தேவர் சந்திரன் எழுதும் தொடர்கதை
உடைந்த கப்பல்
சிந்தனையுடன் அந்த சிறிய கப்பலை நோக்கி படகை செலுத்தினார் இன்ஸ்பெக்டர் ரவி.
சந்தேகப்பட்டது சரியாகத்தான் இருக்கிறது என்று நினைத்தார்…
சந்தேகம் இல்லாமல் பார்த்துக் கொண்டு மடக்கி பிடித்து விட வேண்டும்…
இதில் மட்டும் வெற்றி பெற்று விட்டால் என்று இன்ஸ்பெக்டர் எண்ணிக் கொண்டே இருக்கும்போது..
அதே நேரத்தில் உடைந்த கப்பலில் உள்பகுதியில் இருந்து மொட்டை தலையன் டைகர் கடகட என்று ஓடிவந்தான் மேல் தளத்திற்கு.
பாஸ்… பாஸ் சிக்னல் தெரிகிறது என்றான் டைகர்.
அப்படியா சந்தோசம். இரு நான் பார்க்கிறேன் என்றான் மற்றொருவன்.
பைனாகுலர் மூலம் பார்த்தான் மினுக்.. மினுக்கு என்று வெளிச்சம் தெரிகிறது. பதில் கொடுங்கள்.
“ எஸ் பாஸ்”
சரக்கு எவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டது என்று எண்ணினான்…
டைகர் கீழே இறங்கி வந்தான். தனி அறையில் அங்குள்ள ஒயர்லஸ் கருவியை இயக்கினான். ஹலோ…. ஹலோ… ஹியர் டைகர் சார்.
என்ன செய்தி சிக்னல் கிடைத்துவிட்டது பாஸ்.
சரி சரக்கை மாற்றுங்கள்.
ஓகே பாஸ் அந்த முயற்சியிலே மூன்றையும் தள்ளிவிடலாம்.
எஸ் பாஸ் ஓவர்.
உடைந்த கப்பலின் ஒரு பகுதியில் இருந்த ஆற்றல் மிகு மின்விசை படகு மெல்ல நகர்ந்தது. விரைவாக செலுத்து, படகு விரைந்தது.
அண்ணே! நமக்கு முன்னே ஒரு படகு செல்கிறதே!
என்ன படகா?
டைகர் தொலைநோக்கி மூலம் பார்த்தான். இன்ஸ்பெக்டர் போல் தெரிகிறது சரி என்றால் பத்தாயிரம் இல்லை என்றால் அதுவும் நமக்கு லாபம்.
டைகர்! கை மைக் மூலம் பேசினான்.
“ இன்ஸ்பெக்டர்”
இன்ஸ்பெக்டர் திரும்பினார்.
இன்ஸ்பெக்டர் எங்கள் வழியில் குறிப்பிடாமல் ஒதுங்கி நின்றால் லாபம்.
இப்படியே திரும்பிவிட்டால் அதற்கு வெகுமதி பத்தாயிரம். இல்லை என்றால்…
இன்ஸ்பெக்டர் ஏளனமாக சிரித்தார்.
கடலில் உள்ள சுறா மீன்களுக்கு இறையாகி விடுவீர்கள் இன்ஸ்பெக்டர். சமரசமா? இல்லை சரணாகதியா? என்றான் டைகர்.
இன்ஸ்பெக்டர் பதில் எதுவும் கூறவில்லை.
தன் துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டான் டைகர்.
தொடரும்
