சிந்திக்க சில நூறு
175-சொன்னதை சொல்லும் கிளியாய் இராமல் சிந்தையில் புதிதாய் அறிவோம்.
176-பழமையும் புதுமையும் கலப்பு மணமாய் புதிய கோணத்தில் பிள்ளை.
177-இல்லாத நோய்க்கு மருந்து உண்பவன் இருக்கும் வாழ்வை தொலைத்தவன்.
178- செயல் என்பது சிந்தனையில் தொடக்கம் செழிப்பு என்பது முடிவு.
179-உள்ளம் உற்சாக ஊற்றாய் இருந்தால் உழைப்பு விளையாட்டுக் கருவி .
180-மணி பார்த்து செய்பவன் மனிதன் பார்க்காமல் செய்பவன் மேதை.
