• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாOctober 19, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேசவா! எவர்கள் என்னையே புகழாகக் கொள்கிறார்களோ என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ஜுனன்.

அர்ச்சுனா! பகவான் ஒருவரே தமக்கு சிறந்த புகல் அளிப்பவராகவும், உயர்ந்த அடைக்கலமாகவும், மிகுந்த அன்புடையவராகவும் அடையத் தக்க சிறந்த பொருளாகவும் உணர்ந்து  அனைத்துமே பகவானுடையவை என்று அறிந்து கொண்டு மனதால் அனைத்தையும் துறந்து, பகவானுடைய வழிபாட்டில் பயன்படும் பொருட்களாகச் செய்து.

பகவானால் விதிக்கப்பட்டபடி எல்லாம் நடக்கின்றன என மனம் நிறைந்து, பகவானுடைய ஆணைப்படி நடப்பதில் தீவிரமாக ஈடுபட்டு, பகவானையே சிந்தித்து இடைவிடாது பகவானிடமே நிலை நிறுத்துகிறவர்களே மாயையை கடக்கக் கூடியவர்கள் என்கிறார் கிருஷ்ணன்.     

கேசவா! மாயையைக்  கடத்தல் என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! காரியமாகவும்,  காரணமாகவும் விளக்குவது மாயை. மாயையின் தலைவன் பகவான் அவன் அருளினால் மாயையின் ரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும்.

பின் இதன் தொடர்பில் இருந்து முழுமையாக விடுபட்டு மாயைக்கு அப்பாற்பட்ட பரமாத்மாவை அடைதல் தான் மாயையைக் கடத்தலாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா!மாயையினால் அறிவிழந்தவர்களும், அசுரத் தன்மையைக் கொண்டவர்களும், மனிதர்களின் தாழ்ந்தவர்களும், இழிவான செயல்களைப் புரிகின்றவர்களுமான அறிவிலிகள்.

என்னை வழிபடுவது இல்லை. அதாவது அடைய வேண்டிய மேலான கதியை அடைவதில்லை என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! மேலான கதி அடைவதில்லை என்பதை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! விவேகம் அற்ற அறிவிலிகளான மனிதர்களின் சிந்தனைகளும், செயல்களும், தாழ்ந்து போகவே இன்பத்தில் பற்று, தவறுகள், சோம்பல் இவை மேலோங்கி இன்ப நுகர்சியிலேயே வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.

இவற்றை அடையும் நோக்கத்துடன் இடைவிடாமல் இகழத் தக்க தாழ்ந்த செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இத்தகைய தழ்ந்த மக்கள் மாயையால் அறிவு இழந்தவர்கள். முற்றிலும் எதிரான உணர்வுகள் நம்பிக்கை இன்மை ஆகியவற்றின் ஆதிக்கத்தால் ஆய்ந்து அறியும் தன்மையை இழந்து விடுவார்கள்.

இதன் காரணமாக வேதம், சாஸ்திரம், பெரியோர்களின் நல்லுரைகள், கர்மபலன், மறுபிறவி, பகவான் மேலுள்ள பக்தி இவற்றில் நம்பிக்கை இல்லாமல்…

வீணான பேச்சுகளிலும், நாத்திக வாதத்திலும், ஈடுபட்டு பிறருக்கு துன்பம் விளைவிக்கிறார்கள்.

இத்தகைய அறியாமை யில் உழல்வோர், மேலே சொன்ன அத்தனை தீய குணங்களோடு, கூடவே, ஆடம்பரமும், செருக்கு, தாருக்கு, காமம், கோபம், பேராசை, மயக்கம் முதலிய அசுரத்தனமான உணர்வுகளைக் கைக்கொண்டு உள்ளோர் அசுர இயல்பு உடைய மூடர்கள்.

இவர்கள் ஒருபோதும் என்னைப் புகலாக கொள்வது இல்லை என்று கூறுகிறார் கிருஷ்ணன்.

பரதகுலச் செம்மலே அர்ச்சுனா! உலகியல் பொருட்களைப் பெற வேண்டி வழிபடுபவன் துன்பம் அடைந்தவன்.
எனது பெருமையை அறிய ஆவல் உள்ளவன் மெஞ்ஞானம் பெற்றவன்.  நான்கு விதமான நற்செயல்கள் செய்கின்றவர்களின் பக்தி உடைய மனிதர்கள் என்னை வழிபடுகிறார்கள் என்கிறார் கிருஷ்ணன்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.