வீரம் விளைந்த சிவகங்கை சீமையின்வரலாற்று புறநானூற்றுக் காட்சி ஒன்றுண்டுமுதல் நாள், மறுநாள் நடந்த போரில்கணவனையும், தந்தையையும் இழந்த பெண் போர்ப்பறை கேட்ட வீரக்குடி மகள்விளையாடிக் கொண்டிருந்த மகனை அழைத்துவெள்ளையாடை உடுத்தி வேலோன்றை கையில்கொடுத்துபோர்க்களம் நோக்கிப் போய்வாமகனே/ என்றனுப்பினாள் தமிழ் இலக்கியத்தின் ஒப்பற்ற பாடல்பாடலை எழுதியவர் பெண்பாற் புலவர்ஒக்கூரில் பிறந்த மாசாத்தியார் ஒக்கூர்மாசாத்தியாள்என்றே அழைக்கப்பட்ட இலக்கியப் பெண் வீரமங்கை வேலு நாச்சியார் மருதுபாண்டியர்பிறந்த பூமி சிவகங்கை சீமை”யாதும் ஊரே யாவரும் கேளீர் ”உலகளாவிய சிந்தனையை உதிர்த்த இடம் தமிழ்க் கவிஞர் கணியன் பூங்குன்றன்தமிழரிடம் நிலைத்த இடம் சிவகங்கைமாசாத்தனார், கபிலர் வாழ்ந்த ஊர்மங்கா புகழ் சேர்த்த சிவகங்கை கவியரசு கண்ணதாசன், பண்டிதமணி கதிரேசன்சுத்தானந்த பாரதியார் பிறந்த மாவட்டம்சிவகங்கை கீழடி அகழாய்வில் கீழேதோண்ட260௦ ஆண்டுகளுக்கு முன்பே தமிழனின் … தமிழி எழுத்துக்கள் தமிழ் பிராமியில்குவிரன், ஆத(ன்) முழுமை பெறாதஉடைந்த பானையில் எழுதிய எழுத்துக்கள்உலர்ந்த பின்பு பொறிக்கப்பட எழுத்துக்கள் கி.மு.6ஆம் நூற்றாண்டில் தமிழ் மக்கள்எழுத்தறிவு பெற்றவர்கள் என்ற…
Author: Chandran Soman
**ஓம் சரவணபவ ” என்ற ஆறு எழுத்து மந்திரம்மூச்சு – தியானப் பயிற்சி செய்த பலன் கிடைக்கும் **-கவிஞர் ச. மல்லிகா ,19.7.2020சிந்தனை துளி”சோம்பலும் , புலம்பலும் வீழ்வின் அறிகுறிசோதனையில் சாதனையே வெற்றி /” -கவிஞர் ச. மல்லிகா ,19.7.2020 நோயற்ற வாழ்வு கோபப்படும் போது உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் இயங்கி ஆரோக்கியம் கெடும்.*இட்ட தேவதைகளை வணங்க மனம் ஒருநிலைப்பட்டுநோயற்ற வாழ்வு கிடைக்கும் ** -கவிஞர் ச. மல்லிகா , 20.07.2020 சித்தனை துளி “உடைந்த குடத்தில் நீர் நிற்காதுமாற்றான் திறமை உதாவது ” -கவிஞர் ச. மல்லிகா , 20.07.2020 இஞ்சியின் பயன்கள் *இஞ்சி சாறு செரிமானத்துக்கு நல்லது . *இஞ்சி மரப்பான் சீரணத்துக்கு நல்லது. *இஞ்சி ,மல்லி, சர்க்கரை, காப்பித்தூள் கலந்தஇஞ்சிக்காப்பி பித்த வாந்தி, தலைசுற்றல் போக்கும். *இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் கலந்து குடித்து வரபித்தம், கபம், வாயு, அசீரணம் , காய்ச்சல் குணமாகும்…
வானம் பாடி மூத்த கவிஞர் முதுபெரும் எழுத்தாளர் ஞானிமார்க்சிய ஆய்வு செய்த கோவை ஞானிபெண்ணியம் பேச வைத்த தொகுப்புநூல்கள்ஆன்மிக வாதியான என்மேலும் அன்புகொண்டுஆசி நல்கிய ஞானி ஐயா, உங்கள் ஆத்மா சாந்தி அடையஇறைவனை பிரார்த்தனை செய்கிறோம் . 23.7.2020 செந்தமிழ்வாணி ச.மல்லிகா, கோவை
மனிதனின் முதல் எதிரி கோபம். கோபத்தை வென்றவன் மாமனிதன் ஆகிறான் .தன்னை அடிமை ஆக்குபவன் துன்பத்தில் உழல்கிறான் .கோபப்படும் போது அவன் உடலில் உள்ள அத்தனை நரம்புகளும் வேலை செய்து உச்சத்தில் இருப்பதால் தான் என்ன செய்கிறோம் என்பது கூட சிந்திக்க முடியாமல் போகிறது .அந்த உச்ச கட்ட கோபத்தில் பிறரை துன்பப் படுத்துவதுடன் தானும் துன்பத்தில் சுழல்கிறான். ‘கோபம் ஏன் வருகிறது”. தான் சொல்வதை பிறர் கேட்க வேண்டும் என்ற நிலையில்… பிறர் உயர்வைப் பார்த்து பொறுக்க முடியாத பொறாமை ஏற்படும் நிலையில் .. தன்னால் ஒரு காரியத்தை செய்துமுடிக்க முடியாத நிலையில்… தான் செய்வதே சரி என்ற மனப் போக்கால் பிறர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில்…. தனக்கு ஏற்படும் ஆசைகள் நிறைவு பெறாத நிலையில்…. இப்படி கோபப்படும் போது தீமைகளே விளைகின்றன .நன்மைகள் தூரப் போகின்றன , இந்த உண்மையை உணர்ந்தால் கோபத்தை அடக்க கற்றுக்…
பெண் உரிமை கிடைக்காத காலகட்டத்தில் விழிப்புணர்வு தரும் எழுச்சி மிகு கவிதைகளால் பெண் விடுதலை வேண்டி ”குடும்பவிளக்கு” எழுதிய பாவேந்தர் பாரதி தாசன் அவர்களின் ஒரே மகன் கோபதி என்கிற மன்னன் மன்னர்.,அவர்களின் குடும்பத் தலைவி சாவித்திரி அம்மாள்.கோ.செல்வம், கோ.தென்னவன், கோ. பாரதி ஆகிய மகன்களும், அமுதவல்லி என்ற மகளும் உள்ளனர்.முதுபெரும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் ஐயா புதுச்சேரி வானொலி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர். மொழிப்போரில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.குயில் இதழ்ப்பணி செய்தார். பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளை , புதுவை தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர். புதுவைக்கு சொந்தமாக தமிழ்ச் சங்கக்கட்டிடம் கட்டி மகிழ்ந்தவர். பல அமைப்புகளில் முக்கிய பொறுப்பேற்று செம்மையாக செய்துமுடித்தவர்.. தனது மனைவி சாவித்திரி அம்மா மிகவும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையிலும் கவிமன்றம் நடத்தி தமிழ்ப்பணி செய்தவர். புதுச்சேரியில் தமிழ்த்தாய் வாழ்த்தாக பாவேந்தர் பாரதி தாசன் எழுதிய”வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயேமாண்புகள் நீயே…
கடமையைச் செம்மையாகச் செய்வதே மகிழ்ச்சி*மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டாம் அது நம்மிடமே இருக்கிறது .*மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், வீணாக கவலைப்பட வேண்டாம் .*பிறருக்கு உதவுங்கள், மகிழ்ச்சி அடையுங்கள்.*அகத்தில் காண்பதே மகிழ்ச்சி புறத்தில் இல்லை.*சாதனை படைக்க சவாலாகப் பனி செய்யுங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்*எல்லோரிடமும் நட்பாய் இருங்கள் மகிழ்ச்சி தேடி வரும்*சக உயிரிடத்தும் அன்பு, செலுத்துங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்..-கவிஞர் ச. மல்லிகா .13-7-2020உணவே மருந்து1.வேப்பஞ்சாறு2.நெல்லிக்காய் சாறு3.எலுமிச்சை சாறு4.அருகம்புல் சாறு5.இஞ்சி சாறு6.இரசச் சாறுஇவைகள் நோய் எதிர்ப்பு சக்தி தரும் .-கவிஞர் ச.மல்லிகா ,14.7.2020.சிந்தனை துளிஉடல் நலம் காத்தல் அவசியம்உழைக்க உதவும் ஊடகம் . -கவிஞர் ச மல்லிகா 14.7.2020 உணவே மருந்து *துளசி சாப்பிட்டால் நுரையீரல் மூச்சுக் குழாய் சம்பந்த நோய்தீரும்*இதயம் சீராக இயங்க துளசி பயன்படுகிறது*துளசியை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும்*துளசியை தலையில் தேய்த்து குளித்தால் பேன் போய்விடும்*துளசியை மென்று சாப்பிட்டால் வாய் சம்பந்த நோய் குணமாகும்*துளசி காற்றை சுவாசித்தால் ஆரோக்கியம்…
சிந்து சமவெளி நாகரிகம் நிலவிய ஹரப்பா பகுதியில் 1870 மற்றும் 1890 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எந்த மொழி என்று அறிந்து கூற முடியாத கற்களில் பொறிக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன .மேலும் அகழாய்வு செய்ததில் மெசபடோமியா பகுதியில் பல எழுத்து வடிவங்கள் கண்டெடுக்கப்பட்டன அதன் அடிப்படையில் சிந்து சமவெளி நாகரிக காலம் 2600 -2900 என்பதை ஆய்வுகள் மூலம் உறுதியானது .இக்கல்வெட்டு எழுத்துக்கள் வளைகுடா கடல் வாலிபர்களால் அந்தப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது .ஆனால், அவர்களால் அந்த எழுத்துக்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்துள்ளது .சிந்து சமவெளி நாகரிகம் அழிந்த போதே , சிந்து சமவெளி எழுத்து வடிவங்கள் சேர்ந்து அழிந்து விட்டன .பாதுகாக்கப்பட்ட சில எழுத்து வடிவங்கள் ஆய்வுக்கும் , ஹரப்பாவில் பயன்படுத்தப்பட்ட மொழியினை அறிய உதவுவது திராவிட மொழிகளே அதிகம் .அவற்றின் மூலம் பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது .மத்திய மற்றும் தென்னிந்தியாவில் 26…
சங்க நூல்கள் ஓலைச் சுவடிகளில் எழுதப்பட்டிருந்தன .இதனால் எளிதில் அழிந்து விடக்கூடியவனாக இருந்தன .பல அரும் பெரும் நூல்கள் நமக்குக் கிடைக்காமலே போனதற்கு ஓலைச் சுவடிகளை நாம் புத்தகங்களாக பதிப்பிக்க இயலாததே காரணம் .ஓலைச்சுவடிகளைத் தேடித் தேடி ஊர் ஊராக அலைந்து அவற்றைப் புத்தகங்களாக அச்சில் ஏற்றியவர் உ.வே.சா. அவர்கள். திருவாரூர் உத்தமதானபுரத்தில் 19.2.1856 இல் பிறந்தார். இயற்பெயர் வேங்கடரத்தினம் என்பதாகும்.மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் பயின்றார்.அவரது ஆசிரியர் சாமிநாதன் எனப் பெயரிட்டார். பிற்காலத்தில் அதுவே நிலைத்து விட்டது.உ.வே.சாமிநாதன் தமிழ் மீது உள்ள பற்றால் ஓலைச் சுவடிகளைப் புத்தகம் ஆக்க எண்ணி ஓலைச் சுவடிகளை தேடித் தேடி ஊர் ஊராக அலைந்து அவற்றை வாங்கி புத்தகமாக வெளிவரச் செய்தார்.சிலர் ஓலைச் சுவடிகளை கொடுக்க மறுத்து விடுவார்கள் .கொடுமுடியில்; வசித்த தனவந்தர் ஒருவர் ஆடிப்பெருக்கு தினத்தில் ஆற்றில் விட்ட ஓலைச் சுவடிகளை உ.வே.சா. அவர்கள் கடும் குளிரில் காலை வரை காத்திருந்து…
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த சங்கப் புலவர்கள் தமிழ் வளர்த்தனர். அவர்கள் எழுதிய நூல்கள் எண்ணில் அடங்காதவை .அவை இயற்கையாக பாதுகாக்கப் படாமலும், சங்கத்தமிழ் நூல்களின் அருமை தெரியாமல் கடலுக்கும் ,கரையானுக்கும் பல நூல்கள் அழிந்து போயின .சங்கத்தமிழ் நூல்களில் மிகச் சிலவே நமக்கு முழுவதுமாக கிடைத்துள்ளன .அறிய நூல்கள் பல கிடைக்காமல் போயின .கிடைத்துள்ள பாடல்களிலும் அனைத்து புலவர்களின் பெயரும் கிடைக்க வில்லை . அவர்களின் மிகச்சிறந்த சொற்றொடர்களை வைத்து புனைப் பெயரில் இடம் பெற்றுள்ளனர் .ஒரு இந்தியன், மொழியின் ,பண்பாட்டின் அடையாளம் பெயர், சங்கப் புலவர்களின் பெயர்களை காணும் போது சங்ககால மக்களின் பண்பாடு, தொழில் ஆகியவற்றையும் அறியலாம்.அகர வரிசைப்படி சங்கப் புலவர்களின் பெயர்கள் தொகுத்ததில் 473 பெயர்கள் கிடைத்துள்ளன. அவை உயிர் எழுத்துக்கள் , அகர வரிசைப்படி கீழே பார்ப்போம்.”அ’ வரிசையில் 16 பேர்கள்1.அகம்பன் மாலாதனார்2.அஞ்சியத்தை மகள் நாகையார்3.அஞ்சில் அஞ்சியார்4.அஞ்சில் ஆந்தையார்5.அடைநேடுங்கல்வியார்6.அணிலாடு முன்றிலார்7.அண்டர் மகன் குறுவழுதியார்8.அதியன் விண்ணத்தனார்9.அதி…
ஆன்றோர்களுக்கும், சான்றோர்களுக்கும் , கவியுலக படைப்பாளர்கள் அனைவருக்கும் வணக்கம் . . காலத்தை பிரதிபலிப்பவர்கள் கவிஞர்கள் .அவர்கள் காலத்திற்குப் பின் எத்தனையோ கவிஞர்களை மறந்து விடுகிறோம். அவர்களை சிறியவர், பெரியவர் என ஒதுக்காமல் அனைவரையும் மதிக்கும் வகையில் எங்கள் முயற்சியால் https://tamilsangam.org/இணையதளத்தை ஆரம்பித்து இருக்கிறோம். அதில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் அனைவரும் தங்களின் வாழ்க்கை சுருக்கம் , இதுவரை தமிழுக்கு ஆற்றிய பணிகள், பெற்ற விருதுகள் போன்றவற்றை பதிவு செய்து கொண்டு இருக்கிறோம். உலகம் முழுவதும் தமிழ் தெரிந்த அனைத்து இளைய தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும்படி பதிவேற்றம் செய்யப்படுவதால், இது எப்போதும் கணினியில் இருக்கும். எங்கள் இந்த முயற்சியை எழுத்தாளர்கள் ,கவிஞர்கள் பயன்படுத்தி காலத்தில் நிலைத்து நிற்க வேண்டிப் பணிகிறோம். எழுத்துலக சகோதர-சகோதரிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி எனது பணி சிறக்க உறுதுணையாக இருக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் . . இதில் பயன்பெற இந்தியாவில் உள்ளவர்கள் ரூ .1000/- (ஆயிரம்…