ஆத்ம சம்பந்த யோகம்
6- அத்தியாயம்
கேசவா ‘யுக்த’ என்ற விழிப்புணர்வோடு கூடிய யோகியைப் பற்றிக் கூறுங்கள் என்கிறான் அர்ச்சனன்.
அர்ச்சனா! தியானம் செய்யும் போது சாதகன் தூக்கம், சோம்பல், கவனமின்மை முதலிய இடையூறுகளில் இருந்து தப்பித்து நன்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கொஞ்சம் அயர்ந்தாலும் மனமும்,புலன்களும் அவனை ஏமாற்றி தியானத்தில் பலவிதத் தடங்கல்களை ஏற்படுத்திவிடும். இதைத் தான் ‘யுக்த’ என்று கூறுவார்கள்.
அதாவது, விழிப்புணர்வோடு கூடிய யோகி என்ற சொல் குறிக்கிறது. என்றவர் மனதை அடக்குவது பற்றியும் விவரிக்கிறார்.
அர்ச்சனா ஒரு விசயத்திலும் நிலை கொள்ளாமல் பல முறை தடுத்தும் கூட முரட்டுத்தனமாக இருப்பதும் பல விசயங்களில் அலைபாய்வதுமே மனதின் இயல்பு.
இந்த மனதை நன்றாகத் தடுத்து நிறுத்தா விட்டால் தியானயோக சாதனை புரிய முடியாது. ஆகவே, தியானம் செய்யும் போது மனதை வெளிப்பொருட்களில் இருந்து முற்றிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.

