• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாJanuary 10, 2025No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

தற்பெருமை இன்மை, தன்னிடம் இல்லாத நற்குணங்களை இருப்பதாகக் காட்டிக் கொள்ளாமை, எந்த உயிரினத்தையும், எந்த வகையிலும் துன்புறுத்தாமல் இருத்தல்.

பொறுத்துக் கொள்ளுதல், மனம், வாக்கு முதலியவற்றில் நேர்மை, சிரத்தையுடனும், பக்தியுடனும், பெரியோர்களுக்குப் பணிவிடை செய்தல்.

உள்ளும், புறமும், தூய்மையாக இருத்தல். உள்ளத்தில் உறுதி, மனம் புலன்களோடு கூடிய உடலைக் கட்டுப்படுத்துதல் ஏற்படும்.

அதாவது தன்னைச் சிறந்தவன், மதிப்பிற்குரியவன், போற்றுதற்குரியவன், மிகப் பெரியவன் என்று நினைத்துக் கொள்வது. மற்றவர் அப்படித் தன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டாட வேண்டும் என விரும்புவது. தான் விரும்பா விட்டாலும் பிறர் அப்படிக் கொண்டாடும் போது மகிழ்ச்சியோடு ஏற்பது. இது தற்பெருமை கொள்வதாகும்.

தற்பெருமை இல்லாதவனுக்கு மரியாதை, கௌரவம், புகழ், பூஜை முதலியவற்றில் மகிழ்ச்சி இருக்காது என்பது ஒரு புறம் இருக்க. அவற்றில் இருந்து ஒதுங்குவதும், விரக்தியும் கூட உண்டாகும்.

பெருமை, புகழ், கௌரவம், போற்றுதல் இவற்றை பெறுவதற்காகவே பொருளாசை உடன் பிறரை ஏமாற்றுவது.

தன்னை தர்மாத்மா, கொடை வள்ளல், பகவானின் பக்தன், ஞானி, மகாத்மா என்று பறைசாற்றிக் கொள்வது ஆடம்பரமாகும்.

புகழில் கொஞ்சம் கூட விருப்பம் கொள்ளாததால், தம்முடைய உண்மையான தர்ம  சிந்தையையும், நற்பண்புகளையும், பக்தி முதலிய நடத்தைகளையும் கூடப் பிறர் காணும் படி வெளிப்படுத்துவதற்கு கூசுவான். இப்படிப்பட்டவன் இல்லாத பண்புகளை வெளிப்படுத்துவானா? என்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! ‘அகிம்சை’ என்பதை விவரித்துக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! எந்த பிராணிக்கும் மனதாலும்,
சொல்லாலும், செயலாலும் ஒரு பொழுதும் ஒருவிதமான துன்பமும் தராமல் இருப்பது அகிம்சை ஆகும்.

மனதில் பிறருக்குத் தீங்கு நினைப்பது, சொற்களால் திட்டுவது, இகழ்வது, பிறருக்கு வருத்தம் ஏற்படும்படி இதமில்லாத வார்த்தைகளைச் சொல்வது, உடல் உறுப்புகளால் பிறரை அடிப்பது, துன்புறுத்துவது, தீங்கு விளைவிப்பது இவை எல்லாம் இம்சைகள்.இவைகள் இல்லாமல் இருப்பது அகிம்சை.

அகிம்சையை முழுமையாகக் கடைபிடிப் பவர்களுக்கு எவரிடமும் பகைமையோ, வெறுப்போ இருக்காது. ஆகவே, யாருக்கும் தீங்கு செய்ய மாட்டார்கள்.

பிறருக்குத் துன்பம் விளைவிக்கக் கூடிய எதையும் செயலையும், அச்சுறுத்தவும் மாட்டார். இத்தகையவர் இருக்கும் இடத்தில் விரோத பாவம் கொண்டுள்ள பிராணிகளும் தமது இயல்பான பகைமையை விட்டு விடுகின்றன என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார் என்கிறார் கிருஷ்ணன்.

அர்ச்சுனா! பொறுத்துக் கொள்ளல் சாந்தியாகும். தனக்கு தீங்கு செய்தவர்களுக்கும் மனதாலும் தண்டனை கொடுக்காமல், பழிவாங்காமல் அவன் செய்த தீங்கைத் தீங்கு என்று நினையாமல் பொறுத்துக் கொள்வது ‘சாந்தி’ எனப்படும்.

மனம், மொழி, மெய்களில் நேரிய நடத்தையுடன் இருப்பது. இப்படி அமையப் பெற்றவர் அனைவரிடமும் நேர்மையாக நடந்து கொள்வார். கபடமாக நடக்க மாட்டார்.

அவருடைய நடை முறையில் மற்றவரைக் கவிழ்க்கும் முயற்சி, சூழ்ச்சி, கபடம் இருக்காது. அவர் உள்ளும், புறமும் எப்பொழுதும் ஒரே மாதிரி நேர்மையாக நடந்து கொள்வார்.

குரு பக்தி உடையவராக இருப்பர். சிறத்தையுடனும், பக்தியுடனும்,மனம்,மொழி,
மெய்களால் அவருக்கு எல்லாவிதமான சுகமும் தரக்கூடியதை செய்வது, அடிபணிந்து  வணங்குவது, அவர் ஆணைகளை நிறைவேற்றுவது, அவர் மனம் உருகுமாறு நடந்து கொள்வது குரு பக்தியின் அடங்கும்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.