தேவர்கள், ஒளிமிக்கவர்கள், பூஜிக்கத் தக்கவர்கள், பரம தேகமயமான பகவான்
ஸ்ரீ கிருஷ்ணனை மேற்கூறிய சிறப்புகளுடன் அர்ச்சுனன் பார்த்தார் என்கிறான் சஞ்சயன்.
ஆகாயத்தில் ஆயிரக்கணக்கான சூரியர்கள் ஒரே காலத்தில் உதயமானால் எத்தகைய பிரகாசம் ஏற்படுமோ அந்தப் பிரகாசம் விஸ்வரூப பரமாத்மாவின் பிரகாசத்திற்கு நிகராக ஒரு கால் இருக்கக் கூடுமோ என்கிறார் திருதராஷ்டிர்.
விராட் விஸ்வரூபம் எடுத்த பகவானின் ஒளிக்கு உவமையே கூற முடியாது. ஆகாயத்தில் ஆயிரம் நட்சத்திரங்கள் ஒரே நேரத்தில் உதித்தாலும் சூரியனின் ஒளிக்கு இணையாக முடியாது.
ஒரே நேரத்தில் ஆகாயத்தில் ஆயிரம் கதிரவன் உதித்தாலும் அந்தப் பிரகாசம் கூட விராட் விஸ்வரூபமான பகவானுடைய ஒலிக்க இணையாகாது.
காரணம் என்னவென்றால் ஆதவனின் ஒளி அநித்யமானது, பௌதிகமானது, அளவுக் கடங்கியது, விராட் விஸ்வரூபனுடைய ஒளியோ தெய்வீகமானது. நித்தியமானது, உலகியலுக்கு அப்பாற்பட்டது, அளவற்றது என்கிறார் சஞ்சயன்.
தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், புழுக்கள், பூச்சிகள், மரங்கள் முதலிய போகங்களை அனுபவிப்பன.பூமி,
ஆகாயம், சொர்க்கம், பாதாளம் முதலிய அனுபவிக்கும் இடங்கள்.
எண்ணற்ற போகப் பொருட்கள் இப்படி பலவாறாகப் பல கூறுகளாகப் பிரிந்தவற்றையும், பிரம்மாண்டம் முழுவதையும் பகவானுடைய திருமேனியில் ஓர் இடத்தில் இருப்பதாகப் பார்த்தார்.
அகில பிரபஞ்சத்தையும் என்னுடைய ஒரு சிறு பகுதியில் தாங்குகிறேன் என்று பத்தாவது அத்தியாயத்தின் இறுதியில் கூறியது போல் அகில பிரபஞ்சத்தையும் அர்ச்சுனன் பார்த்தார்.
பகவானுடைய திருமேனியில் சகல அண்ட சராசரங்களையும் விஸ்வரூபத்தில் ஒரே இடத்தில் கண்டார் அர்ச்சுனன்.
அதன் பிறகு வியப்பு மிகுந்து மெய்சிலித்தது. ஒளி மிகுந்த விஸ்வரூப பரமாத்மாவை சிரத்தை உடனும், பக்தியுடனும் தலையால் வணங்கிக் கைகூப்பி வணங்கினார்.
பல அரசர்களை வென்று செல்வம் கொண்டு வந்ததனால் அர்ச்சுனனுக்கு தனஞ்ஜெயன் என்ற பெயரும் உண்டு
தற்போது மகிழ்ச்சியும், ஆச்சரியமும் கொண்டார். புளகாங்கிதம் அடைந்தார். இவ்வளவு ஈஸ்வர சக்தி வாய்ந்த பகவானுடைய விஸ்வரூபத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை.
உலகிகளுக்கு முற்றிலும் மாறுபட்ட விஸ்வரூபத்தை பார்த்தவுடன் அவருடைய உள்ளத் திரையில் பகவானுடைய அளவற்ற பிரபாவத்தின் ஓர் அம்சம் பதிந்தது “சற்றே பகவானுடைய பிரபாவத்தை உணர்ந்தார்.” அதுவே, அவரை எல்லையற்ற வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது.

