பிரார்த்தனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. தனிமனித பிரார்த்தனை 2. கூட்டு பிரார்த்தனை. தனி மனித பிரார்த்தனை:- முனிவர்கள் தவ வலிமையை பெருக்கிக் கொள்ளும் பிரார்த்தனை.அசுரர்கள் இறைவனை நோக்கி தவம் இருந்து பெற்ற பிரார்த்தனை. மனிதர்கள் இறைவனை நினைத்து வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை. இப்படி தனிப்பட்ட ஒருவர் செய்யும் பிரார்த்தனை தனி மனித பிரார்த்தனையாகும். கூட்டுப் பிரார்த்தனை குடும்பத்தினர் கூடி பிரார்த்தனை செய்யும் பிரார்த்தனை. உறவினர்கள் எல்லோரும் சேர்ந்து வணங்கும் பிரார்த்தனை. மக்கள் எல்லோரும் வேண்டிக் கொள்ளும் பிரார்த்தனை இவை எல்லாம் கூட்டுப் பிரார்த்தனை ஆகும். இதில் எது சிறந்தது என ஆய்வதை விட “எண்ணம்” சிறந்ததாக இருக்க வேண்டும். பிரார்த்தனை ஒரு அபூர்வ சக்தியை கொடுக்கவல்லது. அற்புதங்களை நடத்த ஆற்றலை தரவல்லது. எத்தனை துன்பம் வந்தாலும் இறைவா! என மனம் உருகி நினைக்கும் போது மனப்பாரம் குறைந்து இலவம்பஞ்சு போல் லேசாகி போவதை ஒவ்வொரு மனிதனும் உணர முடியும். அப்படி…
Author: டாக்டர் செந்தமிழ் வாணி ச மல்லிகா
ஒருவருடைய வாழ்வு மேன்மை அடைவதற்கும். தாழ்ந்து போவதற்கும் அவர் மனமே காரணமாகும். மனதின் எண்ணமே செயல் பாட்டுக்கு காரணமாகிறது. ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளுமா நல்ல எண்ணங்கள் நிறைந்து இருக்கிறது. அதை எல்லோரும் பயன்படுத்துவதை விட தீய எண்ணங்களில் கவனம் செலுத்தி தங்கள் சக்தியை விரயம் செய்து மனதை துன்பத்தில் தள்ளி வேதனையாகிய கடலில் தத்தளிக்கிறார்கள் .பக்தி என்ற போர்வையில் பகட்டான ஆடம்பரத்தில் தங்களை வெளிக்காட்டி கொள்பவர்கள். உண்மையான பக்தியாளர் என இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். பக்தி என்பது மனத்தூய்மையில் பிறப்பதாகும். இறைவன் மேல் நாம் வைத்திருக்கும் அன்பிற்கு மட்டுமே இறைவன் கட்டுப்படுகிறான். எளியோர் என்ற பாகுபாடு எல்லாம் அவனுக்கு கிடையாது. உண்மையான அன்பு எங்கு இருக்கிறதோ! அங்கு ‘வா ‘என அழைத்தால் தயங்காமல் வந்து நிற்பவன் இறைவன். இதற்கு நமது முன்னோர்கள் ஒரு கதை கூறுவார்கள். ராமு, சோமு என்ற நண்பர்கள் சாமி தரிசனம் காண கோயிலுக்கு சென்று கொண்டு இருந்தார்கள்.…
ஓங்கார நாதத்தின் உற்பொருளாம் முதற்கடவுளாம் மூத்த கடவுள் விநாயகர். தொழுது வணங்கிய பின்பு எக்காரணத்தையும் செய்வது இந்துக்களின் மரபு. “விநாயகரை மட்டும் ஏன் முதல் கடவுள் என்கிறோம் ?என மனதில் எண்ணத் தோன்றும். எத்தனையோ கடவுள்கள் இருக்கிறார்களே! என எண்ண அலைகள் விரியும்.’ விநாயகர்’ என்பதை நாம் சற்று ஊன்றி கவனித்தால் உண்மை புரியும். விநாயகர் என்றால் ‘தலைவன்’ என்று பொருள்.’வி’ என்றால் இல்லை என்று பொருள். தனக்கு மேல் எந்த கடவுளும் இல்லை. எனப் பொருள் தனக்குள்ளே அடக்கி ‘விநாயகராக’ காட்சி தருகிறார். என்பதே புராணங்கள் எடுத்துரைக்கிறது. சிவ பக்தர்கள் பேனாவை எடுத்தவுடன் ‘உ ‘என்ற பிள்ளையார் ‘சுழி’ போட்டு எழுத துவங்குவார்கள். பிள்ளையார் சுழிக்குள் என்ன இருக்கிறது அப்படி ?’உ’வாகிய உகரம் போடுவதால் உலக நாயகனே உன்னுள் நான் அடக்கம். என்று நாம் இறைவனை சரணாகதி அடையும் போது… நமக்குள் இருக்கும் அகங்காரம் அடங்கி இறையருள் பரிபூரணமாக வெளிப்பட்டு…
இறைவனை எந்த ரூபத்தில் வழிபடுவது என்று நமக்குள் ஒரு கேள்வி வரலாம். இறைவனை களிமண், கல். அல்லது உலோகம் இவற்றால் பல வடிவங்கள் செய்யும் போது அதன் சிறப்பு மதிப்பும் அதிகப்படுகிறது. இறைவன் எங்கும் நிறைந்து காட்சி தந்தாலும், அவனுக்காக செய்யும் வடிவங்களில் அருளாட்சி செய்கிறான். “மண் வடிவம் பெறும் போது எப்படி சிறப்பு கிடைக்கிறதோ!” அதுபோல் இறைவன் வடிவம் கிடைத்த பின் அவன் அருள் மழை பொழிகிறான். “இந்த பூமியில் எப்போது எல்லாம் இறைவன் அவதாரம் எடுக்கிறான்?” எனப் பார்த்தால், எப்போது எல்லாம் தர்மம் தாழ்வடைந்து அதர்மம் தலை தூக்குகிறதோ! அப்போது எல்லாம் இறைவன் அவதரிக்கிறான்.சாதுக்களை காத்து துஷ்டர்களை ஒழிப்பதற் காகவும். தர்மத்தை நிலை நாட்டவும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவன் அவதார புருசராக அபதரிக்கிறார். அப்படி பிறக்கும் போது அவதார ரகசியத்தை யார் ஒருவர் உணர்ந்து தெரிந்து கொள்கிறானோ! அவன் மீண்டும் இப்பூமியில் பிறப்பதில்லை. அவன் இறைவனுக்குப் பிடித்தவனாகி அவன்…
புத்தாடை எடுக்க கடைக்கு செல்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கிறது. அவர்…. அவர்களுக்குப் பிடித்த வண்ணத்தில் துணியை தேர்வு செய்து எடுத்துக் கொள்கிறோம். வண்ணம் தான் மாறுபட்டு இருக்கிறது. தவிர துணி ஒரே ரகம்தான். இதுபோலத்தான் கடவுள் ஒருவர்தான் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பிடித்த உருவத்தில் வழிபடுகிறோம். இறைவனை அடையும் வழி ஆறு இவைகளை ஆறு சமயங்களாக அழகுற வகுத்து நமக்கு தந்தவர் ஆதிசங்கர். ஏதாவது ஒரு வழியை பின்பற்றி இறை சாதனை மூலம் உள்ளத்தில் “பேரொளியான” இறைவனின் அருளால் வெற்றியும் மேலான ஆனந்தமும் பெற்று உயருங்கள். அதுவே, மனிதப் பிறப்பின் ரகசியம். 1.காணாபத்யம்- கணபதி 2 .கௌமாரம் -முருகன் 3.சைவம் -சிவன்4.வைணவம்- திருமால் 5 .சாக்தம்- சக்தி 6. சௌரம் -சூரியன் என ஆறு வழிகள் ஆகும். காணாபத்யம்- கணபதி” ஓம்” என்ற பிரணவ சொல்லின் உருவமாய் இருப்பவர் கணபதி. அவரை வழிபடும் முறையே காணபத்தியம் என அழைக்கப்படுகிறது. “கணபதியை…
ஐம்புலன் அடக்கம் வேண்டும் என்கின்றனர் பெரியவர்கள். அப்புலன் அடக்கம் இல்லாதவர்கள். துன்பமாகிய கடலில் மூழ்கி துயரத்தை அனுபவிக்க நேரிடும். என எச்சரிப்பதற்காகவே நமது மூதாதைகள் ஐம்புலன் அடக்கம் தேவை என மீண்டும்.. மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அவற்றை சற்று ஆய்து பார்ப்போம். வாய் சுவை அடக்கம்:- மீன் பிடிப்பதற்காக மீனவர் புழுவை தூண்டியில் பொருத்தி குளம், கடலில் எறிவார்கள். தூண்டிலில் உள்ள புழுவிற்கு ஆசைப்பட்டு. மீன் தூண்டிலில் மாட்டிக்கொண்டு உயிரைவிடம். வாய் சுவையால் மீன் உயிர் விட்டது. எனவே, உடல் நலத்திற்கு உணவு கட்டுப்பாடு வேண்டும். அப்படி கட்டுப்பாடு இல்லாத மனிதன் துன்பத்தை அனுபவித்து நோய் வாய்ப்பட்டு இறக்க நேரும். என நம்மை எச்சரிப்பதற்கே இவ்வுவமை கூறப்பட்டு இருக்கிறது .மெய்யடக்கம் :-பெண் யானை மீது கொண்ட சுகத்திற்காக ஆண் யானை குழியில் விழுந்து பிடிக்கப்படும்.ஆண் யானையின் தந்தத்திற்காகவே அவை இவ்வாறு பிடிக்கப் படுகிறது. இதுபோல சில பெண்கள் பணத்திற்காகவே சில ஆடவரை…
இந்தப் பிரபஞ்சம் இன்பமயமாக மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்!” “நல்லவைகள் மட்டும் நடந்தால் எத்தனை சந்தோசங்களை அனுபவிக்கலாம்!” ஏன் தான் இத்தனை துன்பங்களை கொடுக்கிறானோ! இறைவன் என அழைத்துக் கொள்ளும் வார்த்தைகள் தான் அடிக்கடி எல்லோரிடம் கேட்போம். அவர்கள் ஒன்றை மறந்து விட்டார்கள். அதனால், தான் இந்த வார்த்தை அவர்கள் வாய் உச்சரிக்கிறது. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. இறைவனுக்கு ஈடு இறைவன்தான் அவரது பாத கமலங்களை பக்தியுடன் நினைப்பவருக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு மனக்கவலையை மாற்றுவது கடினம். என்பது பொருளாகும். ஒருவன் முன் வகை வகையாக இனிப்பு வைத்திருக்கிறார்கள். எல்லாமே அவருக்கு பிடித்தமான இனிப்புகள். பார்த்தவுடன் முகத்தில் சந்தோசம். அதே சந்தோசத்துடன் எடுத்து சாப்பிட ஆரம்பிக்கிறார்.சிறிது சாப்பிட்டவுடன் நாக்கு திகட்டுகிறது.இருந்தாலும் இனிப்பின் மேல் உள்ள ஆசையால் இன்னும் எடுத்து சாப்பிடுகிறார். இப்போது ஒரு வகையான குமட்டல் வருகிறது. ஆசை இன்னும் விடவில்லை. இன்னும் சிறிது எடுத்து சாப்பிடுகிறார்.…
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். பக்தர்களின் மனம் என்னும் மலரில் வீற்றிருக்கும் இறைவனின் திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர்கள். இந்த உலகில் நீண்ட ஆயுளுடன் வாழ்வார்கள். இறைவனை ஏன் வணங்க வேண்டும்? வணங்காமல் வாழ முடியாதா? என கேட்பவர்கள் இந்த பிரபஞ்சத்தில் உண்டு. ஏன் வணங்க வேண்டும்? என எண்ணிப் பார்த்தால் விளங்கும். இந்த உடல் ,உயிர், மண், விண் ,சூரிய ,சந்திர, வாயு மண்டலங்கள் என இந்த பூமியில் நாம் வாழ்வதற்காக எல்லாம் தந்திருக்கும் இறைவனுக்கு நாம் என்ன தரப் போகிறோம்? பொன்னையா! பொருளையா! யாதும் உடையவன் இறைவன். அவன் பொன்னையும், பொருளையும் எதிர்பார்க்க மாட்டான். மெய் அன்பை மட்டுமே விரும்புபவன் இறைவன். நாம் நினைக்கிறோம் இறைவன் மனிதனை மட்டும் தானே படைத்தான். நாம் தானே நாகரிகமாக வாழ்வதற்கான பொருள்களை கண்டுபிடித்தோம் என எண்ணலாம். கண்டு பிடிப்பதற்கான மூலப்பொருள் இறைவன் படைத்ததாக தானே இருக்கிறது. அந்த மூலம்…
இறைவனிடத்தில் ஈடுபாடும், தேவர்களை வழிபடுவதும், பெற்றோர் முதலிய பெரியோர்களுக்கு செய்யும் பணிவிடைகள். தானம், தர்மம், தவம் ,வேள்விகளில் கலந்து கொள்வது ஆசிரமம் வாழ்விற்கு ஏற்றபடி தம்மை எளிமையாக்கி கொள்வது. மனத்தூய்மையுடன் கூடிய தைரியத்தால் தன்னை அடக்கி சப்தம் போன்ற இந்திரிய விசயங்களைத் துறக்க வேண்டும். தனிமையில் இருந்து, சிறிதளவேஉண்டு ,பேச்சையும் மனதையும் அடக்கி. எப்போதும் தியானம், யோகத்தில் ஈடுபட்டு வைராக்கிய வாழ்வை மேற்கொண்டு… அகங்காரம், மமகாரம், கர்வம், காமம், குரோதம், அபிமானம் போன்றவற்றை எல்லாம் விட்டொழித்து ,சாந்தநிலையை அடைந்தவன் தான் பிரம்மத்தை அடையும் தகுதியை பெறுகிறான். “பிரம்மமாகவே” ஆனவன் உள்ளம் தெளிந்தவனாகி விடுகிறான். அவன் வருத்தம் அடைவதில்லை, ஆசைப்படுவதும் இல்லை, அனைத்து உயிரையும் சமமாய் பாவிக்க ஆரம்பிப்பான். அவனே, இறைவனின் பக்தியைப் பெறுகிறான். “இறைவன் யார்?” என்றும் இறைவன் செயல்பாடும், முழுமையாக பக்தியினால் அறிந்து கொள்வான். உள்ளதை உள்ளபடி அறியும் இறைவனுல் கலந்து விடுவான். இறைவனே கதியென சரணம் அடைந்தவனை நிர்கதியாக…
தியான ‘பயிற்சியால் துன்பத்தை வெல்லும் சக்தியை பெற்றதனால் நம் மனம் ஐம்புலன்களையும் அடக்கும் ஆற்றலைப் பெற்று விடும். அதற்கு ஒரு கதை கூட கூறுவார்கள்… ஒரு சீடர் தவம் செய்தாராம் அவர் இருந்த வழியாக ஒரு தாசி சென்றாளாம் அவளைப் பார்த்த கண்கள் அவள் அந்த தெருமுனை செல்லும் வரை பின்னால் சென்றதாம். அவள் சென்ற பின் நாம் தவறு செய்து விட்டோம். என எண்ணி மறுநாள் கண்களை மூடிக்கொண்டாராம். மறுநாள் அந்த தாசி ஆச்சீடனை கடக்கும் போது நறுமண வாசனை உடன் மலர்களின் வாசனையும் போட்டி போட்டுக் கொண்டு அவர் நாசியில் சென்று அவள் தெரு முனையை கடக்கும் வரை நாசி அவள் பின்னால் சென்று வாசம் பிடித்ததாம். அவள் சென்ற பின் மறுபடியும் தவறு செய்ததே உணர்ந்தவர். மறுநாள் கண்களை மூடிக்கொண்டு மூக்கை விரல்களால் பிடித்துக் கொண்டாராம். மறுநாள் தாசி சீடரை கடந்து சென்றாளாம் அவள் அது அணிந்திருந்த…
