• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாJanuary 9, 2025No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேசவா! “ரிஷிகளால் பலவாறு சொல்லப்பட்டு இருக்கிறது என்று கூறுவதன் கருத்தை விவரியுங்கள்” என்கிறான் அர்ச்சுனன்.

மந்திரம் கண்டவர்கள், சாஸ்திரங்களையும், இயற்றியவர்கள் ரிஷிகள். எல்லாம் விவரங்களையும் தங்கள் நூல்களிலும், புராண இதிகாசங்களிலும், பல விதங்களில் விவரிவாக வர்ணித்து இருக்கிறார்கள். அவற்றின் சாரத்தை கிருஷ்ணன் மிக சில சொற்களில் கூறுகிறார்.

ருக் வேதம், யாஜுர் வேதம், சாமவேதம், அதர்வண வேதம் மற்றும் இந்த நான்கு வேதங்களுடைய சம்கிதை, பிராம்மனம் எனப்படுகின்ற இரு பகுதிகள் என்று பொருள்.

உபநிஷத்துக்கள் அனைத்தும் வேதங்களின் வெவ்வேறு சாகைகளும் இவற்றில் அடக்கம். இவை அனைத்திலும் இந்த தத்துவம் பிரித்துக் கூறப்படுகிறது.

இவ்விதம் ரிஷிகள், வேதங்கள்,
பிரம்மாந்திரங்கள் சான்றுகளாகக் கூறுகிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! நுண்ணிய ஐம்பெரும் பூதங்களும், அகங்காரமும், புத்தியும், மூலபிரகிருதியும், பத்துப் புலன்களும், மனமும், புலன்களுடைய நுகர் பொருள்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்தையும் குறிக்கும் எனக் கூறுகிறார் கிருஷ்ணன்.

கேசவா! பத்துப் புலன்கள் என எவற்றை குறிப்பிடுகிறீர்கள் என்பதைக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! வாக்கு, கை கால், ஆண் பெண், குறி, புட்டம் இவை ஐந்தும் செயற்புலன்கள் ஆகும். காது, சருமம், கண்கள், நாக்கு, மூக்கு இவை ஐந்தும் அறியும்புலன்கள் ஆக இவை பத்துப் புலன்கள் இவற்றிற்குக் காரணம் அகங்காரம் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

விருப்பு, வெறுப்பு,இன்பம், துன்பம், உடற்கட்டு, சைதன்ய சக்தி மேலும் உறுதி ஆகிய மாறுபாடுகளும் உடல் சுருக்கமாகும். 

‘இச்சை’ என்பதை விவரியுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! எப் பொருள்களை சுகத்திற்குக் காரணம் என்றும், துயரம் போக்குவன என்றும் மனிதன் கருதுகிறானோ அவற்றை அடைவதற்கு ஏற்படும் பற்றோடு கூடிய விருப்பம் ‘இச்சை’ எனப்படும்.

வாசனை, பேராசை, எதிர்பார்ப்பு, பேராவல், விருப்பம் முதலிய பல வகைகள் உண்டு. இது மனதின் விகாரம். ஆகவே, உடலின் விகாரங்களில் ஒன்றாக என்னப்படுகிறது.

துயரத்திற்குக் காரணமாகவும், சுகத்திற்குத் தடையாகவும் தோன்றும் பகைமை உணர்ச்சி துவேசம் அல்லது வெறுப்பு எனப்படுகிறது.

பகை, பொறாமை, அருவருப்பு, கோபம் என்ற நிலைகளில் வெளிப்படும் இதுவும் மனதின் விகாரமே. ஆகவே, இதையும் உடலின் விகாரம் என்கிறார்.

வேண்டிய பொருள் கிடைப்பது வேண்டாதது விலகுவது இதனால் உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சி சுகமாகும்.

வேண்டாதது வந்து சேர்ந்தாலும், வேண்டியது விலகினாலும் ஏற்படும் மன வேதனை தான் துக்கம். இவைகளும் மனதின் உடல் விகாரங்கள் ஆகும்.

சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற மூன்றும் சாத்விகமான நிலை நிறுத்தும் சக்தியின் ஒரு அம்சமான உறுதியை கூறுகிறார். இது மனதின் விகாரத்தில் அடங்கும் இவைகள் எல்லாம் உடலின் விகாரங்களின் சுருக்கமாகும் என்கிறார் கிருஷ்ணன்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.