சபரி
சபரி என்ற வேடவப் பெண்ணின் பக்தியால் கொடுத்த கனியை உண்டு மகிழ்ந்த ராமபிரானின் தயா உள்ளத்தைப் பார்ப்போம்.
சபரி என்ற வேடவப் பெண் பகானின் மேல் பக்தி கொண்டவள். தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை தண்டகாரண்யத்தில் ஒளிந்து. மறைந்து முனிவர்களுக்கு சேவை செய்து கழித்தாள்.
முனிவர்கள் நீராடச் செல்லுகின்ற நேரத்தில் அவர்கள் செல்லும் பாதையைப் பெருக்கி சுத்தப்படுத்துவாள்.
கரடு முரடான தரை மீது மணலைப் பரப்பி சமப்படுத்துவாள். காட்டில் இருந்து விறகு வெட்டிக் கொண்டு வந்து முனிவர்களின் ஆசிரமத்தில் சேர்ப்பாள்.
இவற்றை எல்லாம் கவனித்த மதங்க முனிவருக்கு அவளிடம் கருணை பிறந்தது. சபரியை அழைத்து பகவானின் நாமத்தை உபதேசித்தார்.
அவர் பிறவி நீங்கி பரலோகம் போகும்போது சபரியிடம் சொன்னார். உனது குடிலுக்கு பகவான் ஸ்ரீ ராமன் வருவார். அவரை தரிசனம் செய்து நீ பிறவிப் பயனை அடைவாய். அதுவரை இங்கேயே வழிபட்டுக் கொண்டு இரு என்று கூறிச் சென்றார்.
சபரியின் வழிபாடு தொடர்ந்தது பல நாட்கள் கடந்து கொண்டே இருந்தது.
ராமன் வருகைக்காக சபரி காத்துக் கொண்டே இருந்தாள். பிரபு வருவாரே என்று வழி எல்லாம் சுத்தம் செய்து மண்ணும், சாணமும் கலந்து மேடை அமைத்தாள்.
காட்டிற்குள் சென்று எந்தப் பழம் இனிப்பாக இருக்கும் என்று எண்ணி இனிப்பான மரத்தை தேடி அதன் கனிகளைக் கொண்டு வந்து தினம் வைப்பாள்.
நாட்கள் கடந்தன. அவள் சேவையோ தினமும் தொடர்ந்தது ஒருநாள் ஸ்ரீராமன் வந்தே விட்டார் குடிலுக்கு…
வணங்கி, ஆனந்தக் கடலில் மூழ்கினாள். புதிதாக பறித்து வைத்திருந்த இனிப்பான கனிகளை உண்ணக் கொடுத்தாள் சபரி.
ராமரும் உண்டு மகிழ்ந்தார். தான் எங்குமே கண்டிராத சுவையான கனி எனக் கருதி மகிழ்ந்து மோட்சத்தை சபரிக்கு வழங்கினார் பகவான்.

