தையும் கொண்ட செல்வந்தர் வீடு அல்ல.
உயர் குணமும்,தூய நடத்தையும் கொண்ட செல்வந்தர் என்பது பொருளாக கொள்ள வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.
மறுபடியும் பிறப்பவன் போன பிறவியின் யோக பயனாலும், சமபுத்தி யோகத்தின் மனப்பதிவுகளை எளிதாகவே பெறுகிறான். பரமாத்மாவை அடைகிற வழியில் முன்னிலும் தீவிரமாக முயல்கிறான்.
சந்தேகம் இன்றி பகவான் பால் ஈர்க்கப்பட்டு வேதங்களிலே கூறப்பட்டுள்ள பயனை விரும்பிச் செய்யப்படும் கர்மங்களின் பயனைப் பொருட்படுத்தாமல் கடந்து சென்று விடுகிறான்.
ஆனால், முழு முயற்சியுடன் பயிற்சி செய்யும் யோகியோ பல பிறவிகளில் ஏற்பட்ட மனப்பதிவுகளின் வலிமையால் இப் பிறவியிலேயே சித்தியடைகிறான். அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெற்று, பரிசுத்தமாகி அக்கணமே உயர்ந்த நிலையான பரமாத்மாவை அடைகிறான்.
தவம் செய்தவர்களைக் காட்டிலும் மேலானவன் யோகி. சாஸ்திரங்களை அறிந்தவர்களை காட்டிலும் மேலானவனாக கருதப்படுகிறான்.
மேலும், பயனில் ஆர்வம் கொண்டு கர்மங்களைச் செய்பவர்களை காட்டிலும் யோகி உயர்ந்தவன்.
ஆகையினால் அர்ச்சனா! யோகி ஆவாய் என்கிறார் கிருஷ்ணன்.
ஞான யோகம், தியான யோகம்,பக்தி யோகம், கர்மயோகம் முதலிய சாதனைகளில் அர்ச்சுனன் எந்த ஒரு சாதனையை கைக்கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாக்கவில்லை. ஆகவே, தம்மைத் தவிர வேறு ஒன்றிலும் நாட்டம் கொள்ளாமல் தன்னிடமே பிரியம் கொள்ளும் பக்தி யோகியின் பெருமையைக் கூறி அர்ஜுனனை தம்பால் ஈர்க்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! அனைத்து யோகிகளிலும் எவன் சிரத்தையுடன் என்னிடம் ஈடுபாடு கொண்ட உள்ளத்தால் மனப்பூர்வமாக என்னை வழிபடுகிறானோ அந்த யோகியே என்னால் மிகவும் உயர்ந்தவனாக மதிக்கப்படுகிறான்.

