கேசவா! மறைத்துப் போற்றிக் காப்பாற்ற வேண்டியவற்றில் சிறந்தது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! உலகியலிலும், சாஸ்திரங்களிலும் மறைத்து போற்றப்பட வேண்டிய இரகசியங்கள் அனைத்தையும் விட முழுமையான ஆளுமை படைத்தவன் பகவான்.
புருசோத்தமனுடைய தத்துவம், பிரம்மை,குணம், பிரபாவம், விபூதி, பெருமை இவற்றுடன் கூடிய சரணாகதியில் சுயரூபம் மறைத்துக் காப்பாற்றப்பட வேண்டும். இதைத்தான் குகியதமம் என்று வர்ணிக்கப்படுகிறது என்கின்றார் கிருஷ்ணன்.
அர்ச்சுனா! விஞ்ஞானத்துடன் கூடிய ஞானம் அனைத்து வித்தைகளுக்கும் ராஜா. மறைத்து போற்றப்பட வேண்டியவற்றில் சிறந்தது.
மிகச்சிறந்தது கண்கூடாக உணர்வதற்குரியது. தர்மநெறிக்குட்பட்டது, கடைபிடிப்பதற்கு மிகவும் எளிதானது அழிவற்றது என்கிறார்.
கேசவா! ‘இதம்’ ராஜ வித்யா, ராஜ குகியம் என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! விஞ்ஞானத்தோடு கூடிய ஞானமே இங்கு ‘இதம்’ எனப்படுகிறது.
உலகில் அறிந்து கொள்ளப்பட்டவை, அறிந்து கொள்ளப்படாதவை என எத்தனையோ உள்ளன அவற்றில் எல்லாவற்றையும் காட்டிலும் சிறந்தது.
வித்தையின் உண்மையான அனுபவத்தைப் பெற்றவனுக்கு மேலும் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுமில்லை. அதனால், தான் இதை ‘ராஜவித்தை’ என அழைக்கப்படுகிறது.
இந்த தத்துவத்தை விளக்கி கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணன் ஆன உன் எதிரில் நிற்கிறேனே, நான்தான் அகில உலகையும் படைப்பவன், மறைப்பவன், எல்லாவற்றிற்கும் ஆதாரம் சர்வ வல்லமை படைத்தவன்.
பரப்பிரமம், பரமேஸ்வரன், பரமாத்மா நீ எல்லா விதங்களிலும் என்னை சரணமடைவாயாக என்கிறார்.
இவ்விதம் மிகவும் மறைத்துப் போற்றத்தக்க ரகசியமான விசயம் அர்ச்சுனன் போன்ற குற்றம் குறை காணாதவனும், நம்பிக்கையையும், ஆர்வமும் கொண்ட
பக்தனிடத்தில் தான் வெளிஇயிடத்தக்கது.
எல்லோரிடமும் சொல்லத் தக்கது அன்று. ஆகவே, இதை ‘ராஜரகசியம’ஆகிய மறைத்துப் போற்ற வேண்டியவற்றில் சிறந்தது என்கிறார் கிருஷ்ணன்.

