• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»அட்டாட்ட விக்கிரக லீலை
ஆன்மீகம்

அட்டாட்ட விக்கிரக லீலை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாJuly 28, 2025No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

9- சோமாஸ்கந்த மூர்த்தி

      கந்தபுராணம்

எந்தை சக்திகள் உயிரெலாம் ஏங்குறும்  எல்லை
முந்து போலஒன் றாகியே கூடிய முறைபோல் அந்தம் இல்லதோர் மூவிரு வடிவுமொன் றாகிக்
கந்த னென்றுபேர் பெற்றனன் கவுரிதன் குமரன்

ஏல வார்குழல் இறைவிக்கும் மெம்பிரான் றனக்கும் பால னாகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞான மேலுறு மிரவொடு பகலுக்கு நடுவாய் மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறு ஒக்கும்.

பணி படர்ந்த கயிலை மலையில் சிவபெருமானும், பார்வதியும் வீட்டிலிருக்கும் போது… தேவர்கள் சிலர் ஓடி வந்து நந்தி தேவரை வணங்கினர். உடனே, மகாதேவனை காண வேண்டும் என வேண்டி நின்றனர்.

நந்தி தேவர் இச்செய்தியே மகாதேவனிடம் கூறினார்.

மகாதேவனும் தேவர்களை காண விருப்பம் கொண்டு அழைத்தார்.

தேவர்கள் சிவனை வணங்கி மகாதேவனே! மகேந்திர புரியில் அரசு செய்யும் சூரபன்மன் என்னும் அசுரன் எங்களைக் கொடுமைப் படுத்துகிறான்.

வல்லமை வாய்ந்த ஓர் மகனை பெற்று எங்களின் துன்பங்களை நீக்கி அருள் புரிய வேண்டுகிறோம் என வேண்டி கின்றனர்.

ஆதிமூர்த்தி அவர்களுக்காக மனம் இரங்கி தமது ஆறு திருமுகங்கள் தோறும் விளங்கும் நெருப்பு கண்ணில் இருந்து ஆறு நெருப்பு பொறிகள் ஜோதிமயமாய் வெப்பத்துடன் வெளிவரும்படி அருள் செய்தார்.

அப்பொறிகள் பார் முழுவதும் பரவின இதைக் கண்ட பார்வதி வெப்பம் பொறுக்க மாட்டாமல் தனது பாதத்தில் அணிந்திருந்த சிலம்புகள் ஒன்றுடன் ஒன்று மோதும்படி விரைவாக நடந்து அந்தப்புரம் அடைந்தார்.

தேவர்கள் சித்தம் கலங்கினர். அவர்கள் சிவனை நோக்கி ‘தீய வரை வெல்லத்தக்க சிறுவனை கேட்ட எங்களுக்கு தீப்பொறிகளை அருளிச் செய்தால் எவ்வாறு பிழைப்போம் என நடுங்கிக் கூறினர்.’

‘ மனம் இரங்கிய சிவபெருமான் அக்கினி, வாயு தேவர்களை அழைத்து இப் பொறிகளை நீங்கள் இருவரும் தாங்கிக் கொண்டு போய் கங்கையில் விடுக’ என்று  கட்டளையிட்டு அவர்களுக்கு அப்பொறிகளை தாங்கும் வண்ணம் பலமும் தந்தார்.

இரு தேவர்கள் அப்பொறியை கங்கையில் வைத்தனர்.

கங்கையும் அப்பொறிகளைச்  சரவணப் பொய்கையில் சேர்த்து அகமகிழ்ந்தாள்.

அப்பொழுது சரவணப் பொய்கையில் ஆறு திருமுகங்களோடும், பன்னிரு தோள்களுடனும் சிவன் குமாரன் தோன்றினார்.

அந்த ஆறு குழந்தைகளுக்கும் கார்த்திகை பெண்கள் பாலூட்டி வளர்த்து வந்தனர்.

வானவர்கள் அகம் மகிழ்ந்து வணங்கிச் சென்றனர்.

பார்வதியின் திருவடி சிலம்புகளில் இருந்து சிதறிய நவரத்தினங்கள் பார்வதியின் சாயலை யுற்று இருந்தன.

அவைகளை சிவன் அழைக்க கட்டழகு நோக்கி அவைகளும் கர்ப்பம் அடைந்தன.

இதைக் கண்ட பார்வதி தேவி ‘கர்ப்பம் உண்டாகாமல் தாங்குமீன்’ என சபித்தார்.

அவ்வனிதை இடுப்பு வழியால் துன்பப்படும்போது உடலில் இருந்து வேர்வை துளிகள் வெளிவந்தன. அவ்வியர்வையில் இருந்து ஒரு லட்சம் வீரர்கள் உதித்தனார்.

பின் பார்வதியின் விருப்பப்படி அவர்கள் வீரவாகு, வீரகேசரி, வீர மகேந்திரன், வீரமகேசன், வீரபுரந்தரன்,
வீரராட்சசன்,
வீரமார்த்தாண்டன், வீரராந்தகன், வீரதீரன், என்னும் ஒன்பது புதல்வரைப் பெற்றுக் கொடுத்தனர்.

சிவன் உவமையை நோக்கி இந்த இலட்சத்து ஒன்பது பேரும் நமது புத்திரர்கள் என்று கூறி அவர்களை நோக்கி “எனது மைந்தன் கந்தனுக்கு உதவியாக செயல்படுக” எனக் கட்டளையிட்டார்.

சரவணப் பொய்கையில் வளரும் குழந்தையைக் காண சிவனும், பார்வதியும் இடப வாகனத்தில் ஏறிச் சென்றனர்.

தேவர்களும் பின் தொடர்ந்தார்கள்.
சரவண பொய்கையில் வளரும்  குழந்தைகளை அம்மை எடுக்கையில் குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஒரே குழந்தையாக மாறின.

அக்குழந்தை ஆறு திருமுகமும், பன்னிரு திருக்கரமும் கொண்ட தாக விளங்கியது.

குழந்தைக்கு ‘கந்தன்’ எனப் பெயர் சூட்டினர். அங்கு இருந்தவர்களுக்கு வேண்டிய வரங்கள் கொடுத்து சிவனார் இடப வாகனத்தில் கந்தன், உமையுடன் வெள்ளி மலை அடைந்தார்.

தேவியாருக்கும், சிவனுக்கும் இடையே கந்தன் வீற்றிருந்தார். அத்தோற்றமே சோமாஸ் கந்த மூர்த்தி என பெயர் பெற்றது. சோமாஸ்கந்த மூர்த்தியை வணங்கி எல்லா நலனும், வளமும் பெறுவோம்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.