• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

adminBy adminMarch 7, 2025No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேசவா! பிரம்மத்தில் ஒன்றிய யோகி வருந்துவதில்லை என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! பிரம்மம் ஆகிவிட்டவர் எங்கும் எதிலும் பிரம்மம் என்ற புத்தி கொண்டவர் ஆதலினால் உலகியல் பொருள் எதுவும் அவருக்கு வேராகவோ, கவர்ச்சி உள்ளதாகவோ, தன்னுடையது என்றோ தோன்றுவதில்லை.

ஆகவே, உடல் உட்பட எதனுடன் எது வந்து சேர்ந்தாலும், எது பிரிந்தாலும் அவரிடம் எத்தகைய மாறுதலும் ஏற்படுவதில்லை.

எந்த நிலையிலும் அவர் சிறிது கூடக் கவலையோ, வருத்தமோ கொள்வதில்லை அவர் ஆசைகள் எல்லாம் நிறைவேறப் பெற்றவர்.

ஏனெனில், எந்தப் பொருளும் பிரம்மம் தவிர வேறில்லை. ஆதலால், அவர் எதையும் விரும்புவதில்லை.

அவருக்கு எதிலும் வேற்றுமை காணும் எண்ணம் இராது.
அத்தகையவர்  சம பாவனை உள்ளவர் ஆவார். 

ஞான யோகத்தின் பயன் இது தான். ஞான யோகத்தினால் பெறக்கூடிய மிக உயர்ந்த நிலை ‘தத்துவ ஞானம்’ அல்லது ‘பராநிஷ்டை’ என்பர். இந்தப் பராபக்தி பரமாத்மாவின் உண்மை சுயருபத்தை நேரில் காணச் சென்று அதனுடன் இரண்டறக் கலந்து விடச் செய்கிறது.

அந்தப் பராபக்தியின் மூலம் அவன் பரமாத்மாவான என்னை யார் என்றும் எத் தன்மையானவர் என்றும் உண்மையில் உள்ளது உள்ளபடியே தத்துவ ரீதியாக அறிகிறான்.

அந்தப் பராபக்தியின்  மூலம் என்னைத் தத்துவ ரீதியாக அறிந்து அக்கணமே என்னிடம் ஐக்கியம் ஆகிறான்.

ஞான யோகம், பக்தி யோகம், கர்மயோகம், தியான யோகம் முதலிய எல்லா சாதனைகளுக்கும் உரிய பயன். இதன் மூலமாக சாதகன் பரமாத்மாவின் சுயரூபத்தை உள்ளபடி அறிந்து அடைகிறான்.

இந்த பராபக்தி என்ற தத்துவ ஞானத்தை அடையும் பொழுதே, அந்த யோகி தத்துவ ஞானத்தின் மூலம் என் உண்மையான சுயரூபத்தை உள்ளபடி அறிகிறான்.

நிர்குண நிராகர ரூபம், சகுண நிராகார ரூபம், சகண சாகார ரூபம், உருவமற்ற நான் எப்படி உருவத்தைப் பெறுகிறேன். பிறகு, மறுபடியும் எப்படி உருவமற்றவனாக ஆகிறான். என்பனவற்றை அறிந்த பின்னர், அவன் அறிய வேண்டியது ஏதும் எஞ்சி இராது. எனவே, அவனுடைய பார்வையில் எவ்வித வேற்றுமையும் கிடையாது.

ஞான யோக சாதனையின் மூலம் அடையப் பெறும் நிர்குணமான உருவமற்ற பிரம்மமும், சகுணமான உருவமுள்ள பிரம்மமும் ஒன்றுதான் என்பதைக் குறிப்பிடுகிறார்.

ஒன்று என்று அறிந்த பின் பரமாத்மாவின் சுயரூப ஞானம் பெற்ற உடனேயே பரமாத்மாவை அடைந்து விடுகிறான். அங்கே கால இடைவெளி கிடையாது. உள்ளவாறு அறிந்த பின் பகவானுடன் ஐக்கியமாகி விடுகிறான் என்கிறார்.

அர்ச்சுனா! என்னையே புகழாகக் கொண்ட கர்மயோகி எல்லாக் கர்மங்களையும், எப்பொழுதும் செய்து கொண்டு இருப்பினும் எனது அருளால் நிலையான என்றும் உள்ள அழியாத பரமபதத்தை அடைகிறான்.

அதாவது, கர்மயோகம் எளிதில் செய்யக்கூடியது. சாங்கிய யோகி எல்லா உடைமைகளையும், போகங்களையும் அறவே துறந்து தனிமையான இடம் சென்று இடைவிடாது பரமாத்மாவே தியானத்தில் நிறுத்தப் பழகி பகவானை அடைகிறான்.

ஆனால், பகவானையே  புகழாகக் கொண்டு விட்ட கர்மயோகி தனது வர்ணா சிரமத்திற்கு ஏற்ப கடமைகளைச் செய்து கொண்டே இருந்தாலும் பகவானை அடைந்து விடுகிறான். எனவே, இருவருக்கும் பயனில் எவ்வித வேறுபடும் கிடையாது என்கிறார் கிருஷ்ணன்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
admin

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.