கேசவா! முக்குணமும் என்னிடம் இருந்தே தோன்றியது என்று கூறிய தாங்கள். “அவை என்னிடமோ, நான் அவற்றிலோ இல்லை” என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சனன்.
அர்ச்சனா! வானில் உண்டாகும் மேகத்திற்கு காரணமும், ஆதாரமும்வானம்தான் ஆனால், வானம் அந்த
மேகத்தில் சிறிதளவு கூட ஒட்டிக் கொண்டு இருக்கவில்லை.
மேகங்கள் எப்பொழுதும் வானில் ஒட்டிக் கொண்டு இருப்பதில்லை. மேகம் இல்லாத இடத்திலும் வானம் இருக்கிறது.
எனவே, வானம் மேகத்தை சார்ந்து இருக்கவில்லை, மேகமும் மேகமும் வானில் இருந்து வேறானது அன்று தன்னில் தானே நிலை கொண்டுள்ளது.
இது போலவே முக்குணமும் பகவானிடம் இருந்து தோன்றியது அக்குணங்கள் பகவானே கடந்து இயங்குகின்றன.
எனவே, தம்மில் தாமே நிலைத்திருப்பவர் அவற்றில் நான் இல்லை. என்னில் அவை இல்லை என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சனா! சாத்விக, ரஜோ, தாமச குணங்களின் விளைவுகளான இந்த மூன்று வகையான உணர்வுகளால் இந்த எல்லா உலகமும், பிராணி, சமுதாயமும் மயக்கம் அடைந்துள்ளன.
ஆகையினால், இம்முக்குணங்களுக்கும் மேற்பட்டவனும், அழிவற்றவனுமான என்னை இந்த உலகம் அறிவது இல்லை என்கிறார் கிருஷ்ணன்.
இன்ப வடிவங்களில் மேற்புறத்தில் காணப்படும் பளபளப்பில் வாழ்க்கையின் உன்னத இலட்சியத்தை மறந்து என்னுடைய குணம், பிரபாவம், தத்துவம், சுயரூபம், ரகசியம் இவற்றைப் பற்றிய சிந்தனைகளிலும், ஞானத்திலும் ஈடுபாடு இல்லாமல் நேர் எதிரான உணர்வுகளை தவறாக பெற்று என்னிடம் அவநம்பிக்கை கொண்டு உள்ளார்கள்.
மூன்று குணங்களின் மாற்றங்களில் சிக்கித் தவிக்கும் காரணத்தால் பொருட்களை குவித்து வைப்பதையும், இன்ப நுகர்சியையும் தவிர வாழ்க்கையில் வேறொரு கடமையோ குறிக்கோளோ, இருப்பதாக அவர்கள் கருத முடியாத அளவுக்கு அவர்களுடைய அறிவுத்திறன் மழுங்கிப் போய் இருக்கிறது
என்று விவரிக்கிறார்.
அர்ச்சனா! இந்த உலகியலுக்கு அப்பாற்பட்ட தெய்வீகமான மிகவும் அற்புதமான முக்
குணமான என்னுடைய மாயை கடப்பதற்கு அரிதானது.
ஆனால், எவர்கள் என்னையே எப்பொழுதும் புகழாகக் கொள்கிறார்களா, அவர்கள் இந்த மாயையைக் கடந்து விடுகிறார்கள்.
உலகியலில் இருந்து கரையேறுகிறார்கள்.
முக்குணமான உணர்வுகள் என்ற பெயரில் பிரகிருதியின் விளக்கத்தைக் காரிய ரூபமாகும்.
அதுவே, இங்கே காரண ரூபமாக மாயை என்ற பெயரில் குணங்களும் குணங்களின் காரிய வடிவமாக விளங்குவதும் கண்ணுக்குப் புலப்படுகின்றது.
ஜடமானதுமான இவ்வனைத்தும் மாயையிலேயே இருக்கின்றன. இந்த மாயை மந்திரவாதி அல்லது அசுரர்களுடைய மாயைப் போன்று சாதாரணமானதன்று.
முற்றிலும் தனித் தன்மையுடைய மிகவும் விசித்திரமான சக்தி ஆகும். இந்த தெய்வீக மாயை என்னுடையது. கடக்க முடியாதது, ஆகையினால் நான் இதன் தலைவன்.
என்னை அடைக்கலமாக் கொள்ளாமல் மனிதன் இந்த மாயையை எளிதாக கடந்து விட முடியாது. எனவே,இது கடப்பதற்கு மிகவும் அரியது என்கிறார் கிருஷ்ணன்.

