தேவ சந்திரன் எழுதும் தொடர் கதை
உடைந்த கப்பல்
இன்ஸ்பெக்டர் கையில் துப்பாக்கி சுழன்றது. துப்பாக்கியில் இருந்து கிளம்பிய தோட்டாக்கள் டைகர் படகை துளைத்தது.
நடுக்கடலில் இரண்டு படங்களுக்கும் இடையே தீப்பொறி பறந்தது.
அப்போது இன்ஸ்பெக்டர் ரவி தன் கையை உதறினார் ஆ…அம்மா!
அம்மா!என்ற அலறலுடன் டைகர் படகில் இருந்தவன் சாய்ந்தான். நெஞ்சில் இருந்து ரத்தம் கொட்டியது.
டைக்கரின் படகு இன்ஸ்பெக்டரின் படகை நெருங்கியது.
போராடிக் களைத்த நேரத்தில் இன்ஸ்பெக்டரின் படகில் தாவி ஏறினார்கள்.
என்ன அண்ணே! பரிசை கொடுத்து விடலாமா? என்றான் ஒருவன்.
பொருடா! என்ற டைகர் அட்டகாசமாக சிரித்தான்.
அந்த நேரத்தில்… அம்மா! பூபதி பங்களாவில் லதா அலறியபடி சாய்ந்தாள்.
வேலைக்காரி ஓடி வந்தாள்.
லதாவின் முகத்தில் தண்ணீர் தெளித்தாள்.
லதா கண்களை திறந்தவள், கத்தி குத்து, துப்பாக்கி சண்டை என புலம்பினாள்.
சப்தம் கேட்டு பூபதியும் வந்தார். என்னம்மா லதா என்றார் பூபதி.
கடலில் படகுகள் சண்டை கத்தியால் குத்தி பிணத்தை எறிந்தார்கள்.
ஆ… என்ன என்ற பூபதி. லதா நல்லா தூங்கி ஓய்வெடுத்துக்கம்மா! உன் சித்தி காணாமல் போனதிலிருந்து நீ குழம்பி போய் இருக்கிறாய்!
அதோடு மேலே உள்ள தொலை நோக்கியால் பார்த்து இருப்பாய் அந்த அதிர்ச்சியினால் தான் பயந்திருக்கிறாய் என்றார் பூபதி.
அப்பா! இல்லை அப்பா! என்றால் லதா.
நீரில் போராடி மீன்களுக்கு பலியாகி இருக்கிறார் அடையாளம் தெரியவில்லை. உடைகளை கொண்டு கண்டுபிடிக்க முடிந்தது. என்ற பத்திரிக்கை செய்தியை படித்த நவீன்…
இருக்காது…. இருக்கவே முடியாது! இதில் ஏதோ நடந்திருக்கிறது. உண்மையில் ரவி மரணம் அடையவில்லை திட்டமிட்டு…
தலைமை போலீஸ் நிலையம் போலீஸ் அதிகாரிகள் கூடி இருந்தார்கள்.
கடலில் போதை பொருள்கள் பேதை பெண்கள் அதிகமாக கடத்தப்படுவதாக வந்த புகாரியின் பேரில்…
அது பற்றி ஆராய்ந்து உண்மையை காணச் சென்ற ரவி நம்மை மீளா துக்கத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்து விட்டார்…
சேவையில் ஈடுபட்டிருந்த காலத்தில் மரணம் எய்திய அவருக்கு, நம் இலாகா சார்பில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துவோம்.
சார் வந்து…
என்ன மிஸ்டர் நவீன்!
ரவி மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. முடிவான அறிக்கைக்கு முன் எதை வைத்து கூறுகிறீர்கள் நவீன்.
ரவியின் துணிச்சலில், திறமையில் அதோடு…
ரவியிடம் இருந்து எனக்கு கடைசியாக கிடைத்த லெட்டரில் நம்பிக்கை தெரிந்து விட்டது. வெற்றி கனி விரைவில் விழுந்து விடும்.
ஏறக்குறைய மர்மங்களும், அதன் பின்னணியும் உடைந்த கப்பல் ஒன்றில் உள்ளே மறைந்து கிடப்பதாக எழுதி இருந்தார்.
கடிதத்தின் கோர்வையில் தெரிந்த நம்பிக்கை, ரவிக்கு நேர்ந்தது மரணம் இல்லை.. திட்டமிட்ட ஒரு கும்பலின் சதி தான் என்றால் நவீன்.
அனைவரும் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். பிறகு ஐ.சி பேசினார்.வெல்டன் மிஸ்டர் நவீன். புதிய தகவல்கள் தந்து இருக்கிறீர்கள்.
அங்கு செல்வதற்கு உங்கள் அனுமதி கிடைத்தால் நானே இந்த வழக்கை ஏற்றுக் கொள்கிறேன்! என்றான் நவீன்.
இன்ஸ்பெக்டர் ரவி பற்றிய உண்மையையும் கடத்தல் உண்மையையும் கண்டுபிடிக்க உங்களையே அனுப்ப இன்றே உத்தரவிடுகிறேன். வெற்றி கிட்டட்டும் என்றார் ஐ. சி
நன்றி சார் என்றான் நவீன்.
தொடரும்
