மூன்றாம் படை வீடு
பழனி
பல்லவி
மாங்கனி வாங்க வந்தாய் முருகா
மயில் மேலே ஏறி உலகைச் சுற்றி (மாங்)
அனுபல்லவி
உமா மகேஸ்வரனைச் சுற்றி வலம் வந்து உண்ணும் கனி வாங்கி நின்றான் கணேசன்
(மாங்)
சரணம்
சினம் கொண்டு எழுந்தாய் முருகா சிங்கார முகம்வாடி நின்றாய் முருகா மாங்கனி வேண்டி வந்தாயா முருகா
மங்காத வாழ்வு மக்களுக்கு தரவேண்டி
(மாங்)
சரணம்
தனியாக நின்றாய் முருகா பழனியில் தண்டபாணித் தெய்வமாய் மக்களுக்கு அருள
ஞானம் கொடுத்து வாழ்விற்கு வழிகாட்டும் ஞானப் பழமே நீதானே முருகா (மாங்)

