கேசவா! மரண காலத்திலும் சரீரத்தை சேர்த்துக் கூறுவதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சனா! மரண காலத்தில் தனிப்பட்ட பெருமை வெளிப்படுகிறது. எவன் எப்போதும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறானோ அவனைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது.
எவன் இந்த மனித பிறவியின் கடைசி கணத்தில் கூட என்னையே நினைத்து உடலை விடுகிறானோ, அவனும் என்னையே அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன்.
மேலும் கூறுகிறார், “அர்ச்சுனா! ஒவ்வொரு அவதாரங்களுக்கும் வைக்கப்பட்ட திருநாமங்கள், குணங்கள், பிரபாவங்கள், லீலைகள் இவை எல்லாமே பகவானை நினைப்பதற்கு காரணமாகும்.
இவற்றை நினைவில் வைத்துக் கொள்வதனாலையே பகவானுடைய நினைவும் தாமாகவே வந்துவிடும். ஒருவனுடைய விருப்பம் எப்படியோ, அப்படியே என்னை வந்து அடைகிறான் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! மனிதன் மரண தருவாயிலும் எந்தெந்த சுயரூபத்தைச் சிந்தனை செய்த வண்ணம் சரீரத்தை துறக்கிறானோ, அந்தந்த சுயரூபத்தை அடைகிறான்.
ஏனெனில், எப்பொழுதும் அதே சிந்தனையில் இருக்கிறான். இங்கு உள்ளம் நிழல் படப் பெட்டியின் உள்ளே இருக்கும் படச்சுருள் அதில் ஏற்படும் நினைவுதான் பிரதிபிம்பம்.
வேறு சூட்சும சரீரத்தைப் பெறுவதுதான் நிழல் படம். அதனால், தான் நிழல் படத்தை எடுப்பவர் எச்சரிக்கையாக முகத்தை மலர்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார்.
அவர் கூறுவதை மதிக்காமல் பராக்குப் பார்த்தால் நிழல் படத்தின் பதிவு மாறிப் போகிறது. அது போல உன்னை நிழல் படம் எடுக்கும் நேரம் மிகவும் நெருங்கி விட்டது. உன் இறுதி நேரம் எப்போது என்று சொல்ல முடியாது. ஆகவே, நீ கவனமாக இரு
இல்லாவிட்டால் நிழல் படம் பாழாகிவிடும். இங்கு இடைவிடாது பகவானேச் சிந்தனை செய்வதே கவனமாக இருப்பதற்குப் பொருள். பரமாத்மாவைத் தவிர வேறொன்றைச் சிந்திப்பது நிழல் படத்தைப் பாழாக்குவதாகும் என்கிறார் கிருஷ்ணன்.
அர்ச்சனா! நீ எல்லாக் காலங்களிலும் இடைவிடாமல் என்னையே தொடர்ந்து நினைத்துக் கொண்டிரு போரும் புரிவாயாக!
என்னிடத்தில் அர்ப்பணம் செய்யப்பட்ட மனம், புத்தியுடன் கூடியவனாக நீ ஐயம் இன்றி என்னை அடைவாய்.
இந்த உடல் நொடியில் அழியக்கூடியது. ஆயுளை நம்புவதற்கு இல்லை, அதிகமாக எதைச் சிந்திக்கிறோமோ அதுதான் கடைசி நேரத்தில் நினைவுக்கு வரும்.
அதனால், பகவானை இடைவிடாது சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு சிந்திக்காமல் போகப் பொருட்களின் மீது சிந்திக்க நேர்ந்தால் இந்த மனிதப் பிறவி வீணாகிவிடும். ஆகவே, இறைவனை இடைவிடாது சிந்திக்க வேண்டும் என்கிறார் கிருஷ்ணன்.

