• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாNovember 28, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

சாமதி

சாமதி என்பவர் திருமினர் என்ற வைசிய செல்வந்தரின் புதல்வர். இவருடைய மனைவியும், புதல்வர்களும் பணப் பேராசையினால் இவரை வீட்டை விட்டு விரட்டி விட்டார்கள்.

இவர் காட்டிற்கு சென்றார். அங்கு சூரதன் என்ற அரசனைச் சந்தித்தார்.

மந்திரிகளாலும், சேனாதிபதிகளாலும், உறவினர்களாலும் புறக்கணிக்கப்பட்டுக் காட்டிற்கு விரட்டப்பட்டவர்.

இருவருக்கும் ஒரே நிலை. எனவே, இருவரும் சத்,சித், ஆனந்த ரூபியான தேவியை சரணடைந்தார்கள்.

உலகப் பற்றை அறவே ஒழித்து பகவதியை ஆராதித்தார்கள். மூன்று ஆண்டுகள் இப்படி இவர்கள் பூஜை செய்த பிறகு பகவதி அவர்களுக்குத் தரிசனம் அளித்தாள்.

வேண்டிய வரங்களை கேட்கும்படி பணிந்தாள். அரசனின் உள்ளத்தில் இன்னும் போக வாசனை இருந்தது. அதனால், அவர் அரச போகத்தை வேண்டினார்.

சாமதியின் உள்ளத்தில் வைராக்கியம் இருந்தது. உலகம் நொடியில் அழியக்கூடியது. துன்பமயமானது என்று உணர்ந்து இருந்தார்.

அதனால், அவர் பகவான் மீதான பக்தியினால் பகவானுடைய தத்துவத்தை அறிய விரும்பினார். பகவதியின் கருணையினால் அவருடைய அஞ்ஞான இருள் அகன்றது. பகவான் மீதான தத்துவஞானம் மலர்ந்தது.

சஞ்ஜயன்

சஞ்ஜயன் காவல்கணர் என்ற  தேரோட்டியின் மகன். மிகவும் அமைதியான இயல்பு உடையவர்.

தன்னடத்தை, ஞானம், விஞ்ஞானம் பெற்றவர், ஒழுக்கம், உண்மை, புலனடக்கம் உள்ள பயமற்ற தர்மாத்மா, தெளிவாக பேசுபவர்
ஸ்ரீ கிருஷ்ணனுடைய பரம பக்தர். அவருடைய தத்துவத்தை அறிந்தவர்.

அர்ச்சுனனுடன் இளமை முதல் நட்பு கொண்டவர் மகாபாரத யுத்தத்தின் போது வேதவியாசர் இவருக்கு தெய்வீக பார்வை அளித்தார்.

அதன் பெருமையினால் இருந்த இடத்தில் இருந்து கொண்டே திருதராஷ்டிரருக்கு யுத்த நடவடிக்கைகளை எடுத்துச் சொன்னார்.

மகாரிஷியான வியாசர், சஞ்ஜயன், விதுரர், பீஷ்மர் போன்ற மிகச் சில பெரியோர்களே
ஸ்ரீ கிருஷ்ணனின் உண்மை சுயரூபத்தை அறிந்தவர்கள்.

சஞ்ஜயன் திருதராஷ்டருக்கு சொல்கிறார், “நான் பெண்டு பிள்ளைகளின் மோகத்தில் சிக்கிக் கொண்டு அறியாமையில் திளைத்திருக்க மாட்டேன். பகவானுக்கு அர்ப்பணம் செய்யப்படாத எந்தக் காரியத்தையும் செய்ய மாட்டேன். வீணான எந்த தர்மத்தையும் கடைப்பிடிக்க மாட்டேன்.

தூய தான எண்ணத்தாலும், பக்தியோகத்தாலும் நான் பகவானுடைய உண்மையான சுயரூபத்தை அறிவேன்.

எங்கு சத்தியம், தர்மம்,
ஈஸ்வர விரோதமான காரியத்தில் வெட்கமும், இதயத்தில் நேர்மையும் இருக்குமோ அங்கு
ஸ்ரீ கிருஷ்ணன் இருக்கிறார்.

எங்கு ஸ்ரீ கிருஷ்ணன் இருக்கிறாரோ அங்குதான் வெற்றி. இதில் சந்தேகமே இல்லை.

அகில உலகையும் விளையாட்டாக நடத்திச் செல்கிறார். உலகத்தோரே மயங்கச் செய்து பாண்டவர்களைக் கருவியாக்கி…

அதர்மம் நிறைந்த அறிவு அற்றவர்களுமான உமது புதல்வர்களை அழிக்கப் போகிறவர் கிருஷ்ணன்தான். கால, உலக, யுகச் சக்கரத்தை சுழற்றிக் கொண்டிருக்கிறார்.

தம்முடைய மகா மாயையின் பிரபாகத்தினால் எல்லோரையும் மதிமயங்க செய்கிறார். ஆனால், அவரைச் சரணடைந்தவர்களை மாயைக்கு ஆட்படுத்துவதில்லை.

இப்படி சஞ்ஜயன் கிருஷ்ணனுடைய நாமம், அதன் அழகான பொருள் இவற்றை திருதராஷ்டிரனுக்கு விளக்கிய மகாபாரத யுத்தத்தைத் தடுப்பதற்கு மிகவும் முயற்சி செய்தார்.

அவரால் தடுக்க முடியவில்லை. திருதராஷ்டிரர் கடைசியில் வனம் சென்றபோது
சஞ்ஜயனும் கூடச் சென்றார்.

ஆணாயினும், பெண்ணாயினும் எந்த இனத்தவராயினும் பகவானை சரணடைந்தவர் பரமகதி அடைவார்கள். 

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.