• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»ஆன்மீகம்»கிருஷ்ணரின் கீதை
ஆன்மீகம்

கிருஷ்ணரின் கீதை

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாDecember 23, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பீஷ்மர், துரோணரும் தோற்றுப் போவதோ, கொல்லப் படுவதோ, மிகவும் கடினமான செயல் இவர்களும் உங்கள் பயங்கரமான வாயில் போகிறார்கள்.

மற்ற மன்னர்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். கர்ணன் சூரவீரத் தனத்தினால் ஏற்பட்ட கர்வம் காரணமாக அவன் கூட பகவான் உடைய வாயில் நுழைந்து அழிகிறான்.

பெரிய பெரிய கோரப் பற்களோடு கூடிய கோரமான  முகங்களில் இரண்டு பக்க படையைச் சேர்ந்த போர் வீரர்களும் நுழைந்து உமது பல் இடுக்குகளில் சிக்கி மடிவதைப் பார்க்கிறேன்.

சிலருடைய தலைகள் தூள் தூளாகி விட்டன அவர்கள் தலையற்ற அங்கங்களுடன் உங்கள் பற்களில் பரிதாபமாக சிக்கிக் கொண்டு உள்ளதையும் பார்க்கிறேன் என்று அர்ச்சுனன் கூறுகிறான்.

ஆறுகளுடைய பற்பல வேகமான நீரோட்டங்கள் இயற்கையாகவே கடலை நோக்கி பாய்ந்து ஒன்றாக கலந்து விடுவது போல, மண்ணுலக வீரர்கள் தீக்கொழுந்து வீசுகின்ற உங்களுடைய வாய்களில் புகுந்து இரண்டறக் கலக்கிறார்கள். 

அதாவது, ஜோதி மயமாக உள்ள உங்களுடைய முகங்களில் நுழையும் சூர வீரர்கள் ஆன பக்தர்களும் வெளிப்படையாகத் தோற்றமளிக்கும் தங்களுடைய உடல்களை…

உங்களுடைய முகங்களில் உள்ள பெரும் ஜோதிகள் எரியச் செய்து தாங்களும் ஜோதி மயமாக ஆகி உங்களுடன் ஒன்றி விடுகிறார்கள்.

விட்டில் பூச்சிகள் வெகுவேகமாக ஓடி வந்து கொழுந்து விட்டு எரியும் நெருப்பில் தாம்  அழிவதற்காக எவ்விதம் புகுகின்றனவோ…

அவ்விதமே, எல்லா மக்களும் தங்கள் அழிவிற்காக வெகுவேகமாக ஓடிவந்து உங்களுடைய வாய்களில் நுழைகிறார்கள்.

பயங்கர விஸ்வரூபத்தில் இருந்து நெருப்புக் கொழுந்து விட்டு எரிவது  போன்ற தீ நாக்குகள் அகில உலகங்களையும் துலாவி விழுங்குகின்றன.

இருப்பினும் திருப்தி அடையாமல் மேலும், மேலும் தீ நாக்குகள் துலாவுகின்றன அவற்றின் கடுமையான ஒளி மிகுந்த வெப்பத்தில் அகில உலகங்களும் தவிக்கின்றன என்கிறான். விஸ்வரூபத்தை கண்டு பயந்து அர்ச்சுனன்.

இந்தப் பயங்கரமான வடிவம் ஸ்ரீகிருஷ்ணனுடையது தான் என்பது
அர்ச்சுனனுக்குத் தெரியும். அச்சுறுத்தும் வடிவம் உண்மையில் யார் என்ற அறிந்து கொள்ள விரும்பினான்.

எனவே, ஆதி புருசனான உங்களைப் பற்றி இன்னும் தெளிவாக அறிய விரும்புகிறேன். ஈஸ்வரன் தான் என்பது தமக்குத் தெரியும் என்பதை வெளிப் படுத்தவே வணங்குகிறேன்.

ஆனாலும், அந்த பயங்கர விஸ்வரூபத்தைக் கண்டு பயப்படுகிறான். ஆகவே, “தயவு செய்து அருள் புரியுங்கள்” என்று வேண்டுகிறான்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

அட்டாட்ட விக்கிரக லீலை

September 1, 2025

உனக்காக பேசும் முருகன்

August 31, 2025

உனக்காக பேசும் முருகன்

August 30, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.