• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாOctober 1, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேசவா! பரப்பிரம்ம பரமாத்மாவை அடைவதென்னும் முடிவற்ற ஆனந்தத்தை அனுபவிப்பான் என்று கூறுவதன் கருத்தை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சனா! உலகியலில் எவற்றை எல்லாம் மிகப்பெரிய சுகம் என்று கருதுகிறோமோ, உண்மையில் அவற்றில் எல்லாம் சுகமே இல்லை.

ஏனெனில், அவற்றில் எதுவும் மற்ற எல்லாவற்றையும் விட சிறந்ததாகவோ அல்லது எக்காலத்திலும் ஒரே விதமாகவோ இல்லை.

அதனால் வேதம் கூறுகிறது, எதைக் காட்டிலும் உயர்ந்தது இல்லையோ, அதுவே சுகம், அல்பத்தில் சுகம் இல்லை.

எந்தத்  தத்துவத்தில் வேறு ஒன்றைப் பார்க்க முடியாதோ, வேறொன்றைக் கேட்க  முடியாதோ. வேறொன்றை அறிய முடியாதோ,  அது ‘பூமா’ இது அழியாதது.

வேறொன்றைப் பார்க்கிறானோ, வேறொன்றைக் கேட்கிறானோ, வேறொன்றை அறிகிறானோ அது ‘அல்பம்’ அது அழியக்கூடியது.

இன்று இருந்து நாளை அழிவது உண்மையில் சுகம் அன்று, இதில் ஓர் அம்சத்தில் சுகம் இருப்பதாகக் கொண்டாலும் அது மிகவும் இழிந்ததாகும் மதிக்கத்தக்கதன்று.

‘யாக்ஞ வல்கிய மகரிஷி’ சுகங்களைச் சீர்தூக்கிப் பார்த்துச் சொல்கிறார்.

அகில உலக சாம்ராஜ்யமாவது பூவுலகில் உள்ள முழு ஐஸ்வர்யம், மனைவி, மக்கள், பணம், நிலம், உடல்நலம், பெருமை, புகழ் முதலிய எல்லா போகப் பொருட்களும் எவனிடம் உள்ளனவோ அவன் மனிதர்களில் எல்லோரையும் காட்டிலும் சுகம் உள்ளவன். ஏனெனில் மனிதனுடைய கணிப்பில் இதுதான் மிகப்பெரிய ஆனந்தம்.

இதை காட்டிலும் நூறு மடங்கு பித்ருலோகத்தில் உள்ள ஆனந்தம்.

அதிலும்  நூறு மடங்கு கந்தர்வலோகத்தில் உள்ள ஆனந்தம்.

அதிலும் நூறு மடங்கு தங்கள் கர்மத்தின் பயனாக தேவர்களாகிய விட்டவர்களின் ஆனந்தம்.

அதிலும் நூறு மடங்கு தேவர்களாகவே பிறந்தவர்களின் ஆனந்தம்.

அதிலும் நூறு மடங்கு பிரம்மலோகத்தில் பெறப்படும் ஆனந்தம். அதுவே, பாவமற்ற ஆசைகள் அற்ற சுரோத்திரியனின் உயர்ந்த ஆனந்தம்.

ஏனெனில் பிரம்மத்தை நேரடியாக அடைந்து விட்டவனுக்கு இந்த அளப்பரிய எல்லையற்ற சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஆனந்தம் கிடைக்கும்.

அதை வேறு எதனுடனும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. இந்த நிகரற்ற ஆனந்தம் பரப்பிரம்ம பரமாத்மாவை அடைந்தவனுக்கு அவனுடைய சுயரூபமாகவே இருக்கும் என்கிறார் கிருஷ்ணர்.

எங்கும் நிறைந்த சைதன்ய ரூபமான பரமாத்மாவிடம் இரண்டறக் கலந்த நிலை என்னும் யோகத்தோடு கூடிய ஆத்மா வாழும் எல்லாவற்றிலும் சம நோக்குடையவனுமான யோகி

ஆத்மா எல்லா சராசரங்களிலும் இருப்பதாகவும். மேலும், எல்லா சராசரங்களும் ஆத்மாவில் கற்பிக்கப்பட்டு இருப்பதாகவும் காண்கிறான்.

அதாவது, எவன் எல்லா பிராணிகளையும் பரமாத் மாவிலும் அப்படியே பரமாத்மாவை எல்லா பிராணிகளிலும் பார்க்கிறானோ, அப்பொழுது அவன் யாரிடமும் அருவருப்பு அடைய மாட்டான் என்கிறார் கிருஷ்ணன்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.