• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
Tamil SangamTamil Sangam
Home»கட்டுரைகள்»மகளிர் சிறப்பு கட்டுரை மகப்பேறு மகத்துவம்
கட்டுரைகள்

மகளிர் சிறப்பு கட்டுரை மகப்பேறு மகத்துவம்

டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாBy டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகாSeptember 9, 2024No Comments3 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

23-பருவ மாற்றங்கள்

வளர் இளம் பெண்களுக்கான விழிப்புணர்வும் பெற்றோர் பொறுப்பும்.

“எங்கெங்கும் காணினும் சக்தியடா தம்பி
ஏழுகடல் அவள் வண்ணமடா”
என்கிறார் பாரதியார்.

“சோலை மலரே சுவர்ணத்தின் வார்படமே காலை இளஞ் சூரியனேக் காட்டும் பளிங்குருவே வன்மை உயர்வு மனிதர் நலமெல்லாம் பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே
நாய் என்று பெண்ணை  நவில் வார்க்கும் இப்புவிக்குத்
தாய் என்று காட்டத் தமிழர்க்கு வாய்த்தவளே” என பெண் குழந்தைக்கு தாலாட்டுப் பாடுகிறார் பாரதிதாசன்.

இவர்கள் போராட்டத்தின் விளைச்சல் தான் பெண்களுக்கான விழிப்புணர்வு.

குழந்தைப் பருவம், சிறுவர் பருவம், ஆகிறது இரண்டு பருவங்களை கடந்த பின் மூன்றாவது பருவம் மங்கையர் பருவம்.

இந்தப் பருவத்தில் உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும். இம்மாற்றத்தால் பெண்கள் பயந்து விடுவதும் உண்டு. மனப்பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்வதும் உண்டு.

இப்படிப் பட்ட பல பருவ வயது பெண் உடைய தாய்மார்கள் தங்கள் மகளுக்கு சரியான ஆலோசனைகளைச் சொல்ல வேண்டும்.

காலம் மாற்றத்திற்கு தகுந்தாற்போல் 10 வயது முதல் 15 வயதிற்குள் பெண்கள் பருவம் எய்து விடுகிறார்கள். பருவ மாற்றத்தால் இது இயற்கையான உடல் வளர்ச்சி ஆகும்.

அச்சமயத்தில் ரத்தப்போக்கு கண்டு பயந்து விடாமல் பயத்தைப் போர்க்க வேண்டியது தாயின் கடமையாகும்.

இச்சமயத்தில் உடல் சோர்வும், உள்ளச் சோர்வும் ஏற்படும். வயிற்று வலி, வாந்தி, தலைவலி போன்றவை சிலருக்கு ஏற்படலாம்.

அந்த மாதிரி சமயங்களில் வேலைகள் அதிகம் செய்யாமல் ஓய்வாக இருக்கவும்,   தினமும் சுத்தமாக குளித்து, சுத்தமான உடைகளை மாற்றவும் பழக்கப்படுத்துவது தாயின் கடமையாகும்.

ஏழு நாட்களுக்கு மேல் அதிகமாக இரத்தப்போக்கு இருந்தாலும், 30 நாட்களுக்கு முன்பே வந்தாலும், தள்ளிப் போனாலும் மருத்துவரின் ஆலோசனை கேட்பது அவசியம்.

இப்பருவத்தில் பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலமாகும். மகளுக்கு அன்பையும், ஆதரவையும் வழங்க வேண்டிய காலம்.

இப்பருவத்தில் வீட்டில் கடுமையாக நடந்து கொண்டால்…பள்ளி, கல்லூரிகளில் அன்பைத் தேடி அலைய வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

அவர்கள் பேசுவதை நாம் காது கொடுத்து கேட்க வேண்டும். அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். நல்ல தோழிகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள சொல்ல வேண்டும்.

தண்டவாளத்தில் ஓடும் ரயில் ஓடிக்கொண்டே இருந்தால் ஒன்றும் இல்லை. சிறிது தடம் புரண்டாலும் விபத்துக்குள்ளாவது போல் வாழ்க்கை எதுவும் வாழ்க்கையிலும் விபரீதம் ஏற்பட்டுவிடும்.

பெற்றோரை விட நட்பையே நம்பும் பருவம். அவர்கள் தான் தங்களுக்கு நல்லது செய்கிறார்கள். என்று நம்பும் பருவம். எனவே, பெற்றோர்கள் மிகமிக கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது.

அவர்கள் மேல் முழு  நம்பிக்கையுடன் பொறுப்புகளை ஒப்படையுங்கள். பெற்றோர் வைத்திருக்கும் நம்பிக்கையினை உணர்ந்து நல்ல முறையில் உழைத்து உயர முன் வருவார்கள்.

நாம் சொல்வதை விட அவர்களையே யோசிக்கச் செய்வது நல்லது. சுயமாக யோசிக்கும் போது தப்புத் தப்பாக யோசித்தாலும் முடிவில் நல்லதொரு முடிவுக்கு வருவார்கள்.

நாம் அவர்களை பெரியவர்கள் என மதித்து அங்கீகாரம் கொடுத்தாலே போதும் யோசிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

படிக்கின்ற பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுடன் மாணவிகள் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.

பயணம் செய்யும்போது வேலை பார்க்கும் இடங்களிலும் இருபாலரும் தான் செயல்பட வேண்டி உள்ளது. அச்சூழ் நிலைகளில் ஆண்களும், பெண்களும் பழக வேண்டிய கட்டாயமாகிறது.

இச்சூழலில் பெண்கள் ஒரு எல்லையை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். நடை, உடை,பாவனைகளில் நமது பண்பாடு காக்கப்பட வேண்டும்.

பேச்சில் இனிமை இருக்க வேண்டும். குழைவு இருக்கக் கூடாது. பண நெருக்கடி நிலைகளில் வலிய உதவும் ஆண்கள் இருப்பார்கள். அவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்.

படிக்கும் காலத்திலும் சரி, வேலைக்குச் செல்லும்போதும் சரி அதிகமாக ஆண்களுடன் பேசி நேரத்தைப் போக்கக்கூடாது. பின் தன்னைத்தானே வருத்தப்பட நேரும்.

நாம் நடந்து கொள்ளும் விதத்தில் தான் நாம் கணிக்கப்படுகிறோம். படிக்கும் காலத்தில் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடித்து விட்டால் அதுவே பழக்கமாகி திருமணத்திற்குப் பின்பும் பிறரால் மதிப்பை ஏற்படுத்தும்.

ஆரம்பத்தில் இருந்தே பெண்கள் தங்களை ஒரு கண்ணியம் மிக்க பெண்ணாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். சக ஆண்களுடன் பழகும் போது  இடைவெளியை உருவாக்கி விட வேண்டும்.

புதிதாக ஒரு இடத்திற்கு செல்லும் போது இவள் எப்படிப்பட்ட “டைப்” என ஆண்கள் நோட்டமிடுவார்கள். கண்ணியம் மிக்கப் பெண் என்பது தெரியும் படி நடந்து கொண்டால் மரியாதையுடன் அவர்களும் நடந்து கொள்வார்கள்.

கல்லூரி வாழ்க்கைகளிலும் ஏற்படும் பழக்கம் காதலாக மலர்கிறது. ஆனால், நூற்றுக்கு 90 சதவீதம் திருமணம் வரை நீடிப்பதே இல்லை.

அப்படியே திருமணம் வரை சென்றாலும் வெற்றி அடைவதில்லை. இப் பருவத்தில் பாதிப்பது இருவருமே என்றாலும், பெண்களுக்கு அதிக பாதிப்புகள் உண்டாகும். எனவே, இக்கால கட்டத்தில் கல்வியை மட்டும் கற்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா

Related Posts

உடைந்த கப்பல்

July 7, 2025

உடைந்த கப்பல்

June 23, 2025

உடைந்த கப்பல்

April 27, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

கவிஞர் மு. வாசுகி

January 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

January 3, 2020

மௌனத்தின் மொழி – கவிஞர். சு.கவிச்செல்வன்

October 21, 2025

கவிஞர் சுந்தர பழனியப்பன்

January 1, 2020
Latest Reviews
  • Facebook
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Copyright © 2020 tamilsangam.org

  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
Copyright © 2017. Designed by ThemeSphere.
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
Facebook Instagram
  • Privacy Policy
  • Terms of Service
  • Contact
© 2026 TamilSangam.org

Type above and press Enter to search. Press Esc to cancel.