மார்கழி மாதம் 25ஆம் நாள்
பிரம்மா
உழைக்க உழைக்க வருவது உயர்வு
உணர்ந்து உழைக்க வருவது நிறைவு தழைக்க தழைக்க வருவது செழிப்பு
தடைகளைத் தகர்த்து வருவது முயற்சி
இழைக்க இழைக்க வருவது கதவு
இயக்கி மகிழ செய்வது கோவில்
இசைத்து இசைத்து வருவது இன்னிசை
இசையை ரசிக்கும் பிரம்மனே அருள்வாய்
விஷ்ணு
பாஞ்சாலிக்கு புடவை கொடுத்த கிருஷ்ணா
பாவம் போக்கி பரமபதம் கொடுப்பவனே குஞ்சித பாதம் தொழுகிறோம் கண்ணா
குறை போக்கி அருளும் கண்ணா மிஞ்சும் சிங்காரம் செய்யும் திருமாலே
சிந்தனை செய்தால் மனம் மகிழும்
நெஞ்சில் நிறைந்து நீங்காமல் இருந்து
நிம்மதி தந்து அருள்வாய் கண்ணா
சிவன்
புலித் தோல் அணிந்து அமர்ந்து
புவனம் காக்கும் இறைவா சிவனே
புலிப் பால் கொண்டு வந்த
ஐயப்பன் சபரி வாசன் அருள்வான்
எலி வாகனத்தில் அமர்ந்த கணபதி
எண்ணிய எண்ணம் ஈடேரச் செய்வான்
வலி கொடுத்த
வேல்உயிர் குடிக்காமல்
மன்னித்தது போல் குற்றம்குறைய அருள்வாய்.

