• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாOctober 20, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அர்ச்சுனா! பகவானிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வழிபாடு செய்யும் எல்லா பக்தர்களும் நற்செயல்கள் செய்கின்றவர் ஆவர்கள்.

பகவான் ஒருவரையே நம்பி சிரத்தை உடனும் பகவான் நம் விருப்பத்தை பூர்த்தி செய்வார் என்ற நம்பிக்கையுடனும் பகவானைப் புகழாக  கொள்பவர்கள் உலகியல் நன்மைக்காக பொருட்களைப் பெற வேண்டி வழிபடுபவர்கள் ஆவார்கள்.

அப்படி வழிபட்டவர்களில் சிலரை குறிப்பிடுகிறேன். சுக்ரீவன், விபிசேனன், துருவன், திரௌபதி போன்றோர் ஆவார்கள்.

துருவன் ராஜ்யத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் யமுனைக் கரையில் மதுவனதில் தவம் செய்தான்.

அவனுடைய தவத்தைக் கலைப்பதற்காகப் பலவிதமான பயமுறுத்தல்களும் பலவித ஆசைகளும் காட்டப்பட்டுள்ளன ஒன்றுக்கும் அவன் இடம் கொடுக்கவில்லை.

பகவான் அவனுடைய உறுதியான பக்தியினால் மகிழ்ந்து. அவனுக்கு தரிசனம் தந்தார். நாரத முனிவர் அரசிடம் சென்று நடந்துவற்றை கூறினார்.

அரசர் தம் புத்திரன் உத்தமனோடும்  இரு மனைவியரோடும் துருவனை அழைத்து வரச் சென்றான். தவமே வடிவான துருவன் எதிரே வந்து கொண்டிருப்பதைக் கண்ட அரசன்.

யானையை விட்டிறங்கி அவனை மார்புறத் தழுவிக் கொண்டான். பிறகு பெரிய விழா எடுத்த மன்னர் யானை மேல் துருவனை அமரச் செய்து நகரத்துக்கு ஊர்வலமாக அழைத்து வந்தவர். துருவனுக்கு முடி சூட்டிவிட்டு தாம் வனத்திற்கு தவம் செய்யச் சென்று விட்டார்.

துருபத ராஜனின் பெண் திரௌபதியாக குண்டத்தில் பிறந்தவள். அவள் கரிய நிறத்தவளாய் மிக அழகாக இருப்பாள். அதனால், ‘கிருஷ்ணா’ என்றும் பெயர் உண்டு.

திரௌபதி நற்குணங்கள் அனைத்தும் படைத்தவள். சிறந்த பதிவிரதை, இலட்சிய மனைவி, சிறந்த பக்தை, ஸ்ரீ கிருஷ்ணனை பூரண பிரம்மமாகவே கருதுபவள்.

துரியோதனனின் ஆணையின் பேரில் துச்சாதனன் திரௌபதியை துயில் உரிய இழுத்த போது யாருமே உதவிக்கு வராத போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நினைத்தாள்.

தான் நினைத்தால் பகவான் வந்து உதவி புரிவார். தான் கூப்பிட்ட கூக்குரலைக் கேட்டால் அவருக்கு இருப்புக் கொள்ளாது என்று முழுமையாக நம்பினாள்.

ஓல மிட்டாள்! ஓ கோவிந்தனே! ஓதுவார் கையில் வசிப்பவனே! ஓ கிருஷ்ணனே! ஓ கோவியர்களுக்கு பிரியமானவனே! ஓ கேசவா! கௌரவர்கள் என்னை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

நீ அறிய வில்லையா!ஓ நாதா! ஓ லக்ஷ்மி நாதா!
ஓ வரதநாதா! துன்பத்தை போக்குபவனே! ஓ ஜனார்த்தனா!கௌரவக் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் என்னைக் காப்பாற்று கிருஷ்ணா.

மகா யோகியே கிருஷ்ணா! அண்டத்தில் ஆத்மாவாக விளங்குபவனே! அண்டமாக இருப்பவனே! ஓ கோவிந்தா!

கௌரவர்களின் கையில் சிக்கித் தவிப்பவளும், மிகவும் துன்பத்துடன் உன்னை தஞ்சம் அடைந்தவளுமான என்னைக் காப்பாற்று என்ற திரௌபதியின்  அழைப்பைக் கேட்டவுடன் உலக நாயகனான எனது உள்ளம் உருகியது.

கருணைக்கடலான நான்,  கருணைக்கு ஆட்பட்டுப் படுக்கையை விட்டு எழுந்து ஓடினேன். கௌரவர்களுடைய அரக்கத்தனம் நிறைந்த அவைக் களத்தில் துணி வடிவில் பகவானின்
வஸ்திராவதாரம் நிகழ்ந்தது.

திரௌபதியின் ஒரு துயிலில் இருந்து இரண்டாவது. இரண்டாவதில் இருந்து மூன்றாவது என வெவ்வேறு வகையான வண்ணச் சேலைகள் தோன்றத் தொடங்கி…

துணிக் குவியலே உண்டாகி விட்டது. பேரன்புடைய ஆத்ம பந்துவான நான் சரியான நேரத்தில் வந்து பக்தை திரௌபதியின் மானத்தை காப்பாற்றினேன்.

துச்சாதனன் கலைத்து தரையில் உட்கார்ந்து விட்டான். என்று தான் உதவியதை விவரிக்கிறார் கிருஷ்ணன். 

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.