ஆத்திச்சூடி கதைகள்
34-கிழமை படவாழ்
கந்தனுக்கு நாலு பெண் குழந்தைகள். அவனுக்கு ஆடு, மாடு மேய்க்கும் தொழில்தான் தெரியும்.
அரேபியாவில் ஒட்டகங்களை பார்த்துக் கொள்ள ஆட்கள் எடுத்ததை தெரிந்துகொண்ட கந்தனும் விசாரித்தான்.
அவனையும் அழைத்துப் போவதாக சொன்னார்கள். அவன் மனைவி உறவினர்கள் பண உதவி செய்தார்கள். அப்படியும் கொஞ்சம் பணம் தேவைப்பட்டது.
யாரிடம் கேட்கலாம் என எண்ணிய கந்தனுக்கு அவர்கள் ஊர்க்காரர் சோமன் நினைவுக்கு வர அவரிடம் கேட்டான்.
அவரும் சொல்வதாக சொன்னார். அவர் மனைவியிடம் பேசி ஆலோசித்தார்.
இவனை நம்பி நான்கு பெண் குழந்தைகள் இருக்கிறது, கொடுத்து உதவினால் அந்த குடும்பமே முன்னுக்கு வந்துவிடும் என எண்ணியவர்கள்.
முழுமனதாக பணத்தை கொடுத்து உதவினார்கள்.
அவர்கள் செய்த உதவியால் அந்த குடும்பம் நல்ல மேன்மையை அடைந்து விட்டது.
தனக்கு என சேர்க்காமல் பிறருக்கு உதவும் போது அந்த மன நெகிழ்வால் அங்கு ஒரு சொந்தம் உண்டாகிறது.
அதைத்தான் ஔவை பாட்டியும் “கிழமை படவாழ்” என்கிறார்.
