எல்லோருக்கும் முன் தோன்றியவர்களான ஸநகர், ஸநந்தனர்,ஸநாதனர்,
ஸநத்குமாரர் இவர்கள் நான்கு பேரும் பிரம்மா படைக்கும் தொழில் செய்வதற்கு முன் தவம் செய்தார். அத்தவத்தின் இடையில் தோன்றியவர்களே இவர்கள்.
இவர்கள் தர்மத்தையும், ஞானத்தையும் உபதேசித்தார்கள். எனவே, இவர்களுக்கு அனைவரும் சீடர்கள் என்ற முறையில் அவர்களுடைய குழந்தைகள் ஆவார்கள்.
பிரம்மதேவனுடைய ஒரு நாளில் பதினான்கு மனுக்கள் தோன்றுகிறார்கள். ஒவ்வொரு மனுவினுடைய அதிகார காலத்தையும்
மன்வந்தரம் என்று அழைக்கப்படுகிறது.
எழுபத்தொரு
சதுர்யுகங்களுக்கு கொஞ்சம் அதிகமான காலம் ஒரு
மன்வந்தரம்.
மனித வருட கணக்குப்படி ஒரு மன்வந்தரம் என்பது 30 கோடியே 67 லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு கொஞ்சம் அதிகம்.
தேவ வருடங்களின் கணக்குப்படி பார்த்தால் எட்டு லட்சத்து 52 ஆயிரம் தேவ வருடங்களுக்கு கொஞ்சம் அதிகமாகும்.
ஒவ்வொரு மன்வந்தரத்திலும் தர்மத்தின் நெறிமுறைகளை நிறைவேற்றவும், உலகத்தைக் காக்கவும் வெவ்வேறு சப்தரிஷிகள் உண்டாகிறார்கள்.
இப்படி மன்வந்தரம் முடிந்த பிறகு வேறு மனு மாறும் போது அவருடன் கூடவே சப்தரிஷிகள், தேவதைகள், இந்திரன், மனுகுமாரர்கள்
ஆகியோரும் மாறுகிறார்கள்.
தற்போது நடைபெறும் கல்பத்தின் மனுக்களின் பெயர்கள்…
1- ஸ்வாயம்புவ
2-ஸ்வாரோசிஷ
3-உத்தம
4-தாமச
5-ரைவத
6-சாட்சிஷ
இந்த ஆறு மன்வந்தரங்கள் நடைபெற்று விட்டன.
7-வைவஸ்வத மன்வந்தரம் நடந்து கொண்டு இருக்கிறது.
8- சாவர்ணி
9- தட்சி சாவர்ணி
10- பிரம்மசாவர்ணி
11- தர்மசாவர்ணி
12- ருத்ரசாவர்ணி
13- தேவசாவர்ணி
14- இந்திரசாவர்ணி
மன்வந்தரங்கள் வரப் போகின்றன.
இவர்கள் பிரம்மதேவனின் மனதில் உதித்தவர்கள் தான். ஆனாலும், பகவானின் ரூபம் தான் பிரம்மா. அவரிடம் இருந்து தோன்றியது பகவானிடம் இருந்து தோன்றியதுவே, இதில் சந்தேகம் தேவையில்லை.
எவன் என்னுடைய இந்த ஈஸ்வரத் தன்மையின் விரிவையும், யோக சக்தியையும் தத்துவ ரீதியாக அறிகிறானோ, அவன் அசையாத பக்தியோகத்துடன் கூடியவனாக ஆகிறான். இவ்விசயத்தில் சிறிதளவும் ஐயமில்லை என்கிறார் கிருஷ்ணன்.

