• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாDecember 9, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

கேசவா! என்னிடம் கூறியவற்றை எல்லாம் உண்மை என எண்ணுகிறேன் பகவானே! உங்களுடைய திருவிளையாடலுக்காக ஏற்றுக் கொண்ட ரூபத்தை அசுரர்கள் அறிந்து கொள்ளவில்லை. தேவர்களும் அறிந்து கொள்ளவில்லை.

ஆக்கம், காத்தல், அழித்தல் இம்மூன்று தொழிலையும் செய்யும் பிரம்மா, விஷ்ணு, சிவன் தாங்கள் என்று நம்புவதுடன் தாங்கள் செய்யும் உபதேசங்களையும் ஐயம் இன்றி ஏற்றுக் கொள்கிறேன் என்கிறான் அர்ச்சுனன்.

  முழுமையான ஈஸ்வர சக்தி, தர்மம், புகழ்,செல்வம், ஞானம், வைராக்கியம் இந்த ஆறும் ‘பக’ எனப்படும். இவற்றைப் பெற்றவன் ‘பகவான்’ என அழைக்கப்படுகிறார்.

எல்லா ஐஸ்வர்யங்களும் தம்பால் கொண்ட எல்லாம் அறிந்த
ஸ்ரீ கிருஷ்ணன் சாட்சாத் பரமாத்மா தான். இதில் சிறிதும் ஐயம் இல்லை என்கிறான் அர்ச்சுனன்.

மேலும், உயிரினங்களைத் தோற்றுவித்தவரே உயிரினங்களின் தலைவரே தேவர்களுக்கு தேவனே, உலக நாயகனே, மனிதர்களில் சிறந்தவரை, நீங்கள் தான் உங்களை அறிய வல்லவர் என்கிறான் அர்ச்சுனன்.

கேசவா! எந்த விபூதிகளினால், சிறப்புகளினால்  இந்த உலகங்களை வியாபித்து நிற்கிறீர்களா, அந்த தெய்வீகச் சிறப்புடைய உங்களுடைய விபூதிகளை, பெருமைகளை நீங்கள் தான் முழுமையாகக் கூறுவதற்கு திறமை வாய்ந்தவர் என்கிறான் அர்ச்சுனன்.

கேசவா! அகிழ உலகங்களிலும் பொலிவு, வலிமை, அறிவு, ஐஸ்வர்யம், குணம், ஆற்றல் இவற்றோடு கூடிய பொருட்கள் அனைத்தும் தெய்வீகமான விபூதிகள்.

இவைகள் எல்லாம் உங்களைச் சார்ந்தவை. ஆகவே, உங்களைத் தவிர வேறு யாரும் இவற்றை முழுமையாக அறிய மாட்டார்கள்.

உங்களைத் தவிர வேறு யாரு முழுமையாக வர்ணிக்கும் திறமை பெற்றவர்கள் அல்லர். எனவே, கிருபை செய்து நீங்களே அவற்றை எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வுலகில் விளக்கும் உங்களுடைய திவ்ய விபூதிகளை மட்டும் அறிய விரும்பவில்லை. நீங்கள் சொர்க்கம் மற்றும் எல்லா உலகங்களிலும் என்னென்ன விபூதிகளில் அளாவி இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் பற்றி கேட்க விரும்புகிறேன் என்கிறான் அர்ச்சுனன்.

கேசவா! சிரத்தையுடனும், பிரியமுடனும் இடைவிடாது நான் உங்களைச் சிந்திக்க வேண்டும். உங்களுடைய குணங்கள், பிரபாவங்கள், தத்துவங்கள் இவற்றுடன் உங்களை நன்றாக அறிவதற்கு உரிய உபாயங்களைக் கூறுங்கள்.

ஜடமாயும், சேதனமாயும் உலகில் பொருட்கள் எத்தனையோ உள்ளன. அவற்றில் குறிப்பாக எதை உங்களுடைய சுயரூபமாக பாவித்து மனதை அதில் நிலை நிறுத்த முடியுமா அதை விளக்குங்கள்.

உங்களுடைய குணங்கள், பிரபாவங்கள், தத்துவங்கள், ரகசியம் இவற்றை எளிதாக வழி சொல்லுங்கள் என்கிறான் அர்ச்சுனன்.

ஜனார்த்தன! உங்களது யோக சக்தியினால் விபூதியையும் மீண்டும் விரிவாகக் கூறுங்கள். ஏனெனில் உங்களுடைய அமுத மொழியைக் கேட்கின்ற எனக்கு திருப்பி ஏற்படவில்லை.

மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற ஆசை தவறிந்து இருந்து கொண்டே இருக்கிறது. எனவே, மேலும் சொல்ல என்ன இருக்கிறது என எண்ணாதீர்கள்.

தயவு செய்து இதைப் பற்றிச் சொல்லிக் கொண்டே இருங்கள்  இந்த அமுதத்தைப் பொழிந்து கொண்டே இருங்கள் என வேண்டுகிறான் அர்ச்சுனன். 

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.