சுவாமிமலை
பல்லவி
தகப்பன் சுவாமியே முருகா
சுவாமி மலையில் தந்தைக்கு குருவான(தக)
அனுப்பல்லவி
ஓம்காரப் பொருள் சொன்ன முருகா மெய்ஞான கருவாகி சிவனுக்கு குருவான (தக)
சரணம்
பிரணவ உபதேசம் செய்த சுப்ரமணியா
பிரம்மனை சிறையில் அடைத்த பாலமுருகா பிரமிக்கும் தமிழ்த் தலைவன் சுவாமிநாதா பிரகாச வாழ்வு தரும் முத்துக்குமாரா (தக)
சரணம்
காணும் இடம் எங்கும் கந்தவேலா
காணும் பொருளில் எல்லாம் கதிர்காமா பார்க்கும் விழியில் எல்லாம் பாலமுருகா மனதில் நிறைந்தது பரமானந்தம் முருகா (தக)

