கேசவா! தேவரிஷியின் இலக்கணம் என்ன? அத்தகைய தேவதரிஷிகள் யார் யார் எனக் கேட்கிறான் அர்ச்சுனன்.
தேவைலோகத்தில் வசிக்கும் இவர்கள் மங்களமான தேவரிஷிகள் ஆவார்கள். இவர்களின் இலக்கணம் நடந்தது, நடக்கப்போவது, நடப்பது இவற்றை அறிவதுடன், எல்லா விதங்களிலும் சத்தியமே பேசுவது தேவ ரிஷிகளின் இலக்கணம் ஆகும்.
இவர்கள் இயல்பாகவே மிகுந்த ஞானம் அமையப் பெற்றவர்கள். இவர்களின் மாயையால் உலகியலில் தொடர்பு கொண்டவர்கள், தவத்தினால் புகழ் பெற்றவர்கள்.
இவர்கள் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஞானம் புகட்ட வல்லவர்கள். மந்திரங்களை உபதேசிப்பவர்கள். தமது ஈஸ்வரச் சக்தியால் எங்கும் செல்லக் கூடிய ஆற்றல் படைத்தவர்கள்.
தேவரிஷிகளில் பலர் உள்ளனர். சிலரை வாயுபுராணம் தெரிவிக்கிறது தர்மத்தின் புதல்வர்கள் ஆன நரன், நாராயணன் என்ற இருவர்.
கிரதுவின் புதல்வர்கள் ஆன வாலகில்யர்கள் புலகருடைய புதல்வரான கர்தமர், பர்வதர், நாரதர், கச்யபருடைய பிரம்ம ஞானிகளான அஸிதர், வத்சரர் இவர்கள் தேவதைகளை வசப்படுத்தி விட்டபடியால் தேவதரிஷிகள் எனப்படுகின்றனர்.
கேசவா! உங்கள் பெருமையை பாடுவதும், தங்கள் புகழை பரப்புவதையுமே பணிவாக செய்து கொண்டிருந்து ரிஷி முனிவர்களை கூறுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.
அர்ச்சுனா! தேவரிஷி நாரதர், அஸிதர், தேவலர், வியாசர் இந்த நால்வரும் பகவானுடைய உண்மையான தத்துவத்தை அறிந்தவர்கள்.
என்றும் சத்தியம் பேசுபவர்கள். என்றும் மதிக்கத்தக்க பெரியோர்கள் பகவானுடைய பெருமைகளைப் பரப்புவது தான் இவர்களுடைய வாழ்க்கையில் தலையாய பணி என்கிறார் கிருஷ்ணன்.
கேசவா! மேலே சொன்னபடி ரிஷிகள் மட்டும் சொன்னார்கள் என்பது பெரிய விசயம் அல்ல. நீங்களே என்னிடம் உங்களைப் பற்றி சொல்லி வருகிறீர்கள். ஆகவே, நான் உங்களை பரமாத்மாவாகவே எண்ணுவது சரிதான் என்கிறான் அர்ச்சுனன்.

