39-கேள்வி முயல்
கோவிந்தன் சுமாராகப் படிப்பவன்.
அவர்கள் வீட்டிற்கு அருகில் ஒரு ஆசிரியர் குடி வந்தார்.
ஆசிரியர் வீட்டை கடந்து போகும் போது கோவிந்தன் ஆசிரியருக்கு வணக்கம் சொல்வான்.
ஆசிரியரும் ஏற்றுக் கொள்வது போல் தலையை ஆட்டி புன்னகைப்பார்.
ஒருநாள் பாடத்தில் ஒரு சந்தேகம் வரவே, கோவிந்தன் ஆசிரியர் அழகரிடம் சென்று சந்தேகம் கேட்டான்.
அவரும் புன்னகையுடன் உட்கார வைத்து புரியும்படி விளக்கி கூறினார்.
அன்றில் இருந்து ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து நன்றாகப் படிக்க ஆரம்பித்து விட்டான் கோவிந்தன்.
படித்தவர் சொல்படி கேட்ட கோவிந்தன் இன்று பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மதிப்பெண் வாங்கி எல்லோர் பாராட்டுதலையும் பெற்றான்.
படித்தவர்கள் சொல்லும் நல்ல வார்த்தைகளை எப்பொழுதும் கேட்க வேண்டும் என்று
ஔவையாரும் “கேள்வி முயல்” என்று கூறிச் சென்றுள்ளார்.

