6-ஊக்கமது கைவிடேல்
ஒரு விவசாயி தன் வயலுக்கு நீர் பாய்ச்ச தங்கள் வயலில் ஒரு பகுதியில் கிணறு வெட்ட எண்ணினான்.
ஆள் விட்டு வெட்டினால் அதிக பணம் செலவாகும் என்று எண்ணிய விவசாயி, தானே வெட்ட முயற்சித் தான்.
அவனுடைய எண்ணத்திற்கு வலிமை சேர்ப்பது போல் அவர்கள் குடும்பத்தினர் எல்லோரும் முன் வந்தார்கள்.
ஒரு நல்ல நாள் பார்த்து அதிகாலையில் தொடங்கினார்கள். ஒருவர் வெட்டிக் கொடுக்க மற்றவர்கள் மண்ணை வாங்கி வேறு இடத்தில் கொட்டினார்கள்.
இப்படியே நாட்கள் கடந்தன கிணறு ஆழமாகப் போய்க் கொண்டு இருந்தது. இன்னும் தண்ணீர் வரவில்லையே என்று சோர்வு ஏற்பட்டது.
இன்னும் முயற்சி செய்து பார்ப்போம். என்று முயற்சியை கைவிடாமல், இன்னும் கொஞ்சம் தோன்றினால் தண்ணீர் வந்து விடும் என்று எண்ணியபடி முயற்சித்தார்கள்.
என்ன ஆச்சரியம்! அவர்கள் எண்ணப்படி பாறை தெரிந்தது.
அந்தப் பாறையை உடைத்தால் ஊற்றுக்கண் திறந்து தண்ணீர் வந்துவிடும்.
மேலே வந்த விவசாயி பாறை உடைப்பவரை அழைத்து வந்து உடைக்க… தண்ணீர் பீறிட்டுக் கொண்டு வந்தது.
அவர்கள் விடாமுயற்சி வீண் போகவில்லை கிணற்றில் தண்ணீர் வந்துவிட்டது. பல நாட்கள் கஷ்டப் பட்டதற்கு பலன் கிடைத்து விட்டது.
இப்படி விடா முயற்சி உடையவர்களைப் பார்த்த ஔவையார் “ஊக்கமது கைவிடேல்” என்று கூறி உள்ளார்.

