108 சிவ தலங்கள்
1-கொங்கு நாட்டு தலம்
(திருப்புக்கொளியூர்) அவிநாசி
வழிகாட்டி விநாயகா! தரிசித்தோம் உன்னை வழிவிடுவாய் லிங்கேஸ்வரனை வணங்க அருள்வாய்! அவினாசி லிங்கா! கருணாம்பிகை துணைவா!
அடியெடுத்து வைத்து வருகிறோம்
ஆலயம்தொழ.
மடுவில் விளையாடச் சென்றனர் இருவர்! மாண்டான் முதலைப் பிடியில் ஒருவன்! பெற்றோர் துயர்கண்டு ஈசனிடம் சுந்தர்!
பதிகம்பாடி
வேண்டமுதலை உமிழ்ந்தது உயிருடன்.
தேள்விசம் இறங்கச் செய்யும் அம்பாள்!
தேன் உள்ள மலர்
போல்முகம்!
மலரச் செய்தாள் ஈசனுடன் கருணாம்பிகா! மனம் உருகிப் பாடிப் பணிவோம்.





