• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாNovember 16, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேசவா! அவற்றை விவரித்து கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

விதுரர்

அர்ச்சுனா! பன்னிரண்டு ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பின், ஒரு வருடம் தலைமறைவாக வாழ்ந்து கெடுவை முடித்த பின், பாண்டவர்களுக்கு துரியோதனன் ராஜ்ஜியத்தை திருப்பித் தர மறுத்துவிட்ட நிலையில்…

தூதராகக்
கௌரவர்களிடம் சென்றேன். வெளிப் பார்வைக்கும் உபச்சாரம் செய்வது போல காட்டிக் கொள்வதற்காக துரியோதனன் பெரிய வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தான்.

விருந்துக்கு அழைத்தான் நான் மறுத்து விட்டேன்.

அதாவது, விருந்து இரண்டு விதமாகும். எங்கே பேரன்பு உள்ளதோ, அங்கு எது கிடைத்தாலும் அதை மகிழ்ச்சியோடு உண்ணலாம்.

பசியின் கொடுமையால் உயிர் பிரியும் நிலை ஏற்பட்டால் எங்கே, எது எந்த மனோபாவத்தில் வழங்கப்பட்டாலும் அதை ஏற்று வயிற்றை நிரப்பலாம்.

தற்சமயம் இந்த இரண்டு காரணங்களும் இல்லை. துரியோதனனிடன்  பிரியம் என்ற அம்சமே இல்லை.

எனக்கோ, பசியே இல்லை என்ற கிருஷ்ணன் மேலும் கூறுகிறார்.

அழையா விருந்தினராக பக்தனான விதுரர் வீட்டிற்குச் சென்றேன். அவர் கொடுத்த எளிய உணவை உண்டு மகிழ்ந்தேன் என்கிறார் கிருஷ்ணன்.

சுதாமா

அர்ச்சுனா! சுதாமா எனது இளமைக்காலத்து நண்பர். சுதாமாவிற்கு குசேலர் என்ற பெயரும் உண்டு. உஜ்ஜயினியில்
சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் சேர்ந்து படித்தார்.

சுதாமா வேதங்கள் அறிந்தவர்,போகங்களில் பட்டற்றவர், அமைதியானவர்,
புலன்களை அடக்கியவர், படிப்பு காலம் வரை நண்பராக இருந்த சுதாமா படிப்பு முடிந்தவுடன் பிரிந்து சென்றார்.

சுதாமா பரம ஏழை. ஒரு சமயம் தொடர்ந்து பல நாட்கள் அன்னம் என்பது பார்க்க கூட கிடைக்கவில்லை பசி கொடுமையில் காரணமாக அவர் மனையாளின் முகம் வாட்டமுற்றது.

குழந்தைகளின் பரிதாப நிலையைக் கண்டு அவள் உள்ளம்  குமுறியது  அவளுக்குத் தெரியும் துவாரகைக்கு அதிபதியான கிருஷ்ணன் தம் கணவருக்கு தோழர் என்று.

ஒரு நாள், அவள் பயத்தினால் நடுங்கிக் கொண்டே கணவனிடம் வீட்டு நிலைமையை எடுத்துச் சொல்லி துவாரகை சென்று வாருங்கள் என்று வேண்டிக் கொண்டாள்.

அவளுக்கு கணவரின் பற்றற்ற நிலை தெரியும். அதனால், பிரபு உங்களுக்கு செல்வத்தில் துளி கூட ஆசை கிடையாது என்பது எனக்குத் தெரியும். ஆயினும் பணம் இல்லாமல் இல்லறம் நடத்த முடியாதே!

மிகவும் கடினம் ஆயிற்றே! ஆகவே நீங்கள் உங்களுடைய பிரியமான நண்பரைப் பார்க்கப் போவது அவசியம் என்று தோன்றுகிறது என்று சொன்னாள்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.