• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கட்டுரைகள்»மகளிர் சிறப்பு கட்டுரை மகப்பேரின் மகத்துவம்
கட்டுரைகள்

மகளிர் சிறப்பு கட்டுரை மகப்பேரின் மகத்துவம்

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாAugust 19, 2024No Comments2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

20-உண்மை பேசும் குழந்தை:- குழந்தை கடவுளுக்கு சமம். பொய் பேசவோ, சூதுடன் புறம் சொல்லவோ, தெரியாது. பார்த்ததை, கேட்டதை அப்படியே சொல்பவர்கள் தான் குழந்தைகள்.

அதனால்தான் பல கொலை குற்றவாளிகள் குழந்தையின் உண்மைக்கு மறைக்க தெரியாமல் பிடி பட்டு கம்பி எண்ணுகிறார்கள்.

இயற்கையில் உண்மையை பேசும் குழந்தைகளுக்கு பெற்றோரும், மற்றோரும் தான் பொய் சொல்ல கற்றுத் தருகிறார்கள்.

குழந்தைகள் உண்மை பேச வேண்டும் என எண்ணும் தாயும்,தந்தையும் உண்மை பேசுவது இல்லை. என்பதை அறிந்த மாத்திரத்தில் அவர்கள் பொய் பேசத் துவங்கி விடுவார்கள்.

எடுத்துக்காட்டாக தந்தை உடல் நலம் சரியில்லை. அதாவது, காய்ச்சல், தலைவலி போன்ற காரணங்களைச் சொல்லி விடுமுறை எடுக்கும் பட்சத்தில் குழந்தை யோசிக்க ஆரம்பிக்கிறது.

பள்ளிக்கு கிளம்பும் நேரத்தில் வயிறு வலிக்கிறது என ஆழும்.

குழந்தைக்கு வயிறு வலிக்கிறது இன்று பள்ளிக்கூடம் போக வேண்டாம் என விடுமுறை போடச் சொல்லிவிட்டால் போதும்…

சிறிது நேரத்தில் குழந்தை விளையாடப் போய் விடும். இப்போது வயிறு வலிக்குதா! என்றால் இல்லை என விளையாடுவார்கள்.

இப்படி பல காரணங்களைச் சொல்லும் குழந்தைகளை கவனித்தால் தெரியும் அவர்கள் பெற்றோர் உண்மை பேசாதவர்களாகவே, இருப்பார்கள்.

எனவே, குழந்தைகளுக்கு இதை செய்யாதே, அதைச் செய்யாதே, என சொல்லுவதைக் காட்டிலும் நாம் வாழ்க்கையில் உண்மையாக நடந்து கொண்டால் போதும்.

அவர்கள் பெற்றோர் வழியில் தானாகவே பின் தொடர்வார்கள், “தாயைப் போல் பிள்ளை நூலைப் போல சேலை” என்பார்கள். சில குழந்தைகள் தான் மாறுபட்டு இருப்பார்கள் நூற்றுக்கு 95% தாய் அல்லது தந்யைப் போல் தான் குழந்தைகள் இருப்பார்கள்.

எனவே, இதில் தாய்க்கு வளர்ப்பு முறையில் முக்கியமான பங்கும், பொறுப்பும் அதிகம் உள்ளது. என்பதை எப்போதும் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.

சாப்பிட வைக்க, தூங்க வைக்க, படிக்க வைக்க இவற்றிற்கு எல்லாம் அதை வாங்கி தருகிறேன் இதை வாங்கி தருகிறேன் என்று சொல்வது…

குழந்தைகளும் தனக்கு வாங்கும் பொருள்களை நினைத்து சமத்தாக இருக்கும் போது பொருளாதாரத்தைக் காட்டி வாங்காமல் விடுவது இப்படியே ஏமாற்றினால்…

பெற்றோர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிடும். இவர்கள் இப்படித்தான் என்ற எண்ணம் பிஞ்சு மனதில் பதிந்து விட்டால் பின் பெரியவர்கள் ஆனாலும் மாறுவது கடினம்.

எனவே, முடிந்தவரை பொருளாதார பிரச்சனை,
வீட்டுச் சூழ்நிலை எல்லாம் குழந்தைகளிடம் சொல்லாமல் மறைக்க   கூடாத ஒன்று.

சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டும். இவை நமக்குத் தேவை தானா? தேவை இல்லையா? எனக் கேட்டு அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம்…

எது நமக்குத் தேவை. எது நமக்குத் தேவை இல்லை என உணர்வார்கள். அவர்களாக உணரும் போது நாம் சொல்லும் சொற்கள் கூட மிச்சமாகும்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

உடைந்த கப்பல்

July 7, 2025

உடைந்த கப்பல்

June 23, 2025

உடைந்த கப்பல்

April 27, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.