• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாNovember 30, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

துவாதசி திதி ஒரு மணி நேரம் தான் இருந்தது அதற்குள் பாரணை செய்யாவிட்டால் விரதம் முறிந்து விடும்.

அரசர் பெரியோர்களை அணுகி என்ன செய்யலாம் என்று கேட்டார்.

ஸ்ரீஹரியின் பாத தீர்த்தத்தைப் பருகி பாராணையை முடிக்கலாம். தவறில்லை, முனிவர் வந்த பிறகு அவருக்கு உணவு அளித்த பிறகு நீங்கள் சாப்பிடலாம் என்றனர்.

துர்வாசகரும் தனது நித்திய கடமைகளை முடித்துக் கொண்டு அரண்மனைக்கு எழுந்தருளினார்.

தம்முடைய தவ வலிமையினால் அரசர் பாரணை முடித்துக் கொண்டார் என்று தெரிந்து கொண்ட முனிவருக்கு மிகுந்த கோபம் வந்துவிட்டது.

தவறிழைத்து விட்டவரைப் போல கைகூப்பி எதிரே நிற்கும் அரசரைப் பார்த்து ஆகா! செல்வச் செருக்கினால் திமிரும், தர்மத்தால் அலட்சியமும் வந்துவிட்டனவோ!

நீ விஷ்ணு பக்தன் அல்ல உன்னையே ஈஸ்வரனாக நினைத்துக் கொண்டு விட்டாய். எனக்கு உணவு அளிக்காமல் நீ உண்டு விட்டாய்…

அதற்குப் பயனை இப்பொழுதே காட்டுகிறேன் என்றவர். சடை முடியில் இருந்து ஒரு முடியை உருவித்  தரையில் ஓங்கி அடித்தார்.

அதில் இருந்து தீப்பிழம்பு கொழுந்து விட்டு எரிந்தது அதில் இருந்து  கிருதியை என்ற பெயருள்ள ராட்சசி வெளிப்பட்டாள்.

அவள் தரையில் ஓங்கி மிதித்த போது பூமி நடுங்கியது. கையில் வாளை வீசிக் கொண்டு அரசரை எதிர்த்துப் புறப்பட்டாள். 

பகவானிடம் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்ட அரசர். நின்ற இடத்திலேயே  நிறைந்து இருக்கிறார் என்று எண்ணுவதால் அவருக்கு பயமே வரவில்லை.

அந்தக் கிருதியை அம்பரீஷனை அணுக முடியவில்லை. பயங்கரமான காட்டுத் தீ கொடிய பாம்பைப் பொசுக்குவது போல பகவானுடைய ஸ்ரீ சுதர்சன சக்கரம் அந்த கிருதியை சாம்பலாக்கி விட்டது. பிறகு அச்சக்கரம் துர்வாசரை நோக்கித் திரும்பியது. துர்வாசர் பயம் வந்தவராய் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார்.

சக்கரம் துரத்தியது துர்வாசரை. எட்டுத் திசைகளிலும் பதினான்கு உலகங்களிலும் ஓடினார். அவருக்கு எங்கும் புகழிடம் கிடைக்கவில்லை.

கடைசியில் வைகுண்டம் சென்றால் துர்வாசர்.

விஷ்ணுவின் பாதங்களைப் பற்றிக் கொண்டு கதறினார். பிரபே! நான் உங்களுடைய பெருமையை அறியாமல் உங்கள் பக்தருக்கு அவமானம் இழைத்து விட்டேன்.

என்னை இந்தத் தவறில் இருந்து காப்பாற்றுங்கள். உங்கள் பெயரை ஒருமுறை சொன்னாலே கொடிய நரகத்தில் வீழ்ந்தவர்கள் கூடத் துன்பங்களிலிருந்து விடுபடுவார்கள். என் குற்றத்தை மன்னியுங்கள் என்றார் துர்வாசர். 

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.