• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாDecember 5, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேசவா! அகிம்சை,
சமதா, துஷ்டி இவற்றை விவரிங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாமல் இருப்பது. அகிம்சை, சுகம், துக்கம், லாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி, புகழ்ச்சி, இகழ்ச்சி, மானம், அவமானம், நட்பு, பகை என்ற எத்தனை செயல்கள் வந்தாலும் சம பாவனையுடன் இருப்பது ‘சமதா ‘எனப்படுகிறது.

எது நேர்ந்தாலும் அது பிராப்தத்தின் பயன், தெய்வம் தந்தது என அறிந்து எப்பொழுதும் மனமலர்ச்சியுடன் இருப்பது ‘துஷ்டி’ மகிழ்ச்சியாகும்.

கேசவா! தவம், தானம், கீர்த்தி, அபகீர்த்தி இவற்றிற்கு பொருள் கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! தனக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை கடைப்பிடிக்கும் போது ஏற்படும் கஷ்டத்தை பொறுப்பது தவமாகும்.

தனக்குரிய பொருட்களைப் பிறருடைய நலனுக்காக வழங்குவது தானம் எனப்படுகிறது. உலகில் எல்லோரும் நம்மை கொண்டாடுவது கீர்த்தியாகும். நம்மை எல்லோரும் இகழ்வது
அபகீர்த்தியாகும் என விவரிக்கிறார் கிருஷ்ணன்.

கேசவா! சத்யம், தர்மம், அகிம்சை இவற்றிற்கு ஏன் எதிர்மறை சொற்கள் கூறவில்லை என்கிறான் அர்ச்சுனன்.

அர்ச்சுனா! துக்கம், அழிவது, பயம், அபகீர்த்தி இவை எல்லாம் இறைவன் படைப்பின் பயன். அவரவர் வினைப் பயனும் கூட எனவே, அது பகவானிடம் இருந்து உண்டானவை.

தீய குண செயல்கள் இறைவன் அளிப்பவை  அல்ல. மாறாக கீதையில் முன்பு கூறியபடி அறிமையினால் உண்டாகும் காமம் ஆகும்.

இவற்றை வேரோடு களைய வேண்டும் ஆகையினால் தான் சத்யம் இவற்றிற்கு எதிர்மறையான சொற்கள் சொல்லப்படவில்லை.

அர்ச்சுனா! உலகில் இங்கு பிறந்த அனைவரும் எனக்குள் தோன்றியவர்கள். ஏழு மகாமுனிவர்கள் பற்றி வாயு புராணத்தில் கூறப்படுகிறது.

இந்த ஏழு பேரும் சப்தரிஷிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். ஏழு நலன்கள் படைத்தவர்கள். 
மரீசி  1-  நீண்ட ஆயுள் உள்ளவர்கள்
அங்கிரஸ் 2-  மந்திரம் கற்றவர்கள்
அத்ரி 3- ஈஸ்வர தன்மையுடையவர்கள்
புவஸ்தியர் 4- தெய்வீக பார்வை படைத்தவர்கள்
புலகர் 5-குணம், கல்வி, ஆயுள் இவற்றில் முதிர்ச்சிஅடைந்தவர்கள்
கிரது 6- தர்மத்தை கண்டறிந்தவர்கள்
வசிஷ்டர்  7-கோத்திர முதல்வர்கள்.

இவர்களிடம் இருந்துதான் மக்கள் பெருகினார்கள் தர்மத்திற்கு வரைமுறைகளும் ஏற்பட்டது.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.