பொருட்களுள் இமயமலையாக இருக்கிறேன். உறுதியும், உயரத்திலும் தவம் செய்வதற்கும் முக்தி பெறவும் உதவும் இடம் எனவே, நான் அங்கு இருக்கிறேன்.
மரங்கள் அனைத்திலும் அரச மரமாகவும், தேவ ரிஷிகளுள் நாரதராகவும், கந்தர்வர்களுள் சித்ரரதன் ஆகவும் திகழ்கிறேன். சித்தர்களில் கபில முனிவராகவும் விளங்குகிறேன்.
கபிலர் இயல்பாகவே என்றும் அறியாத ஞானம், ஐஸ்வர்யம், தர்மம், வைராக்கியம் முதலிய நற்பண்புகள் அமைந்தவர் இவர் தம்ரூபம் என்கிறார்.
பாற்கடலை கடைந்த போது அமுதத்துடன் கூடவே வெளிப்பட்ட ‘உச்சைஸ்வரஸ்’ என்ற குதிரையாகவும்,
யானைகளில் சிறந்தது கஜேந்திரன். இந்த யானைகளில் சிறந்தது அமுதத்துடன் வந்த ‘ஐராவதம்’ இது என் ரூபம் என்கிறார்.
மனிதர்களுள் ஆளுமை, ஆட்சி, அறவழியில் நடத்திச் செல்லும் அரசனாகவும் இருக்கிறேன்.
நான் ஆயுதங்களுள் வஜ்ராயுதமாகவும், பசுக்களுள் காமதேனுவாகவும் உள்ளேன். சாஸ்திர முறையில் மகப்பேற்றுக்கு காரணமான மன்மதனாக இருக்கிறேன். சர்ப்பங்களுள் சர்ப்ப ராஜாவான வாசுகி ஆகவும் இருக்கிறேன்.
நான் நாகங்களுள் ஆதிசேஷன் ஆகவும்,
நீர்வாழ்வன வற்றிற்கும், சல தேவதைகளுக்கும் தலைவனான வருணனாகவும் இருக்கிறேன்.
அதாவது, மனித, தேவ, உலகங்களில் உள்ள அடக்கி ஆளும் அதிகாரிகளுக்கு எல்லாம் தலைவன் எமதர்மராஜன்.
அவர் கொடுக்கும் தண்டனை நியாயமாகவும், தர்மமாகவும், நன்மை செய்வதாகவும், பாவத்தைப் போக்குவதாகவும் இருக்கும். இவர் லோகபாலகர். ஞானியான பக்தர்.ஆகவே, எமனைத் தம்ரூபம் என்கிறேன்.
நான் தைரியர்களுக்கு பிரகலாதனாகவும், காலம் கணிப்பவர்களுள் காலமாகவும், விலங்குகளுள் சிங்கமாகவும், பறவைகளுள் கருடனாகவும் இருக்கிறேன்.
நான் தூய்மைப் படுத்துபவைகளுள் காற்றாகவும், ஆயுதம் தாங்கியவர்களுள்
ஸ்ரீராம பிரானாகவும் இருக்கிறேன்.
மீன் இனங்களுள் முதலையாகவும், நதிகளுள் பாகீரதியான கங்கையாகவும் இருக்கிறேன். அதாவது நான் நீராகப் பெருகி பிரம்மாவினுடைய கமண்டலத்தில் கங்கையாக நிறைந்தேன் ஆகையால், கங்கை என்பது பிரம்மத்தின் சுயரூபம் அதன் பெருமை அளவற்றது அதனால் கங்கையாகவும் இருக்கிறேன்.
அர்ச்சுனா!படைப்புகளில் ஆரம்பம் ஆகவும், முடிவாகவும், நடுவாகவும் நான்தான் இருக்கிறேன்.
வித்தைகளுள் ஆத்ம வித்தையாகவும், பிரதிவாத தர்க்கம் செய்பவராகவும் தீர்மானம் செய்யும் வாதமாகவும் இருக்கிறேன்.

