நான்காவது
சதாசிவ மூர்த்தி
சதாசிவ மூர்த்தி படிக நிறம் கொண்டவர். இவர் சடை முடி தாங்கிய தலையைக் கொண்டவர். ஐந்து திருமுகங்கள் உடையவர்.
சதாசிவ மூர்த்தி ஈசானம், தற்புருடம், வாமம், அகோரம்,
சத்தியோசாதம் முதலாகிய ஐந்து திருமுகங்களுடன் எழுந்து அருளிஇருப்பவர். பத்து கரங்களை உடையவர்.
வலது கையில் சூலம்,
கட்வங்கமும், வாளும், பீஜாபூரகமும், அபய முத்திரையுடன் இருக்கிறார்.
இடது கையில் நாகம், பாசம், பரதம், மணி, நீலோற்பலத்துடன் இருக்கிறார்.
ஈசான முகத்தில் இருந்து இருபத்தெட்டு ஆகமங்களை அருளச் செய்தார்.
1-காமிகம்,2-யோகசம், 3-சித்தியம்,4-காரணம், 5-அசிதம்,6- தீப்தம், 7-சூட்சுமம்,8- சஹசிரம், 9-அம்சுமான்,
10-சுப்ரபேதம்,11- விஜயம்,
12-நிசுவாசம்,
13-சுயம்புவம், 14-ஆக்கிநேயம்,15- வீரம், 16-கௌரவம்,17- மகுடம், 18-விமலம்,
19-சந்திரஞானம் 20-முகப்பிம்பம், 21-புரோத்கீதம்,
22-லலிதம்,23- சித்தம், 24-சந்தானம், 25-சர்வோத்தமம், 26-பரமேஸ்வரன்,
27-கிரணம், 28- வாதுளம் எனப்படுகிறது.
சிவ ஆகமங்களுள் முதலில் கூறிய பத்தும் சிவ வேறுபாடுகள் ஆகும். அடுத்து உள்ள பதினெட்டும் உருத்திர பேதங்கள் ஆகும்.
“வேதமோ டாகம மெய்யாம் இறைவன்நூல்
ஓதும் பொதுவுஞ்
சிறப்புமென் றுன்னுக
நாதன் அருளவை நாடிலிரண் டந்தம்
பேதம தென்பர் பெரியோர்க்கு அபேதமே”
திருமந்திரம்.

