Author: தமிழ்சங்கம்

ஏனோ பிறக்கவில்லை – பிரேமா நான் பேசாத கவிதையாய் !நான் கேட்காத இசையாய் !நான் வரையாத ஓவியமாய் !நான் தீண்டாத தென்றலாய் !என ஏன் ஆனாய் ?என் வயிற்றில் உதித்து என் கையில் வரும் முன் ஏனோ பிறக்க மறுத்தாய் கருவறையே கட்டி வைத்தேன் உனக்கு அதை ஏன் கல்லறையாய் ஆக்கிக்கொண்டாய் ?உற்றார் உறவுக்கு உன்வருகையை கூறியபின் ஏன் என் உறவை வேண்டாம் என கலைந்தாய் பிறப்பிற்கு முன்னே உன் விதியை அறிந்தாயோ கர்ப்பத்தில் கலைவதே சரி என நினைத்தாயோ ஆயிரம் கனவுகளை கண்களில் ஏந்தி !அடிவயிற்றை அவ்வப்போது தொட்டு ! நாட்கள் ஒன்றொன்றும் மனதால் கணக்கிட்டு !இறங்காத சோற்றை உனக்காக சாப்பிட்டு ! வாய் வழியே குடலேவருமளவுக்கு வாந்தி எடுத்து !சொல்ல முடியாத சோகங்கள் பல தாங்கி இருந்தாலும் !என்று நீ வருவாய் !என்று உன்னை தூக்குவேன் ! என காத்திருந்த என்னை ஏன் ஏமாற்றினாய் ?ஈரைந்து மாதம் சுமந்தால்…

Read More